• July 27, 2020
  • TMK Media

கொள்கையில் பற்று உள்ளவர்கள் சுயநலனுக்காக வழி தவற மாட்டார்கள் – நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் (சமகளம்)

எமது தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக் கட்சி ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட கட்சியாக வரையறை செய்யப்பட்ட கொள்கையுடன் செயற்படுகின்றது.கொள்கையில் பற்று உள்ளவர்கள் சில விடயங்களை செய்ய மாட்டார்கள். சுயநலனுக்காக வழி தவற மாட்டார்கள்.அவ்வாறு இல்லாமல் சுய நன்மைக்காக கூட்டமைப்பு பாதை மாறியதால் தான் எமது தேசிய கூட்டணி உருவாகியது.எனவே நாங்கள் பிரிய வேண்டி வந்தமைக்கு காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சுயநலம் சார்ந்த கொள்கைகள் நடவடிக்கைகள் தான்.எமக்கு பின்பும் இந்த கட்சி நீடித்து நிலைத்து நிற்கும் என்று எதிர் பார்க்கின்றோம். தமிழரசுக் கட்சியினரின் ஆரம்ப கால நேர்வழிப் போக்கும் வெளிப்படைத்தன்மையும் தற்போது அற்றுப் போய்விட்டது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

கொள்கையில் பற்று உள்ளவர்கள் சுயநலனுக்காக வழி தவற மாட்டார்கள் – நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்