எமது பிரதேச வாழ் மக்களைஅங்கிருந்துபலாத்காரமாக அப்புறப்படுத்துவது இனப்படுகொலையின் அம்சமாகும். – கிளிநொச்சியில் விக்னேஸ்வரன் (சமகளம்)
யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதிகிளிநொச்சிமாவட்டத்தையும் உள்ளடக்கியதுஎன்பதைநீங்கள் அறிவீர்கள். எனவேஎமது இரு மாவட்டங்களும் இந்தத் தேர்தலில் ஒருமித்தேபயணம் செய்கின்றோம். தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்றஉறுப்பினர்கள் யாழ்ப்பாணமாவட்டம் மற்றும் கிளிநொச்சிமாவட்டமக்களின் பிரதிநிதிகள் ஆவார்கள். ஆகவேமிகவிரிவானபுலத்தையும் பரந்தஒருமக்கட் கூட்டத்தையும் உள்ளடக்கியேஅவர்களின் செயற்பாடுகள் அமையவேண்டும்.