தமிழ் மக்கள் கூட்டணி புதிய அங்கத்தவர்களுக்கான அறிமுக கூட்டம்
யாழ் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியில் புதிதாக இணைந்துகொண்ட உறுப்பினர்களுக்கான அறிமுக கூட்டம் நல்லூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் செயலாளர் நாயகம் நீதியரசர் புதிய உறுப்பினர்களை வரவேற்று நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சுமார் 50 க்கும் அதிகமான புதிய உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
விரைவாக மாகாண சபை தேர்தலும் வரும் என்பதால் நாம் ஒரே வேகத்துடன் செயற்பட்டு இரண்டு மாகாண சபைகளையும் கைப்பற்றுவதற்கு இப்பொழுதே தயாராகவேண்டும் என்றும் அதிர்தல் முடிவடைந்த பின்னர் செயற்பாடுகளின் அடிப்படையில் பதவிகள் ததீர்மானிக்கப்படும் என்றும் இந்த கூட்டத்தில் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.