அரசாங்கத்துடன் இணைந்து நெல்சன் மண்டேலாவிற்கு ஒப்பாக போற்றி துதி பாடியிருந்தால் பல மடங்கு நிதி கிடைத்திருக்கும்! (IBC Tamil)
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று மாலை 5.45 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இடம் பெற்றது.இதன் போது கூட்டமைப்பினர் கொள்கை வழியில் பயணிக்காது சுய நல வழியை பின் பற்றப் போய் தமிழ் மக்களின் முதல் அணி என்கின்ற அந்தஸ்தை இழந்தமையினால் தான், நாம் மாற்று அணி ஆகியுள்ளோம் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
https://www.ibctamil.com/srilanka/80/147708