• October 4, 2020
  • TMK Media

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் தமிழர்களை ஒரு தரப்பாக்காதது இந்தியாவின் இராஜதந்திர தோல்வி: விக்னேஸ்வரன் எம்.பி

இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு சமஷ்டி  தீர்வினை இந்தியாவின் உதவியுடன் வென்றெடுப்பதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கமுடியாது என்றும் ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் தமிழர்களை ஒரு தரப்பாக்காதது இந்தியாவின் இராஜதந்திர தோல்வி; இந்தியாவின் தேசிய பாதுகாப்பை இலங்கைத் தமிழர்களே உத்தரவாதப்படுத்துவார்கள்: விக்னேஸ்வரன் எம்.பி!