தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிகருத்துப் பரப்புரைபொதுக் கூட்டம் வவுனியாநகரசபைகலாசாரமண்டபம் -26.07.2020
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
கருத்துப் பரப்புரைபொதுக் கூட்டம்
வவுனியாநகரசபைகலாசாரமண்டபம்
26.07.2020 அன்றுகாலை 09.00 மணிக்கு
தேசியக் கூட்டணியின் தலைவருரை
குரூர் ப்ரம்மா………………….
அன்புக்குரியவவுனியாவாழ் மக்களே,மற்றும் சகோதரசகோதரிகளே!
வவுனியாவில் இப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சிஅடைகின்றேன். எமதுகட்சியின் செயலாளர் தம்பிசிவசக்திஆனந்தன் எமது கூட்டணிபற்றியும் மீன் சின்னம் பற்றியும் மக்களுக்கு இதுவரையில் போதுமானளவுஅறிமுகம் செய்துவைத்திருப்பார். தமிழ் மக்களின் உரிமைக்கானபோராட்டவரலாற்றில் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்கஒருதேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டுவைக்கப்படும் நாளாக இன்றையநாள் அமைகின்றது. இன்றையநாள் மிகவும் ஒருமுக்கியமானசெய்தியைஅரசாங்கத்துக்கும் சர்வதேசசமூகத்துக்கும் தமிழ் மக்கள் சொல்லுகின்றஒருநாளாகஅமைகின்றது. தொடர்ந்தும் எமதுமக்களுக்குஎதிராகஒரு இனப்படுகொலைநிகழ்த்தப்பட்டுவருகின்றநிலையிலும்,எட்டப்பட்டஎல்லாஒப்பந்தங்களுமேஅரசாங்கங்களினால்தொடர்ச்சியாககிழித்துஎறியப்பட்டுவருகின்றநிலையிலும், இனப்பிரச்சினைஎன்றஒன்றே இந்தநாட்டில் இல்லைஎன்றுதற்போதையஅரசாங்கம் குருட்டுத்தனமானபொறுப்பற்றகருத்துக்களைமுன்வைத்துவரும் நிலையிலும் எமதுபிரச்சினைக்குஒருநிரந்தரதீர்வினைஅடையும்பொருட்டுஒருகருத்துக்கணிப்பைநடத்துமாறுநாம் சர்வதேசசமூகத்தினைகோருகின்றோம்.
நன்கு,ஆராய்ந்து,சிந்தித்தேநாம் இந்தவேண்டுகோளைமுன்வைக்கின்றோம். சாத்வீகபோராட்டம் மட்டுமல்லகடந்த 10 வருடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புமேற்கொண்டசரணாகதிஅரசியல் கூட சிங்களஅரசாங்கங்களின் மனக்கதவுகளைதிறக்கவில்லை. அவர்களின் எண்ணங்களிலும் செயற்பாடுகளிலும் இம்மியளவும் மாற்றம் ஏற்படவில்லை. இந்தநிலையில்,வரலாற்றுபட்டறிவில் இருந்தும்,முரண்பாடுகளுக்குதீர்வுகாணும் சர்வதேசசமூகத்தின் சமகாலஅணுகுமுறைகள் அடிப்படையிலும் சர்வதேசசமூகத்திடம் ஒருகருத்துக்கணிப்பைஎமதுமக்கள் மத்தியில் நடத்திஎமதுமக்கள் எத்தகையஒருதீர்வினைவிரும்புகிறார்கள்என்பதனைஅறிந்துநிரந்தரமானஒருதீர்வினைஏற்படுத்துமாறுநாம் அவர்களைகோருவதைதவிரவேறுவழியில்லை. நாகரிகம் வளர்ச்சியடைந்து,சர்வதேசமனிதஉரிமைசட்டங்கள்,பிராமணங்கள்என்பவைநிறுவனமயபப்டுத்தப்பட்டு,தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இந்த 21 ஆம் நூற்றாண்டில் உலகின் மூத்தகுடிகளில் ஒன்றானதமிழ் இனம் இலங்கையில் திட்டமிட்ட இனஅழிப்புக்குஉட்படுத்தப்பட்டு இருந்த இடம் தெரியாமல் அழியும் நிலைமையை இந்தியா,சர்வதேசசமூகம் மற்றும் ஐ. நா ஆகியவை இனிமேலும் அலட்சியயமாகபார்த்துக்கொண்டிருக்கக்கூடாது. பல் நாடுகளில் இனங்களுக்கு இடையிலானமுரண்பாடுகளைதீர்ப்பதற்கு ஜனநாயகரீதியான,நடைமுறைசாத்தியமான,சர்வதேசசட்டபிரமானங்களுக்குஉட்பட்டமிகச்சிறந்தஒருவழிமுறைதான் கருத்துக்கணிப்புநடத்துவதாகும் . யுத்தம் நடைபெற்றபோதுஎமதுபிரச்சினையில் தலையீடுசெய்தநாடுகளும்,மத்தியஸ்தம் செய்யமுன்வந்தநாடுகளும் இன்றுயுத்தம் முடிவடைந்தபின்னர் எம்மைஒருஆபத்தானநிலைமையில் விட்டுவிட்டுஒதுங்கிநிற்பதன் மூலம் பெரும் தவறை