தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு உரிமைகளை வழங்கினாலே இந்த நாட்டுக்கு சுபீட்சம் கிடைக்கும் : பாராளுமன்ற முதல் அமர்வில் விக்னேஸ்வரன் (சமகளம்)
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தேசம் என்ற அடிப்படையில் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும் அவர்களின் உள்ளார்ந்த உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு வரலாறு பற்றிய தவறான கண்ணோட்டங்கள் களையப்பட்டால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் இந்த நாட்டில் உதயமாகும் என்று யாழ்- கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.