• November 27, 2020
  • TMK Media

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள் ஒவ்வொருவரும் எம் மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பர் – நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன்

தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாளில் தமிழ் மக்கள் இல்லங்களில் விளக்கேற்றி உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.இந்நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள் ஒவ்வொருவரும் எம் மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பர்.தனது வாசஸ்தலத்தில் விடுதலை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)