தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கருத்துப் பரப்புரைபொதுக் கூட்டம் மானிப்பாய்,பட்டினச்சபை-28.07.2020
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
கருத்துப் பரப்புரைபொதுக் கூட்டம்
மானிப்பாய்,பட்டினச்சபை
28.07.2020 அன்றுசெவ்வாய்க்கிழமைமாலை06.00மணிக்கு
தேசியக் கூட்டணியின் தலைவருரை
குரூர் ப்ரம்மா………………….
அன்பார்ந்தமானிப்பாய்வாழ் மக்களே,சகோதரசகோதரிகளே!
என் பூர்வீகமண்ணாகியமானிப்பாய் மண்ணில் நின்றுகொண்டுஉங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன். 2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு இன்னும் சிலதினங்கள் மட்டுமேஉள்ளநிலையில் எமதுகட்சிக்குஉங்களின் அமோகஆதரவைவழங்கிஎன்னையும் எனதுகட்சியின் ஏனைய வேட்பாளர்களையும் அமோகவெற்றியடையச் செய்துஒருபலமானகட்சியாகபாராளுமன்றத்தில் எமதுகுரல் ஒலிக்கச் செய்வீர்கள் எனநம்புகின்றேன். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிஆகியஎமது கூட்டணிக்கட்சியின் சின்னம் மீன். எனது இல. 6.
எமதுகட்சியின் சகவேட்பாளர்களில் மேலும் இரு வேட்பாளர்களுக்குநீங்கள் உங்கள் விருப்புவாக்குகளைஅளித்துஎமக்குமுழுமையானஆதரவைநல்குவீர்கள் எனஎதிர்பார்க்கின்றேன்.
அண்மைக் காலமாகதிரு.சுமந்திரன் அவர்களின் அறிக்கைகளும்,பத்திரிகைச் செய்திகளும் எமக்குஅதிர்ச்சிதருவனவாகஉள்ளன. அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதைக்குறிக்கோளாகக் கொண்டேஅவரதுஅறிக்கைகள் வெளிவருகின்றன. அவர் மிகவும் தெட்டத் தெளிவாக இதனைச் சொல்லியிருக்கி;ன்றார். அவர்ஐக்கியதேசியக் கட்சிஅல்லதுடெலிபோன் கட்சியில் சேர்ந்துதேர்தலில் வென்றுஅமைச்சுப்பதவிபெறுவதில் எமக்குஆட்சேபணைஒன்றுமில்லை.ஆனால்தாம் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்குதமிழ் மக்கள் தமக்குஆணைதரவேண்டும்எனக் கேட்டதன் மூலம் தமிழ் மக்களைமுட்டாள்கள் என்றும் சுய கௌரவம் இல்லாதவர்கள் என்றும் ஏமாளிகள் என்றும் நினைக்கின்றார் போலத் தெரிகிறது.இவற்றின் அடிப்படையில் எந்தளவுக்குஇன அழிப்புமற்றும் போர்க் குற்றங்களுக்கானசர்வதேசவிசாரணையைத்தடுத்துநிறுத்தும் வகையில் இவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ளமற்றையோரும் செயற்பட்டிருப்பார்கள் என்றுபுரிகின்றது.
