கடந்த 5 வருட காலப் பகுதியில கூட்டமைப்பின் செயற்பாடுகள் தமிழ்மக்களை படுகுழியில் தள்ளிவிடுவதற்கு ஒப்பானதாக அமைந்துள்ளது – உடுவிலில் நீதியரசர் (சமகளம்)
2013ம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் வீட்டு சின்னத்தின் கீழ்மாகாணசபைத் தேர்தலில் போட் டியிட்டு அமோக வாக்குகளைப் பெற்று முதலமைசராக தெரிவு செய்யப்பட்ட நான் மீண்டும் 2020ல் நடைபெறவிருக்கின்றபாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற புதியகட்சியின் கீழ் மீன் சின்னத்தில் போட ;டியிடுவதையிட்டு நீங்கள் சில வேளைகளில் குழப்பமடையலாம் என உடுவிலில் நடந்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கருத்துப் பரப்புரைக் கூட்டத்தில் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.