அரசுக்கு கால அவகாசம் கோரும் சுமந்திரனின் வரைபை விக்னேஸ்வரன் நிராகரிப்பு (சமகளம்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அங்கத்தவர்களுக்கும் தமிழ் கட்சிகள் கூட்டாக அனுப்புவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வரைவு செய்து அனுப்பிய கடிதம் இலங்கை அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் சபையில் மீண்டும் கால அவகாசத்தை பெற்றுக்கொடுப்பதற்கு வழிகோலும் வகையில் அமைவதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.