தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும்வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – தேர்தலுக்குப் பின்னர் நீதியரசர் கருத்து (சமகளம்)
பாராளுமன்றத்துக்கு என்னைத் தெரிவுசெய்த வாக்காளர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள். உங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று கூறிக்கொள்கின்றேன். அதேபோல, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் மற்றும் அனைத்து வேட்பாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.