• July 23, 2020
  • TMK Media

இன்றுநிலவும் சூழ்நிலையும் 1983ல் இருந்தசூழ்நிலையும் ஒரேவிதமாகவேகாணப்படுகின்றன -நீதியரசர் விக்னேஸ்வரன் அறிக்கை – ஜுலை 23ந் திகதி

இலங்கைதீவின் வரலாற்றில் தமிழர்களின் செங்குருதிக் கறைபடிந்தநாட்களில் 1983 ஜுலை 23ஆம் நாள் முக்கியமானது. புத்தரின் போதனைகளைகடைப்பிடிப்பவர்கள் என்று கூறிக் கொள்வோர் அன்றுதென்னிலங்கையில் ஒருகையில் வாக்காளர் பட்டியலையும் மறுகையில் கத்திகள்,கோடரிகள்,வாள்கள் என்பவற்றுடன் வீடுவீடாகச் சென்றுதமிழர்களைவெட்டியும் எரித்தும் கொன்றொழித்தநாள். தமிழர்களின் உடைமைகளைத்தீயிட்டும் சூறையாடியும் சிங்களபௌத்தபேரினவாதம் தாண்டவமாடவழிவிடப்பட்டநாள். விடுதலைவீரன் குட்டிமணிதனக்கு தூக்குத் தண்டனைவழங்கப்பட்டால் தனதுகண்களைத்தானம் அளிக்கும்படியும் அப்போதுமலரப்போகும் தமிழீழத்தைத்தனதுகண்கள் காணும் என்று கூறியதற்காகவெலிக்கடைச்சிறைச்சாலையில் சிங்களக்காடையர்களால் அவரின் கண்கள் பிடுங்கப்பட்டநாள். குட்டிமணியுடன் தங்கதுரைஉட்படசிறையிலிருந்த 53 அரசியற் கைதிகள் கோடூரமாகக்கொன்றொழிக்கப்பட்டநாள். தமிழ் மக்களுக்கெதிராகநிறுவனப்படுத்தப்பட்டதொடர் இனக்கலவரங்களான 1956,1958, 1977, 1981 வன்முறைகளின் உச்சகட்டமாக இனஅழிப்புநடைபெற்ற ஏழு நாட்களின் தொடக்கநாள். 1983ம் ஆண்டுஜுலைக் கலவரத்தில்வன்முறைகளில் சுமார் 3000 க்கும் மேற்பட்டதமிழர்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டனர். தெற்கில் எஞ்சியிருந்ததமிழர்கள் வடக்கு -கிழக்குதமிழர் தாயகத்துக்குவிரட்டப்பட்டார்கள்.நான் அப்போதுமல்லாகம் மாவட்டநீதிபதியாகவும் நீதிவானாகவும் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். அப்போதுமானிப்பாய் போன்ற இடங்கள் ஊடாக இராணுவவாகனங்களில் வந்தோர் வீதியில் கண்டமக்களைவகைதொகையில்லாமல் சுட்டுச் சென்றதுசம்பந்தமாகமரணவிசாரணைகள் நடத்தஎவரும் முன்வராதநிலையில் நான் நடத்தியமை இப்போதும் மனதில் ஆழப்பதிந்திருக்கின்றன. அவ்வாறுநடத்தியதால் ஜனாதிபதி ஜே.ஆரின் சகோதரரான ஜனாதிபதிசட்டத்தரணிர்.று.ஜயவர்தனஅவர்களின் கோபத்திற்குஆளானேன்.
இந்தஉச்சகட்டமிலேச்சத்தனமானஅடக்குமுறைதான் எமது இளைஞர்களை முழு அளவிலானஆயுதப்போராட்டத்துக்குநிர்ப்பந்தித்துவடக்குகிழக்கில் ஒருநிழல் அரசைஉருவாக்குவதற்குவழிகோலியது. பல்லாயிரக்கணக்கானஎமதுமக்களை இனப்படுகொலைக்குஉட்படுத்திஇந்தநிழல் அரசும் 2009ம் ஆண்டுமுடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இவை எல்லாமேசிங்களபௌத்தபேரினவாதமேலாண்மையைநாடுமுழுவதும் நிலைநிறுத்துவதற்காகதொடர்ந்துவந்;து அரசாங்கங்களால் காலம் காலமாகநன்குதிட்டமிட்டுஏற்படுத்தப்பட்ட இனப்படுகொலைநிகழ்வுகளாகும்.
