தமிழ் மக்கள் சமஷ்டி அடிப்படையில் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு இந்தியாவின் உதவியும் ஒத்தாசையும் எமக்கு மிகவும் அவசியம் – நீதியரசர் விக்னேஸ்வரன் (சமகளம்)
இலங்கையில் தமிழ் மக்கள் சமஷ்டி அடிப்படையில் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு இந்தியாவின் உதவியும் ஒத்தாசையும் எமக்கு மிகவும் அவசியம். இதற்கு இந்தியாவுடனான தமிழ் மக்களின் சுமூக உறவு அவசியம். இந்தியாவுடன் நாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும். ஆனால், இந்தியாவுடனான எமது அணுகுமுறை தனி ஒரு நபர் சார்ந்தோ அல்லது தனி ஒரு கட்சி சார்ந்தோ இருக்க முடியாது. இருக்கக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வாராந்த பத்திரிகையாளர் கேள்வி பதிலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.