இப்பொழுது இருக்கும் இளைஞர்களுக்கு போரினுடைய வலிகள், துன்பங்கள் தெரியாது – நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் (சமகளம்)
எமது உரிமைக்காக போராடிய இளைஞர்கள் மடிந்த காலம் போய் வெறும் களியாட்ட நிகழ்வுகளிலே எமது இளைஞர்களுடைய மனம் லயிக்கக் கூடியதான சூழலை ஏற்படுத்துகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் அரசாங்கத்தின் கையாற்களாக மாறினார்கள். அது எதற்காக என்றால் வட கிழக்கு மாகாண தமிழ் மக்களினுடைய மனதை மெல்ல மெல்லமாக மாற்றி உரிமைகளை விட்டு சலுகைகளை நோக்கி செல்ல வைப்பதற்கான சதித்திட்டத்தின் விளைவுதான் இந்த தேர்தலில் ஒரு தீர்மானம் மக்களால் கொடுக்கப்பட்டிருக்கின்றது என நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.