தமிழ் மக்களின் மனமறிந்த அரசியல் பிரதிநிதிகள் விரைவில் நாடாளுமன்றம் வருகிறார்கள்: மகிந்தவிற்கு சூடு வைத்தார் விக்னேஸ்வரன்! (தமிழ் பக்கம் )
தமிழ் மக்கள் வெறும் பொருளாதார அபிவிருத்தியையே நாடி நிற்கின்றார்கள் என்று பிரதமர் கூறுவது எமது வழி வகையற்ற பாதிக்கப்பட்ட மக்களை எலும்புத் துண்டுகளைக் கொடுத்து தன்பக்கம் ஈர்க்க முடியும் என்று அவர் எண்ணுவதாலேயே. எமது அரசியல்வாதிகள் பலர் பாதை மாறிச் செல்வது உண்மையே. ஆனால் எமது மக்கள் தமது உரிமைகள் பற்றியும் வருங்காலம் பற்றியும் போதிய விழிப்புடன் தான் இருக்கின்றார்கள். மக்களின் மனம் அறிந்த அரசியல்வாதிகள் வெகுவிரைவில் பாராளுமன்றத்தை அலங்கரிக்க வர இருக்கின்றார்கள் என்பதை அவருக்குக் கூறிவைக்கின்றேன்.