இழைத்துள்ளன. 30 வருடகாலயுத்தகாலத்தில் நாம் இழந்தநிலங்களைவிட கூடுதலானநிலங்களைகடந்த 10 வருடங்களில் நாம் இழந்துவிட்டோம். அரச இயந்திரங்கள் யாவும் எமக்குஎதிரானகட்டமைப்பு,கலாசாரரிதியானபடுகொலைக்காகமுடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆகவே,தமிழ் மக்கள் சர்வதேசசமூகத்தின் உடனடியானதலையீட்டைதற்போதுகோருகிறார்கள். கருத்துகணிப்புஒன்றைநடத்துவதற்கானமுன்னெடுப்புக்களைசர்வதேசசமூகம் மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக இந்தியாவுடன் இணைந்துசமாதானபேச்சுவார்த்தைகளில் அனுசரணைவழங்கிய இணைத்தலைமைநாடுகள் காத்திரமானதலையீடுஒன்றைசெய்வதற்கானதார்மீகபொறுப்பைகொண்டிருக்கின்றன. கருத்துக்கணிப்புஅடிபப்டையிலானதீர்வுஒன்றைகொண்டுவருவதற்குகாலதாமதம் ஏற்படும் பட்சத்தில் சர்வதேசகண்காணிப்புடன் கூடிய இடைக்காலதீர்வுஒன்றைஅவசரமாககொண்டுவந்துமனிதஉரிமைமீறல்களைதடுப்பதுடன்,போரினால் பாதிக்கப்பட்டஎமதுமக்களைவலுவூட்டும் நடவடிக்கைகளைஅவர்கள் எடுக்கவேண்டும் என்றும் இந்ததேர்தல் விஞ்ஞாபனம் கோருகின்றது. இதயசுத்தியுடனானசமாதானமுன்னெடுப்புக்களையும் பேச்சுவார்த்தைகளையும் நாம் என்றும் ஆதரிப்போம். ஆனால்,அவை இந்தியாஅல்லதுவேறுஒருநாட்டின் மத்தியஸ்துடன் நடைபெறவேண்டும் என்பதேஎமதுஎதிர்பார்ப்பு. இது தமிழ் மக்களின் வரலாற்றுரீதியானஒருபட்டறிவின்பாற்பட்டஒருபடிப்பினைஆகும்.
இனி,நான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் பற்றிசிறிதுகுறிப்பிடவிரும்புகிறேன்.
சிலதினங்களுக்குமுன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளசிலகருத்துக்கள் எமதுமக்களைகுழப்பிஅரசியல் இலாபம் தேடும் வகையில் அமைந்துள்ளன. அவரதுபொய்யானதகவல்களையும் கருத்துக்களையும் எமதுமக்கள் நம்பிஏமாந்தஒருகாலம் இருந்தது. ஆனால்,எமதுமக்கள் இனியும் ஏமாறப் போவதில்லை. அவர்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள்.
ஆட்சியாளர்கள் பெருமளவில் பணங்கொடுத்துபற்பலஉதிரிக் கட்சிகளைவாங்கிவாக்குகளைபிரித்துதமிழ் தேசிய கூட்டமைப்பைதோற்கடிக்கசதிசெய்வதாகசுமந்திரன் ஒருகதையை கூறியிருக்கிறார். அரசாங்கம் கோடிகோடியாகபணம் கொடுத்துபலகட்சிகளைவடக்குகிழக்கில் போட்டியிடவைத்திருக்கின்றதுஎன்பதுஉண்மை. ஆனால்,அதன் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பைதோற்கடிப்பதற்காகஅல்ல. ஆட்சியாளர்களின் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் கவனமாகஆராய்ந்துபார்த்தலே இந்தநடவடிக்கைகளுக்குகாரணம். தமிழ் தேசிய கூட்டமைப்புவெற்றிபெறுவதையேஅரசாங்கம் விரும்புகிறதுஎன்பதை இலகுவில் புரிந்துகொள்ளலாம். இது ஒன்றும் சுழஉமநவ ளுஉநைnஉநஅல்ல. பொதுஜன பெரமுனவின் முக்கியதலைவர்களான ஜி.எல்.பீரிஸ்,கெஹேலியரம்புக்வலஆகியோர் வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தெற்கில் தமதுகட்சியானசிறிலங்காபொதுஜென பெரமுனவுமேவெல்லும் என்றுவெளிப்டையாகவே கூறியிருக்கின்றார்கள். இது தெற்கில் தமதுகட்சியையும் வடக்குகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் வெல்லவைக்கும் ஒருஉளவியல் உத்தி.
தமிழ் தேசிய கூட்டமைப்புவெற்றிபெறவேண்டும் என்றுஆட்சியாளர்கள் விரும்புவதற்குவலுவானகாரணங்கள் இருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் எதிர்காலத்தில் சர்வதேசசமூகத்திடம் இருந்துகடும் நெருக்கடிகளைஎதிர்கொள்ளும் என்றுஎதிர்பார்க்கப்படும் இன்றையநிலையில் கடந்தநல்லாட்சிஅரசாங்கத்தின் போதுபோர்க்குற்றம் என்றசர்வதேசபொறியிலிருத்துதமிழ் தேசிய கூட்டமைப்புஅப்போதையஅரசாங்கத்துக்குஉதவியதுபோன்றஉதவிகளைஎதிர்காலத்தில் தானும்அதனிடம் இருந்துபெற்றுக்கொள்ளவேண்டும் என்றேநினைக்கின்றது.
இலங்கையின் பங்குபற்றுதல் இன்றிசர்வதேசபோர்க்குற்றவிசாரணைநடக்கவிருந்தநிலையில் இலங்கைக்குஎதிராகசர்வதேசசமூகம் பொருளாதாரதடைகளைஏற்படுத்தும் நிலையில், ராஜபக்~க்களுக்குஎதிராகப்பயணதடைகளைஏற்படுத்தும் நிலையில் எவ்வாறுநல்லாட்சிஅரசாங்கம் இலங்கையைப்பாதுகாத்துக்கொண்டதுஎன்பதுபற்றிமுன்னாள் வெளிநாட்டமைச்சர் மங்களசமரவீரனுயடைல ஆசைசழசபத்திரிகைக்குஅண்மையில்வழங்கியுள்ளசெய்தியில் குறிப்பிட்டுள்ளார். சர்வதேசபோர்க்குற்றவிசாரணையை இலங்கையின் கைகளுக்குத் தாங்களேதுணிந்துகொண்டுவந்ததாகஅவர் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முழுமையானஒத்துழைப்பு இன்றி இது நடைபெற்று இருக்கவேமுடியாது.ஆகவே,சர்வதேசநெருக்கடிகளைத்தொடர்ந்துசமாளிக்க ராஜபக்ஸ அரசாங்கத்துக்குதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வெற்றிமிகவும் அவசியமானஒன்றாக இருக்கிறது.
மேலும் இவர்களைப் பயன்படுத்திசலுகைஅரசியலூடாகசிங்களபௌத்தபேரினவாதத்தை இலகுவில் விஸ்தரிக்கமுடியும் என்பதும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புவெற்றிபெறவேண்டும் என்றுஆட்சியாளர்கள் விரும்புவதற்குகாரணமாகும். நாம்இவற்றிற்குமசியமாட்டோம் என்பது இரண்டுபிரதானகட்சிகளுக்கும் நன்குதெரியும். கடந்த ஜனாதிபதிதேர்தலின்போது இரண்டுதடவைகள் ஆதரவுகோரிஎன்னிடம் ராஜபக்~க்கள் தூது அனுப்பியவர்களுக்குநான் கொடுத்தபதில்களில் இருந்துஎன்னைநன்றாகஎடைபோட்டிருப்பார்கள்.
அதனால்த்தான்,பலமானசிலஅமைச்சுக்களைகொடுத்தேனும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைஅரசுடன் இணைத்துக்கொள்ளவேண்டும் என்றுபொதுஜன பெரமுனவிரும்புகிறது. அதேபோலத்தான்,தமிழ் தேசிய கூட்டமைப்பும் கோத்தாபயஅரசாங்கத்துடன் இணைந்துசெயற்படுவதற்கானஏற்பாடுகளை இப்பொழுதிருந்தேசெய்துவருகின்றது. இதன் ஒருஎதிரொலியாகத்தான் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்றபிரசார கூட்டம் ஒன்றில் அமைச்சுப்பதவிகளைப்பெற்றுக்கொள்ளவேண்டியஅவசியத்தைதிரு.சுமந்திரன்அவர்கள்எடுத்துக்கூறியிருந்தார்.
அத்துடன்,கடந்த ஜனாதிபதிதேர்தலில் கோத்தாபய ராஜபக்~வுக்குவெளிப்படையாகஆதரவுதெரிவித்துபிரசாரநடவடிக்கைகளைமேற்கொண்டஐனநாயகப் போராளிகள் கட்சியினர் இன்றுதமிழ் தேசிய கூட்டமைப்பைவெற்றிபெறவைப்பதற்காகஆட்சியாளர்களினால் எந்தவிதநிபந்தனைகளும் இன்றிதமிழ் தேசிய கூட்டமைப்புக்குவேலைசெய்வதற்காகஅனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் தயவில் வெளிப்படையாகவே இயங்கும் ஜனநாயகபோராளிகளின் கட்சிதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் வெளிப்படையாககைகோர்த்திருப்பதுதேர்தல் முடிவடைந்தபின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பானதுமகிந்த-கோத்தாஅரசில் இணைவதற்காகமுன்கூட்டியேஉடன்படிக்கைஒன்றுஏற்கனவேஎட்டப்பட்டிருப்பதையேகட்டியம்கூறி நிற்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்புதனதுதேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்படுகொலைக்கானசர்வதேசசுயாதீனவிசாரணைபற்றிஎதையும் தெளிவாககுறிப்பிடாமையும் இதனைமேலும் உறுதிப்படுத்துகின்றன.
ஒரேநாட்டுக்குள்ளேதான் தீர்வுஎன்பதைநாம் வெளிப்படையாகவிஞ்ஞாபனத்தில் சொல்லியும்,சம~;டி என்றால் பிரிவினைஎனஅந்தப் பக்கத்தில் ராஜபக்சக்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றுசுமந்திரனேதனதுவாயால் ஒப்புக்கொண்டிருக்கிறார். இது ஒருபுறத்தில் பொதுஜன பெரமுன கூடுதல் வாக்குகளைபெறுவதற்குஉதவும் அதேவேளை,எதுவுமே இல்லாததமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தைதமிழ் மக்கள் பிழையாகப்பார்ப்பதைதவிர்ப்பதற்கானஅரசாங்கத்தின் உதவியாகவும் இது இருக்கக் கூடும்.
சிங்களமக்களில் கணிசமானோர் இணங்காதஎந்தத் தீர்வும் நிலையானதல்ல. இதைச் சொல்லாமல் அரசியல் செய்பவர்கள் மக்களைஏமாற்றுகிறார்கள். என்றும் சுமந்திரன் கூறி இருக்கிறார். இதன்மூலம் சுமந்திரன் என்ன கூறுகிறார் என்றால்,சிங்களமக்கள் இணங்கும் ஒருதீர்வினைத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்புஅரசாங்கத்திடம் கோரும் என்பதைத்தான். தமிழ் மக்களுக்குஇந்தத்தீர்வுதான் வேண்டும் என்றுதமிழ் மக்களின் வரலாறு,பூர்வீகம்,சட்டரீதியான சுய நிர்ணயஉரிமைஆகியவற்றைஎடுத்துக்கூறி சிங்களமக்களைஅதற்கு இணங்கவைக்கவேண்டும் என்றுசிந்திக்காமல்,சிங்களமக்கள் இணங்கும் ஓர்தீர்வினைஎமதுமக்கள் மத்தியில் திணிக்கமுயலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கபடநாடகத்தைமக்கள் அறிந்துகொள்ளவேண்டும்.
சிங்களமக்கள் இணங்கும் ஒருதீர்வினைபெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்புபுதியஅரசியல் யாப்புதயாரிக்கும்யோசனையில் பௌத்தத்துக்குமுன்னுரிமைஅளிப்பதற்கும் ஒற்றைஆட்சிக்குப்பட்டதீர்வுக்கும் ஒத்துக்கொண்டதுடன் வடக்குகிழக்கு இணைப்பைவலியுறுத்தவும் தவறியது.
ஆனால்,எமதுஅணுகுமுறைஎன்னவென்றால் சிங்களமக்கள் இணங்கும் ஒருதீர்வைஅல்லசிங்களமக்களைநாம் இணங்கச்செய்யும் ஒருதீர்வினைநாம் பெறுவதுபெற்றுக்கொள்வதுதான். அதற்காகத்தான்நான் எதற்கும் அஞ்சாமல் எமதுபூர்வீகம்,வரலாறு,எமதுசுயநிர்ணயஉரிமை,நாம் ஏன் ஒருதேசம்,நாம் ஏன் சிங்களவர்களைவிட இந்தநாட்டுக்கு கூடுதல் சொந்தக்காரர் என்பவற்றைஎல்லாம் கூறிவருகின்றேன். அவ்வாறு கூறியதால்த்தான் இரண்டுநாட்களுக்குமுன்னர் பொலிசார் வந்துஎன்னைக் கேள்விகேட்டனர்.
திரு.சுமந்திரன் பின்வறுமாறும் கூறியிருக்கிறார்: “அந்தப் பக்கத்தில் ஈழம் பிடித்துத் தருவோம் என்றஉணர்ச்சிஅரசியல் செய்பவர்களும் சமாதானமானவழிகளிலேஒரேநாட்டுக்குள்ளேதான் அவர்கள் தீர்வைஎதிர்பார்ப்பதைஎம் மக்கள் மத்தியில் தெளிவாகச் சொல்லப் பயப்படுகின்றார்கள் என்றார். மேலும் அவர் எமதுஉரிமை,உரித்துப் பிரச்சினைதீர்க்கப்படவேண்டுமென்பதில் உறுதிகொண்டவர்கள் இந்தஉண்மைகளைவெளிப்படையாகக் கதைக்கவேண்டும். கடந்தஐந்தாண்டுகளில் நாம் சம~;டி அடிப்படையிலானஅதிகாரப் பகிர்வுதொடர்பில் சர்வகட்சி இணக்கப்பாட்டைஎட்டி இருக்கின்றோம். அரசியலமைப்புவரைபொன்று இருக்கிறது. அதைநாம் அரசியலமைப்பாகமாற்றவேண்டும். அதற்கானஆணையைதமிழ் மக்கள் எமக்குத் தரவேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஒரேநாட்டுக்குள் என்றுசுமந்திரன் கூறுவதுஒற்றைஆட்சிக்குள் தான் என்பதில் எந்தசந்தேகமும் இல்லை. உத்தேசஅரசியல் யாப்புவரைபில் தமிழ் தேசிய கூட்டமைப்புஒற்றைஆட்சிக்குஉட்பட்டஒருதீர்வுக்குதான் இணங்கியதுஎன்பதுஎமதுபல்கலைக்கழகங்களின் கலாநிதிகள்,பேராசிரியர்களினால் சந்தேகத்துக்கு இடமின்றிதெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால்,சுமந்திரனோதான் பிடித்தமுயலுக்கு மூன்றுகால் என்றவகையில் விதண்டாவாதம் செய்துவருகின்றார்.ஏகீயஎன்றசிங்களசொல்லும் எல்சத் என்றசிங்களச் சொல்லும் ஒரேபொருளுடையனஎன்று கூறப்பார்க்கின்றார்.
இலங்கையில் ஒற்றைஆட்சிக்குஉட்பட்டஎந்ததீர்வும் அர்த்தம் உள்ளஒருதீர்வாகஅமையாதுஎன்பதேவரலாறுஎமக்குப் புகட்டும்பாடம். ஒற்றைஆட்சிக்குஉட்பட்டஒருதீர்வினைஎமதுமக்களின் மீதுதிருட்டுத்தனமாகதமிழ் தேசிய கூட்டமைப்புதிணிக்கக்கூடாது. அப்படியானால், இம்முறைதேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனைத்தெளிவாகக்குறிப்பிட்டுமக்களிடம் ஆணை கேட்டிருக்கவேண்டும். இல்லாதுவிட்டால்,தமக்குஎன்னதீர்வுவேண்டும் என்பதைஎமதுமக்களிடமேஅறிந்துகொள்ளும் கருத்துக்கணிப்புஒன்றுக்குசெல்லமுன்வரவேண்டும். இதற்குசட்டத்தில் இடம் இருக்கிறது. இதனைத்தான் நாம் வலியுறுத்துகின்றோம். ஒன்றில் இணைந்தவடக்குகிழக்கில் சம~;டி அடிப்படையிலானஒருதீர்வினைகொண்டுவரவேண்டும்அல்லதுஎமதுமக்கள் என்னவிரும்புகின்றார்கள் என்பதைஅறிந்துஅந்தஅடிப்படையில் தீர்வுக்குமுயற்சிக்கவேண்டும். எமதுமக்கள் ஒற்றைஆட்சிதான் வேண்டும் என்றால் அதைநாம் ஏற்றுக்கொள்வோம். மக்கள் சம~;டி வேண்டும் என்றால் அதைஅவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இல்லைவேறுஒருமேலானதீர்வுதான் வேண்டும் என்றால் அதனையும்அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அதேவேளை,பௌத்தத்துக்குமுன்னுரிமைகொடுத்து,வடக்கு – கிழக்கு இணைப்பைஉறுதிப்படுத்தாததாம் தயாரித்தஅரசியலமைப்புவரைபைஅரசியலமைப்பாகமாற்றுவதற்கானஆணையைசுமந்திரன் கோரியிருப்பதும் மக்களைஏமாற்றும் நடவடிக்கையே. இதன்மூலம், இறுதிதீர்வு,பௌத்தத்துக்குமுன்னுரிமைஅளிக்கப்பட்ட,ஒற்றையாட்சிக்குஉட்பட்ட,வடக்கு -கிழக்கு இணையாததாகவே இருக்கப்போகின்றதுஎன்பதுநிரூபணமாகின்றது. ஆனால், இம்முறைதேர்தல் விஞ்ஞாபனத்தில் சம~;டி தீர்வினைகவர்ச்சிகரமானவகையில் முன்மொழிந்துமக்களைஏமாற்றி இருக்கின்றார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தேசஅரசியலமைப்புவரைபின் உண்மைமுகத்தைதோலுரித்துக்காட்டியவர்களில் கலாநிதிகுமாரவடிவேல் குருபரனும் ஒருவர். இதன்காரணமாகவும், இனப்படுகொலைதொடர்பிலானசர்வதேசவிசாரணைக்குஎதிராகஎப்படிதமிழ் தேசிய கூட்டமைப்புஅரசாங்கத்தைகாப்பற்றும்வகையில் செயற்பட்டதுஎன்பதைஎடுத்துக்கூறியமையும் குருபரனுக்குநல்லாட்சிஅரசாங்கத்தில் அநீதி இழைக்கப்பட்டபோதுதமிழ் தேசிய கூட்டமைப்புகண்டும் காணாததும் போல இருந்துவிட்டமைக்குகாரணமாகும். எமதுநீண்டபோராட்டத்தின் முதுகெலும்பாக இருந்ததேஎமதுயாழ் பல்கலைக்கழகம் தான். இன்றுஅதன் நிலையைபாருங்கள். அரசினாலும் அரசினால் உள் நுழைக்கப்பட்டமுகவர்களின் செயற்பாட்டாலும் மூளைசாலிகள்வெளியேறிவருகின்றனர்.தமிழ் மக்களின் நீதிவேண்டிசெயற்பட்டசிவில் சமூகஅமையத்தின் குரலாகஒலித்தகுருபரன் இன்றுபல்கலைக்கழகவிரிவுரையாளர் பதவியைதுறக்கும் நிலைக்குநிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். தாமாகவேதிரட்சிபெற்றுஅநீதிகளுக்குஎதிராகவெகுண்டெழும் மாணவர் சமுகமும் மாணவர்களின் போராட்டங்களைதட்டிக்கொடுத்துவழிநடத்தும் பேராசிரியர் சமூகமும் இன்றுசெயலற்றுநிற்கின்றன. ஒருசமுகத்தின் மூளையின் பிறப்பிடமாகியபல்கலைக்கழகத்துக்கே இந்தநிலைஎனில் அச் சமூகத்தின் நிலைஎன்னஎன்பதைஉய்த்துணர்ந்துபார்க்கமுடியும். இது எமது இனத்தின் இன்றையநிலையின் ஒருசிறுபக்கத்தினைமட்டும் எடுத்துக்காட்டுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சலுகைஅரசியலும் ஓரிருவரின் தான்தோன்றித்தனமானசெயற்பாடுகளுமே இன்றையதமிழ் மக்களின் அவலநிலைக்குகாரணம். மிகப்பெரும் அதிகாரத்தைதனதுகையில் வைத்திருந்ததம்பிபிரபாகரன் கூட ஒருபோதும் தனதுஅதிகாரத்தைதான்தோன்றித்தனமாகதனதுவிருப்புவெறுப்புக்களுக்குஏற்பபயன்படுத்தியதுகிடையாது. தீர்வுவிடயத்தில் நிலத்திலும் புலத்திலும் உள்ளபுத்திஜீவிகளைஉள்ளடக்கியஒருகுழுவைஅவர் உருவாக்கியிருந்தார். அதேபோல,பொருளாதார,சமூக,கலாசாரமேம்பாடுகளுக்காகநிறுவனங்கள்,கட்டமைப்புக்களைஉருவாக்கிஅவற்றைசுயாதீனமாகசெயற்படஅனுமதித்திருந்தார். ஆனால்,கடந்த 10 வருடங்களில் ஒட்டுமொத்ததமிழ் மக்களின் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் முடிவுகளைசம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் மட்டுமேமேற்கொண்டுவந்திருந்தனர். அரசியல்,பொருளாதாரமற்றும் சமூகரீதியானதீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகளில் மக்கள் முற்றுமுழுதாகபுறக்கணிக்கப்பட்டனர். அரசியல் தீர்வுவரைபுதயாரிக்கும் விடயத்தில் வடமாகாணமுதலமைச்சராக இருந்தஎன்னைக்கூட அவர்கள் கலந்தாலோசிக்கவில்லை.அந்தளவுக்குசர்வாதிகாரத்தனமாகஅவர்கள் செயற்பட்டுள்ளனர்.எந்தஒருதீர்மானங்களைஎடுக்கும்போதும் அவர்களுக்குசிலஅளவுகோல்கள் (உசவைநசயை) இருந்தன. அவற்றில் முதலாவதுநல்லாட்சிஅரசாங்கத்துக்குஎந்தபாதிப்பும் ஏற்படக்கூடாதுஎன்பதாகும். இரண்டாவதுஎதிர்க்கட்சிதலைவர் பதவிக்குஎந்தஆபத்தும் வரக்கூடாதுஎன்பதாகும். மூன்றாவதுசிங்களமக்கள் தமதுமுடிவுகளைசந்தேகத்துடனும் தவறாகவும் பார்க்கக்கூடாதுஎன்பதாகும். நான்காவதாகவேதமிழ் மக்களின் நலன்கள் பற்றிக் கொஞ்சமேனும் செலுத்தவேண்டும் என்பது. நான் இதைவெறும் பேச்சுக்காக கூறவில்லை. கூட்டமைப்பின் ஒவ்வொருதீர்மானங்களையும் நீங்கள் ஆராய்ந்துபார்த்தால் உங்களுக்கு இந்தஉண்மைபுரியும். எமதுசமூகத்தைகட்டமைப்புக்கள் ரீதியாகபலப்படுத்திபொதுமக்களையும் புத்திஜீவிகளையும் உள்வாங்கிசெயற்படும் எந்தமுயற்சிகளையும் அவர்கள் செய்யவில்லை. புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் வெளிநாட்டுஅரசாங்கத்திடம் இருந்துநிதியைபெற்றுஅபிவிருத்திசெயற்பாடுகளைநான் முன்னெடுப்பதற்காகமுதலமைச்சர் நிதியத்தைஏற்படுத்துவதற்குநான் முனைந்தபோதுஅவர்கள் அதற்குஒத்துழைப்புவழங்கவில்லை. இதற்குகாரணம் நான் இனப்படுகொலைதீர்மானத்தினைநிறைவேற்றிஅரசாங்கத்துக்குஎதிராகசெயற்பட்டமையேஆகும்.
எமதுசெயற்பாடுகளோநிறுவனரீதியானகட்டமைப்புக்களின் ஊடாகநன்குஆராயப்பட்டுமுன்னெடுக்கப்படவிருக்கின்றது. நிறுவனமயப்படுத்தல் என்னும்பொழுதுஅரசியல் தீர்வுவிடயம் சரி,சமூக,பொருளாதாரமேம்பாட்டுவிடயங்களும் சரிஎதுவானதாக இருந்தாலும் அவற்றுக்கானசெயற்பாடுகளின் நிலைத்துநிற்கும் தன்மையும் உபாயங்களும் தனிஒருவரில் தங்கி இருக்காமல் அந்தநோக்கங்கள் தொடர்பிலானகோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளின் மீதான கூட்டுப்பொறுப்பிலும் பற்றுறுதியிலும் தங்கி இருத்தலாகும். இதன் அடிப்படையில்,உலகளாவியரீதியில் பரந்துவாழும் தமிழ் புத்திஜீவிகளைஒருங்கிணைத்துநிலத்திலும் புலத்திலும் கட்டமைப்புக்களைஉருவாக்கிசெயற்பாடுகளைமுன்னெடுக்கவுள்ளோம். நாம் மேலேகுறிப்பிட்டுள்ளவாக்குறுதிகளை இந்தநிறுவனமயப்படுத்தப்பட்டசெயற்பாடுகளேபெற்றுத்தரும்.
அதேபோல, இனப்பிரச்சினைக்குநிரந்தரமானஒருதீர்வினைக்காண்பதற்குநாம் முன்வைக்கும் யோசனைகள் சர்வதேசசட்டங்களுக்குஅமைவானதாகவும் முரண்பாட்டுகோட்பாடுகளுக்குஅமைவானதாகவுமே இருக்கின்றன. இவை பல்வேறுசந்தர்ப்பங்களில் வெற்றிகரமாகபிரயோகிக்கப்பட்டநடைமுறையில் இருக்கும் வழிமுறைகளே. தமிழ் மக்களின் அடையாளத்தையும் இருப்பையும் அழிப்பதையேகுறியாகக்கொண்டுசெயற்படும் இலங்கைஅரசுஒருபோதும் தமிழ் மக்களுக்குதீர்வுஎதனையும் வழங்கப்போவதில்லைஎன்பதையும் சர்வதேசஉத்தரவாதம் இன்றியஎந்தஉடன்படிக்கையையும் இலங்கைஅரசுமதிக்கப்போவதில்லைஎன்பதையும் யுத்தத்துக்குமுந்தியவரலாறும்,யுத்தகாலவரலாறும்,யுத்தத்துக்குபிந்தியவரலாறும் பட்டவர்த்தனமாகவெளிப்படுத்துகின்றன. ஆகவேதான் ஒருநிரந்தரதீர்வினைஏற்படுத்துவதற்குசர்வஜன வாக்கெடுப்பைநடத்துமாறுசர்வதேசசமூகத்தைநாம் கோருகின்றோம். அதேபோல, இறுதியுத்தத்தில் என்னநடந்தது,ஏன் தமிழ் மக்களுக்கு சுய நிர்ணயஉரிமையின் அடிப்படையிலானதீர்வுஅவசியம் என்பவற்றைசிங்களமக்கள் விளங்கிக்கொண்டுநிரந்தரதீர்வுஏற்படுவதற்குஅவர்களும் ஒத்துழைக்கவேண்டும் என்பதற்காகவேசர்வதேசவிசாரணையைநாம் கோருகின்றோம்.
ஆகவே,வடக்குகிழக்கில் வாழுகின்றஎமதுஅன்புக்கினியமக்களே! தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படிஅமையப்போகின்றதுஎன்றவிதியைதீர்மானிக்கும் முக்கியதேர்தலாகஆவணி 5, 2020 திகதிஅன்றையபாராளுமன்றதேர்தல் அமைகிறது. உங்கள் வாக்குகள் தான் அந்தவிதியைஎழுதப்போகின்றன. நீங்கள் எழுதும் விதிவடக்கு- கிழக்கில் “மீனாட்சி”மலர்வதற்கானதாக இருக்கட்டும்.
இறுதியாகஒருவேண்டுகோள், இம்முறைதேர்தலில் பல்வேறுமுறைகேடுகள் நடைபெறுவதற்கானவாய்ப்புக்கள் இருக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர் ஒருவர் தான் கள்ளவாக்குகள் போடுவதைபகிரங்கமாகவேஒப்புக்கொண்டிருக்கிறார். ஆகவே,மக்களேவிழிப்பாக இருந்துகொள்ளுங்கள். உங்களைசுற்றிஎன்னநடைபெறுகின்றதுஎன்பதைஅவதானியுங்கள். குறிப்பாக இளைஞர்,யுவதிகள் வாக்களிப்புநிலையங்கள் மற்றும் வாக்குகள் எண்ணப்படும் இடங்களில் கண்காணிப்புநடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். உங்கள் கைகளில் இருக்கும் கமெராதொலைபேசிகளைபயன்படுத்திமோசடிநடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் செயற்பாடுகளைஆதாரப்படுத்துங்கள். அம்பலப்படுத்துங்கள். வாக்குகள் என்னும் செயற்பாடுகளைகண்காணிக்கஎமக்குஉங்களின் உதவிகள் தேவைப்படுகின்றனஎன்று கூறி ஆகஸ்ட் 5ந் திகதிதேர்தலில் மீனுக்குவாக்களியுங்கள் என்று கூறி என் சிற்றுரையை இத்துடன் முடிக்கின்றேன்.
நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்,வடமாகாணம்
செயலாளர் நாயகம்,தமிழ் மக்கள் கூட்டணி
இணைத்தலைவர்,தமிழ் மக்கள் பேரவை
தலைவர்,தமிழ் மக்கள் தேசிய கூட்டணி