• August 7, 2020
  • TMK Media

அறிவித்தபடிதனதுசொத்துவிபரங்களைபகிரங்கப்படுத்தினார் – நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன

Justice C.V.Wigneswaran
Founder & Secretary General, TamizhMakkalKootanii
Former Chief Minister, Northern Province
No.232, Temple Road, Jaffna
mail – cvwoffice18@gmail.com
TP – 0212214295

அறிவித்தபடிதனதுசொத்துவிபரங்களைபகிரங்கப்படுத்தினார்-நீதியரசர்க.வி.விக்னேஸ்வரன்

தேர்தலுக்குமுன்னர் தனதுசொத்துவிபரங்களைபொதுமக்களுக்குஅறிவிப்பதாக கூறியிருந்தபடிதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடமாகாணமுன்னாள் முதலமைச்சருமானநீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அவற்றைப் பகிரங்கப்படுத்தி இருக்கிறார்.
இதன்படி,விக்னேஸ்வரனின் உள்ளூர் வங்கிக்கணக்குகளில் மொத்தமாகரூபா 4,424,724.24 பணமும் வெளிநாட்டுவங்கிக்கணக்குகளில் 9,618.98 பவுண்டுகள் பணமும் 1,210.33 டொலர்கள் பணமும் இருக்கின்றன. இவைதவிர,யாழ்ப்பாணத்திலுள்ளசண்டிலிப்பாய் இரட்டையபுலத்தில் ஒருதுண்டுகாணியும் கொழும்பு 7இல் அவர் வசிக்கும் வீட்டின் மீதுசீவியஉரித்தும்அவருக்கு இருக்கின்றன. இவை தவிரஅவருக்குவாகனங்களோவேறுஎந்தசொத்துக்களுமோ இல்லை.
நீதிபதியாகவும்,நீதியரசராகவும் பணிபுரிந்தகாலத்தில் விக்னேஸ்வரன் அவர்கள் உழைத்தபணமும் முதலமைச்சராகப்பணிஆற்றியகாலத்தில் அவருக்குக்கிடைத்தவேதனத்தில் ஏற்பட்டசேமிப்பும் இவற்றுள் அடங்கும்.
இதேவேளை,தமிழ் மக்கள் தேசிய கூட்டணிவேட்பாளர்களின் சொத்துவிபரங்கள் யாவும் சேகரிக்கப்பட்டு 232,கோவில் வீதி,யாழ்ப்பாணத்தில் உள்ளதமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளனஎன்றும் இவற்றைபார்க்கவிரும்புபவர்கள் தேர்தலின் பின்னர் முன் அனுமதியுடன் அவற்றைபார்வையிடலாம் என்றும் பாதுகாப்புகாரணங்களுக்காகதேர்தலில் வெற்றிபெறுபவர்களின் சொத்துவிபரங்கள் மாத்திரமேபகிரங்கப்படுத்தப்படும் என்றும் சிலதினங்களுக்குமுன்னர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணிஅறிவித்திருந்தபோதிலும் நீதியரசர் விக்னேஸ்வரன் தனதுசொத்துவிபரங்களைதேர்தலுக்குமுன்னரேயேமக்களுக்குபகிரங்கப்படுத்தியிருக்கிறார்.
தேர்தலில் வெற்றிபெறும் ஒருவர் வேட்பாளராக இருந்தபோதுஎவ்வளவுசொத்துக்களைவைத்திருந்தார் என்பதைஒருவர் அறிவதன் மூலம்,அவர் தனதுபாராளுமன்றஉறுப்பினர் பதவிக்காலத்தில் எவ்வளவுசொத்துக்களைசேர்த்தார் என்பதையும் பதவித் துஸ்பிரயோகம் அல்லதுமுறைகேடுகள் மூலம் சொத்துக்களைசேகரித்தாராஎன்பதையும் அறியமுடியும்.
இதேசமயம்,தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் கூட்டுகட்சிகள் செய்துகொண்டுள்ளபுரிந்துணர்வுஉடன்படிக்கையின்படி,பாராளுமன்றத்துக்குதெரிவுசெய்யப்படும் வேட்பாளர்கள் தமதுமாதாந்தபடிகளின் 8 சதவீதத்தினைபொதுமக்களின் நல்வாழ்வுதிட்டங்களுக்காக இலங்கையில் பதிவுசெய்யப்பட்டஅவர்கள் விரும்பியஒருஅறக்கட்டளைநிதியத்துக்குமாதாந்தம் வழங்கவேண்டும். அதுதமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்புநிதியமாகவும் அமையலாம். ஆகக்குறைந்தது 2 சதவீதத்தினைதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுவானசெலவீனங்களுக்காகவும் அவர்கள் வழங்கவேண்டும்.

ஊடகப் பிரிவு
தமிழ் மக்கள் கூட்டணி
31.07.2020