எத்தகைய அச்சுறுத்தல்கள் மற்றும் அரசியல் மிரட்டல்களை கடந்தும் என்னுடைய குரல் உங்களுக்காக ஒலிக்கும் – நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
கடமையை செய் பலனை எதிர்பாராதே” என்றது கீதை. ஆனால் தங்கள் கடமையை நிறைவேற்றாமல், காலத்திற்கு காலம் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என எமது அரசியல் தலைமைகள் இருந்தமையினால்தான் மக்களுக்கு எமது அரசியல் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழ் தேசியத்தின் எழுச்சிக்கான பாதையைத் திறந்திருக்கின்றது என்றே நம்புகின்றேன்