பொருளாதாரஅபிவிருத்திக்காகஅமைச்சுப் பதவிகளைப்பெறவேண்டும் என்ற கூற்றில் முரண்பாடு இருக்கின்றது. முன்னர் இக் கூட்டமைப்பினர் தான் அவர் அமைச்சுப் பதவியைப் பெற்றதன் காரணமாகடக்ளசைவசைபாடினர். இப்போதுடக்ளசின் மீதுமதிப்புவந்துவிட்டதாஅல்லதுஅபிவிருத்திமீதுஅபிமானம் பிறந்துவிட்டதா? உண்மையிலேயேஇவர்களுக்குஅபிவிருத்திமீதுஅக்கறை இருந்திருக்குமாயின் வடமாகாணசபைக்குஒத்துழைப்பைவழங்கிமுதலமைச்சர் நிதியத்தைஉருவாக்குவதற்குஉதவியிருக்கமுடியும். ஆனால் எந்தவிதத்திலும் எமக்குஉதவாததுமட்டுமன்றிமறைமுகமாகஎதிர்ப்புக்களையேகாட்டிவந்தனர். எனவேதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உண்மைமுகம் அண்மைக்காலமாகதெரியத் தொடங்கியிருக்கின்றது. தம்மைவளப்படுத்துவதற்கும்,சொத்துக் குவிப்பதற்கும்,மாடமாளிகை,சொகுசுகார்எனஅவர்கள் சிந்தனைகள் ஆகாயத்தைநோக்கிநகரத் தொடங்கிவிட்டன. அவர்களுக்குமக்கள் மீதோஅல்லதுஅவர்களின் அபிலாi~கள் பற்றியோஎந்தவிதகரிசனையும் இல்லை. முள்ளிவாய்க்கால் இறுதியுத்தத்தில் வகைதொகையின்றிஅழிக்கப்பட்டஎமதுஉறவுகளின் குடும்பத்தினர் பற்றிசற்றேனும் சிந்தித்திருந்தால் இவ்வாறானகுறுகியசுயஅபிவிருத்திநோக்கங்களின் மேல் ஈடுபாடுசென்றிருக்காது.
தமிழ்த் தேசியக் கூட்;டமைப்புமீதோஅல்லது ஏனைய அரசியல் கட்சிகள் மீதோஎனக்குஎவ்விதகாழ்ப்புணர்ச்சியும் கிடையாது. ஆனால் அவர்கள் தான் என்னைப் பார்த்துஅஞ்சுகின்றார்கள் போலத் தெரிகின்றது. அரசாங்கஅதிகாரிகளைக் கொண்டுபிழையானதகவல்களைத் திரட்டுகின்றார்கள். நடவாதநிகழ்வுகளைநடந்ததாகக் கூறுகின்றார்கள். நிதிநிர்வாகத்தில் இலங்கையிலேயேமுதற்பரிசைப் பெற்றஎம்மைநிர்வாகம் தெரியாதவர்கள் என்கின்றார்கள். பொய்களை மூட்டைகட்டிவந்துதமது கூட்டங்களில் அவிழ்த்துவிடுகின்றார்கள்.
நான் வாராந்தம் பத்திரிகைகளில் வழங்கிவருகின்றகேள்விபதில்கள் மக்களுக்குஒருதெளிவூட்டலைஏற்படுத்தியிருக்கின்றது. இதனைக் கலைக்கும் முகமாகதேர்தலுக்குமுதல் நாள் என்மீதுகூடுதல் அக்கறைகொண்டசிலபத்திரிகையாளர்கள் இணைந்துஎன்மீதுகேள்விக் கணைகளைத்தொடுக்கஆயத்தமாகின்றார்கள்எனஅறிந்தேன். உண்மையில் கேள்விகேட்கவிரும்புபவர்கள் அல்லதுஅரசியல் தெளிவைதமதுபத்திரிகைவாயிலாகத்தெரியப்படுத்தவிரும்புபவர்கள்; அவர்களின் கேள்விகளைநான் பதிலளிக்கக்கூடியவகையில் தேர்தலுக்கு முற்கூட்டியேதொடுத்திருக்கவேண்டும்.அதைவிடுத்துதேர்தலுக்குமுன்; பதில் கூற முடியாதவிதமாகப் பொய்யானஅடிப்படையிலானகேள்விக் கணைகளைத் தொடுக்க இருப்பதுகோளைத்தனத்தையும்அவர்களின் பயத்தையுமேபிரதிபலிக்கின்றன.
