தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கருத்துப் பரப்புரை பொதுக் கூட்டம் – மன்னார் 26.07.2020
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
கருத்துப் பரப்புரைபொதுக் கூட்டம்
பொதுவிளையாட்டுமைதானம்,நகரசபை,மன்னார்
26.07.2020 அன்றுமாலை03.30மணிக்கு
தேசியக் கூட்டணியின் தலைவருரை
குரூர் ப்ரம்மா………………….
அன்பார்ந்தவன்னிமாவட்டமன்னார் வாழ் மக்களே!
இன்றுமீண்டும் ஒருதடவைஉங்கள் மண்ணில் நின்றுகொண்டுஉரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன். 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சிலதினங்கள் மட்டுமேஉள்ளநிலையில் உங்கள் அனைவரையும் தவறாதுமீன் சின்னத்திற்குவாக்கிடுமாறுகேட்டுக் கொள்கின்றேன். அத்துடன் வன்னிமாவட்டவேட்பாளர்களில் உங்களுக்குபிடித்தமான மூவருக்குஉங்கள் விருப்புவாக்குகளைஅளித்துஎமதுதமிழ் தேசியக் கூட்டணியைஒருபலம் வாய்ந்தகட்சியாகபாராளுமன்றத்திற்குஅனுப்பிவைக்குமாறுகேட்டுக் கொள்கின்றேன்.
இப்போதுஎமது கூட்டணியைஒருமாற்றணிஎன்றுஅடையாளம் காணத்தொடங்கிவிட்டார்கள். இதுகுறித்துஒருதெளிவானவிளக்கத்தைதரவேண்டும். மாற்றுஅணிஎன்பதுகொள்கைவழியில் வேறானகருத்துக்களைக் கொண்டஒருகட்சிஎனப்பொருள்படாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருசிலர் கட்சியின் வழியில் நின்றுமுடிவுகளைஎடுக்காதுதமதுவிருப்புவெறுப்புக்களுக்குஅமைவாகதமிழ் இனத்தின் தலைவிதியைதீர்மானிப்பவர்களாகசெயற்படமுனைகின்றார்கள். ஆனால் எமதுகட்சிஅதாவதுதமிழ் மக்கள் தேசியக்கூட்டணிதனித்துமுடிவுகளைஎடுக்கமுடியாதென்றும் நிறுவனமயப்படுத்தப்பட்டசெயற்பாடுகளினூடாகஆராய்ந்தேமுடிவுகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவரையறைசெய்யப்பட்டுள்ளது.அதுவேஎமதுபாதை.
உதாரணத்திற்குஎமதுகட்சியில் அல்லது கூட்டணியில் இணைந்துள்ள ஏனைய வேட்பாளர்களும் ஒத்தகருத்துக்களைஉடையவர்களாகஇருக்கின்றகாரணத்தினால் தான் அவர்கள் தெரிவுசெய்யப்படும் பட்சத்தில் தமதுமாதாந்தகொடுப்பனவில் ஒருகுறிப்பிட்டவீதத்தைமக்கள் மேம்பாட்டிற்கெனஒதுக்கஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
கொள்கையளவில் பெரியவேற்றுமையில்லாதநிலையில் புதிய கூட்டணிஉருவாக்கத்தின் தேவைஎன்னஎன்றுநீங்கள் எண்ணக்கூடும். இதற்குப் பதில் அளிக்கதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பம் பற்றிமுதலில் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். தென்னிலங்கைசிங்களமேலாதிக்கஅரசுக்குஎதிராகவும் தமிழ் மக்கள் மீதுகட்டவிழ்த்துவிடப்பட்டஅரசியல் அடக்குமுறைகளுக்குஎதிராகவும்ஒட்டுமொத்ததமிழ் மக்களும் ஒன்றுதிரண்டுதமதுஎதிர்ப்புக்களைத்தெரிவிக்கவேண்டும்,அதன் மூலம் இலங்கைஅரசிற்குஎதிராகசர்வதேசஅரங்கில் எமதுபிரச்சனைகளைஎடுத்துக் கூறவும் வலுவானதொருஎதிர்ப்பைகாண்பிக்கவும் வேண்டும் என்ற இன்னோரன்னபலகாரணங்களின் அடிப்படையிலேயேகூட்டமைப்புஉருவாக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஐந்துகட்சிகள் சேர்ந்துஒரு கூட்டமைப்பாகச்செயற்படமுன் வந்தபோதும்.தமிழரசுக் கட்சியின் தனிமேலாதிக்கமுடிவுகளேமுன்னிலைப்படுத்தப்பட்டது. அதனால் தமிழரசுக் கட்சிhனதுதனியேமேற்கொண்டதீர்மானங்கள்,நடவடிக்கைகள் ஆகியன ஏனைய கட்சிகளைமெல்லமெல்ல தூர நகரவைத்தன. ஐந்துகட்சிகளுடனான கூட்டு இப்போது 2½கட்சிகளாககுறைந்திருக்கின்றது. அதாவதுநண்பர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தற்போதுஅரைக்கட்சியின் தலைவர். எனவேதமிழ்த் தேசியக் கூட்டமைப்புகொள்கைவழியில் நேராகப்பயணிக்கவில்லைஎன்பதனால்த்தான் அதுபிளவுபட்டது. ஆகவேகொள்கையளவில் பெரியவேற்றுமைகள் இல்லாவிடினும் கொள்கைப் பாதையில் இருந்துவிலகித் தான்தோன்றித்தனமாக இலங்கைதமிழரசுக் கட்சிபயணிக்கத் தொடங்கியமையே கூட்டமைப்புக்குள் பிரிவுகளைஏற்படுத்தியது. பிரிந்தவர்கள் தற்போதுசேர்ந்துகொள்கைவழியில் நாம் சேர்ந்துநடப்போம் என்றுசிந்தித்ததால்;த்தான் தமிழ் மக்கள் தேசிய கூட்டணிஉருவாகியது.
6 வருடங்களுக்குமுன்னர் நான் முதலமைச்சராகப் பதவிஏற்று,யுத்தம் நடைபெற்றபகுதிகளைப் பார்வையிட்டு,பொதுமக்களைச் சந்தித்து,எமதுமக்களுக்குஎதிராகநடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதைப் பகுத்தறிந்துகொண்டபோதுதான் எத்தகையஒருபெரும் பொறுப்புஎம் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளதுஎன்பதைநான் உணர்ந்துகொண்டேன்.அந்தக் கடப்பாட்டைஉணர்ந்து கூட்டமைப்புநடக்கமுற்படவில்லைஎன்பதுஎனக்குமனவருத்தத்தைத் தந்தது. எத்தனைஇடர் வந்தாலும் எமதுஉரிமைகள் விடயத்தில் எந்தவிதமானவிட்டுக்கொடுப்புக்களையோஅல்லதுகாட்டிக் கொடுப்புக்களையோநாம்செய்துவிடக்கூடாதுஎன்பதில் கவனமாகஇருந்தேன். அதனால்த் தான்,கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோதிலும் இனப்படுகொலைதீர்மானத்தைகைவிடவோஅல்லதுபொறுப்புக்கூறல் விடயத்தில் விட்டுக்கொடுப்புக்களைசெய்யவோநான் தயாராகஇருக்கவில்லை. உண்மையில் தமிழ்த் தேசியகூட்டமைப்பினர் வெள்ளம் பெருக்கெடுத்துஓடும் போதுநீரோபிடில் வாசித்ததுபோல்த்தான் நடந்துகொண்டிருந்தார்கள். பிரச்சனைகளைஅப்படியேவிட்டுவிட்டுதமதுசுயலாபசிந்தனைகளில் இலயித்திருந்தார்கள்.கொள்கைகள் என்பனவெறும் வாய்ப்பேச்சுப் பொருளாகமாறியிருந்தன. நானும் சந்தர்ப்பவாதியாகமாறிசிங்களமக்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் ஏற்கனவேஇருந்ததொடர்புகள்காரணமாகஅரசாங்கத்துடன் இணைந்துஅவர்களுக்குஏற்பதாளம்போட்டிருந்தால் அல்லதுஅவர்களைநெல்சன் மண்டேலாவுக்குஒப்பிட்டுதுதிபாடி இருந்திருந்தால் எமதுமாகாணசபைக்குபலமடங்குநிதியைஅவர்கள் ஒதுக்கி இருந்திருப்பார்கள். பலசெயற்திட்டங்களைவடக்குமாகாணத்தில்முன்னெடுக்கஅனுமதிவழங்கி இருப்பார்கள். ஆனால்,அவ்வாறுசெய்திருந்தால்,தமிழ் மக்களின் பலதசாப்தகாலஉரிமைப் போராட்டங்களுக்குப் பெரும் பின்னடைவைஏற்படுத்தியிருப்பேன்.பெரும்துரோகத்தைஅதனால்நான் இழைத்திருப்பேன். அதனால்த்தான் நான் அத்தகையதவறைச்செய்யவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டுமல்ல,அப்போதையபிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் நான் பலதடவைகள் எமதுகொள்கைகள்காரணமாகமுரண்படநேர்ந்தது.
ஜனாதிபதிசிரிசேனஎன்னைகிளிநொச்சிஇராணுவமுகாமில் மதியஉணவுஉண்ணஅழைத்தபோது“நான் இராணுவத்தினரைவடக்கிலிருந்துவெளிNயுஅனுப்பNவுண்டும் என்று கூறிவருகின்றேன். நான் எப்படிஅவர்கள் முகாமில் சாப்பிடுவது? என்றுகேட்டுஅங்குசெல்லமறுத்துவிட்டேன். ஆகவேகொள்கையில் பற்றுள்ளவர்கள் சிலவிடயங்களைச் செய்யமாட்டார்கள். சுயநன்மைக்காக வழி தவறமாட்டார்கள். அவ்வாறில்லாமல் சுயநன்மைக்காக கூட்டமைப்புபாதைமாறியதால்த்தான் எமதுதேசியக் கூட்டணிஉருவாகியது. எனவேநாங்கள் பிரயவேண்டிவந்தமைக்குக் காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சுயநலம் சார்ந்தகொள்கைபிறழ்ந்தநடவடிக்கைகளே.
எமதுதமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக் கட்சிஒருநிறுவனமயப்படுத்தப்பட்டகட்சியாகவரையறைசெய்யப்பட்டகொள்கைகளுடன் செயற்படுகின்றது. அதற்கானஎழுத்துமூலஉடன்பாட்டில் நாம் கைச்சாத்திட்டுள்ளோம். எம்மிடையேதனிமனிதஉணர்வுகளோஅன்றிசெயற்பாடுகளோஎதுவிததாக்கத்தையும் தரா. மாறாகக்கொள்கைவழிபயணத்தில்நாம் தொடர்ந்துசெல்வோம். ஆகவேஎமக்குபின்பும் இக் கட்சிநீடித்துநிலைத்திருக்கும் என்றுஎதிர்பார்க்கின்றோம். தமிழரசுக் கட்சியினரின் ஆரம்பகாலநேர்வழிப் போக்கும் வெளிப்படைத்தன்மையும்தற்போதுஅற்றுப்போய்விட்டன. தமிழ் மக்களைஆளுகின்றஏகபோகஉரிமையைக்கொண்டவர்கள் தாங்களேஎன்றமமதையில்தமக்குவாக்களித்துபாராளுமன்றத்திற்குஅனுப்பிவைத்ததமதுசொந்தஉறவுகளையேஅவர்கள் உதறித்தள்ளிவிட்டுள்ளார்கள். தாம் நினைத்தபாட்டில் அரசுக்குமுண்டுகொடுப்பதும்,அரசில் இருந்துகிடைக்கப்பெறும் அற்பசொற்பசலுகைகளுக்காகதமதுகொள்கையிலிருந்துவிலகிதம்மைப் பொருளாதாரரீதியாகவலுப்படுத்துகின்றதுமானஒரு கூட்டமாக கூட்டமைப்பில் உள்ளவர்கள் மாறிவிட்டார்கள்.அவர்கள் தனிப்பட்டஉதவிகளைப் பெற்றுக் கொள்ளட்டும்,மாடிவீடுகள்அமைக்கட்டும் சொகுசுவாகனங்களில் சுற்றித் திரியட்டும்ஆனால் தமிழர்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் அல்லஎன்றுமட்டும் கூறாதிருக்கட்டும். கூட்டமைப்பினருக்குசரித்திரஅறிவுஇல்லையென்றால் எம்மிடம் கேட்கட்டும். ஆனால்எமதுஅடையாளங்களையும்வழிபாட்டுத் தலங்களையும் வரலாற்றுஎச்சங்களையும் அழித்துவிட்டுதமிழர்களின்தாயகம் என்றபதத்தைநீக்கிவிடலாம் எனப் பகல் கனவுகாண்பவர்களுடன்அவர்கள் கைகோர்த்துப் பயணிக்காது இருக்கட்டும்.
ஆகவேஎன் அன்பார்ந்தமக்களே,எம்மைமாற்றணிஎன்றுஅடையாளம் காட்டும் போதுநாம் கொள்கைகள் உடையவர்கள்,கொள்கை வழி பயணிப்பவர்கள் என்றுஅர்த்தம். கூட்டமைப்பினர் கொள்கைவழியில் பயணிக்காதுசுயநலவழியைப் பின்பற்றுப் Nபுhய் தமிழ் மக்களின் முதல் அணிஎன்றஅந்தஸ்தை இழந்ததால்த்தான் நாம் மாற்றணிஆகியுள்Nளூம். கொள்கைவழியில் பயணிக்கஇன்னுஞ்சிலமுதிர்ச்சிபெறாதகட்சிகள் இருக்கின்றன. அவைமுதிர்ச்சிஅடையயும் போதுஅவற்றிற்கும் மாற்றணிஎன்றுமக்கள் கூறக் கூடும். தற்போதுஅவர்கள் ஒருமாற்றணிஅல்ல. முதிர்வைநோக்கிப் பயணிக்கும் முகப்பு நூல் முன்னணியினர்!எனவேதான்தமிழ் மக்களின் நலன்களில் பூரணஅக்கறைகொண்டதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் மீன் சின்னத்திற்குவாக்களிக்குமாறுநாம் கேட்கின்றோம். வரும் தேர்தலில் மீன் சின்னத்திற்குஉங்கள் பொன்னானவாக்குகளைஅளிப்பதன் மூலம்வலுவானஒருகட்சியாகநாம் மாறமுடியும். அத்துடன் கூடியஉறுப்பினர் தொகைகொண்டஒருகட்சியாகபாராளுமன்றிலும் உலகஅரங்கிலும் நாம் பரிணமிpக்கமுடியும் என்று கூறிஎனதுசிற்றுரையைஇத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்,வடமாகாணம்
செயலாளர் நாயகம்,தமிழ் மக்கள் கூட்டணி
இணைத்தலைவர்,தமிழ் மக்கள் பேரவை
தலைவர்,தமிழ் மக்கள் தேசிய கூட்டணி