“தமிழர்கள் இஸ்ரேலியர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர். எம்மாலும் முடியும்”- ஊடக அமைய கேள்வி பதிலில் விக்னேஸ்வரன் (சமகளம்)
தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கு தெளிவான ஒரு மாற்று திட்டத்தை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கொண்டிருக்கின்றது என்று தெரிவித்துள்ள அதன் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் தமிழ் கூட்டமைப்பு செயற்பட்டது போல தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர்மானிக்கும் வகையில் தாம் செயற்படப்போவதில்லை என்றும் உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்களை ஒன்றிணைத்து நிறுவன ரீதியான, அறிவின் அடிப்படையிலான, உபாயங்களின் அடிப்படையிலான, காத்திரமான பாராளுமன்ற செயற்பாடுகளின் ஊடாக மேற்கொள்வதே தமது திட்டம் என்று தெரிவித்துள்ளார்.