இதனைவடமாகாணசபையின் ஊடாகஎனக்குக்கிடைத்தசந்தர்ப்பத்தைப்பயன்படுத்திஒரு இனவழிப்புஆவணமாகஉருவாக்கிசர்வதேசவிசாரணைக்கானஎமதுபோராட்டத்தைப்பலப்படுத்தியுள்ளேன்.
இன்றுநிலவும் சூழ்நிலையும் 1983ல் இருந்தசூழ்நிலையும் ஒரேவிதமாகவேகாணப்படுகின்றன. 1978ம் ஆண்டுகொண்டுவரப்பட்டநிறைவேற்று ஜனாதிபதிமுறையூடாகசிங்களபௌத்தபேரினவாதம் திரட்சிபெற்றுகாணப்பட்டமையேஅன்றைய இனக்கலவரத்துக்குவழிகோலியது. அதேபோல, இன்றும் அதேநிறைவேற்று ஜனாதிபதிதெரிவுக்காககடந்தவருடம் நடைபெற்றதேர்தலின் ஊடாகசிங்களபௌத்தபேரினவாதம் மீண்டும் திரட்சிபெற்றுக் காணப்படுகின்றது. சிங்களபௌத்ததுறவிகள் எதற்கெடுத்தாலும் இரத்த ஆறு ஓடும் என்றுஅச்சுறுத்துவதுமீண்டும் எம்மீதோஅல்லதுஎமது முஸ்லிம் சகோதரர்களின் மீதோஎவ்வேளையும் ஒருதாக்குதல் நடைபெறலாம் என்பதையேகட்டியம் கூறிநிற்கின்றது.
எனதருமைமக்களே! இலங்கைஅரசுடன் பேசுவதாலோஅல்லது இலங்கைக்குள் பேசுவதாலோஎமக்கானஉரிமையைநாம் என்றுமேபெற்றுவிடமுடியாதுஎன்பதையேவரலாறுஎமக்கு இடித்துரைக்கின்றது. எமதுமக்களுக்குஎதிராகமேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கானசர்வதேசவிசாரணைஒன்றின் மூலமானபரிகாரநீதிக்கூடாகவேஎமதுஉரிமைகளைநாம் அடையமுடியும். இதற்குநேர்மை,விலைபோகாத்தலைமை,அர்ப்பணிப்புஆகியவற்றுடன் நிறுவனரீதியானசெயற்பாடுகளேஅவசியமாக இருக்கின்றன. இதற்கானஒருஅடித்தளத்தை இடுவதுஎமதுஎதிர்காலஅரசியல் செயற்பாடுகளில் முக்கியமானதாக இருக்கும். இதற்கானமுழுமையானஒத்துழைப்பைநிலத்திலும் புலத்திலும் உள்ளமக்களிடம் நாம் வேண்டுகின்றோம்.
இன்றைய இந்தநாளில் 1983 ஆம் ஆண்டுகலவரத்தில் படுகொலைசெய்யப்பட்டஅனைத்துமக்களுக்கும் எமதுஅஞ்சலிகளைசெலுத்துவதுடன் எமதுஎதிர்காலசந்ததியினர் வளமான,பாதுகாப்பானவடக்கு -கிழக்குதமிழர் தாயகத்தில் தம்மைத்தாமேஆளும் உரிமைகளுடன் வாழவழிசெய்யும்வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றஇன்றுஉறுதிபூணுவோமாக.
நன்றி
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்,வடமாகாணம்
இணைத்தலைவர்,தமிழ் மக்கள் பேரவை
செயலாளர் நாயகம்,தமிழ் மக்கள் கூட்டணி
தலைவர்,தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி