குருபரனின் ராஜினாமா இராணுவ நலன்களின் மேல்நிலையையும் இராணுவ மேலாதிக்கத்தையும் காட்டுகிறது : விக்னேஸ்வரன் கடும் அதிருப்தி (சமகளம்)
பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவில் நிறுவனங்களின் சுயாதீன தன்மை இராணுவ நலன்களுக்கு மேலானது அல்ல என்ற நிலையே இந்த நாட்டில் காணப்படுகின்றமையை யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குருபரனின் ராஜினாமா எடுத்துக்காட்டுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் கவலையும் விமர்சனமும் தெரிவித்துள்ளார்.