நான் போலிவாக்குறுதிகளைஅள்ளிவழங்கிஅரசியற்தீர்வுபெற்றுத் தருவேன்,அரசவேலைபெற்றுத் தருவேன் என்றுஏமாற்றுபவன் அல்ல. ஆனால் எமதுநிறுவனமயப்படுத்தப்பட்டசெயற்பாடுகளினூடாகமக்களின் எதிர்பார்ப்புக்களைநிறைவேற்றமுடியும்என்றநம்பிக்கைஎனக்குண்டு. ஏற்கனவேபுத்திஜீவிகள் பலர் புலத்திலும் நிலத்திலும் எம்முடன் ஒன்றிணைந்துஇம் மாற்றத்திற்காகஉழைக்கத் தொடங்கிவிட்டார்கள். அத்துடன் வடக்குகிழக்கைச் சேர்ந்தஐந்துகட்சிகள் ஒன்றிணைந்துசெயற்படுகின்றன. கொள்கைமற்றும் அணுகுமுறைகளின் அடிப்படையில் மேலும் பலரைஇணைத்துக்கொள்ளஎதிர்பார்க்கின்றோம். தற்போதுதனியாகப்பிரிந்துநிற்கின்றஅல்லதுசுயேட்சையாககளமிறங்கியிருக்கின்றகட்சிகளில் இருந்துபலர்கொள்கைஅடிப்படையில் எம்முடன் வந்துஇணைந்துகொள்ளவாய்ப்பிருக்கின்றது.சிறுசிறுபிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களின் அடிப்படையில் பிரிந்தசகஅரசியல் தலைவர்களும் தொண்டர்களும் எம்முடன் வந்துவிரைவில் இணைந்துகொள்வார்கள்.
இனப் பிரச்சனைக்கானதீர்வுவெறுமனேஎமதுஅரசுடன் பேசுவதால் மட்டும் கிடைத்துவிடும் எனநாம் நம்பவில்லை. மாறாகசர்வதேசத்துடன் பேசுவதன் மூலம் அவர்களிற்குஒருஅரசியல் தெளிவைஏற்படுத்திஅதன் மூலமாகவெற்றிவாய்ப்பைப் பெற்றுக் கொள்ளமுடியும் எனநம்புகின்றோம்.பலவெளிநாட்டுத் தூதுவர்களுடன் ஏற்கனவேஎமதுதொடர்புகளைதொடங்கியுள்ளேன்.
இம்முறைதேர்தல் வாக்களிப்புநிலையங்கள் காலை 7 மணிதொடக்கம் மாலை 5 மணிவரைதிறந்துவைக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகின்றது. எனினும் நீங்கள் அனைவரும் மாலைநேரம் வரைகாத்திராமல் விடியற்காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களைமுடித்துவிட்டுவீட்டைவிட்டுவெளியேறிவாக்களிப்புநிலையங்களுக்குச் சென்றுஉங்கள் வாக்குகளைமீன் சின்னத்திற்கும் எமதுவேட்பாளர்கள் மூன்று பேருக்கும்செலுத்திவிட்டுஅதன் பின்னர் பிறவேலைகளுக்குச் செல்லுமாறுகேட்டுக் கொள்கின்றேன்.எமதுதாமதங்கள் சிலவேளைகளில் எங்கள் வாக்குகளையேஇழக்கவேண்டியகட்டத்திற்கு இட்டுச் செல்லக் கூடும்.அத்துடன் இந்தமுறைவாக்குஎண்ணும் பணிகள் மறுநாள் காலைவரைஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இடைநேரத்தில் வாக்குப்பெட்டிகள் மற்றும் செலுத்தப்பட்டவாக்குகள் என்பவற்றின் பாதுகாப்பைஎமதுவாக்களிப்புமுகவர்கள் மற்றும் வாக்கெண்ணும் முகவர்கள் மிகக் கவனமாகஉற்றுநோக்கிஏதாவதுதவறுகள் காணப்பட்டால் அதுபற்றிஉடனடியாகதெரிவிக்கவேண்டும்.
எனவேஅன்பார்ந்தவாக்காளப்பெருமக்களே!எதிர்வரும் ஆகஸ்ட் 5ந் திகதிநீங்கள் அனைவரும் ஒன்றுதிரண்டுதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் மீன் சின்னத்திற்கும் எனது இலக்கம் ஆகிய6ம் இலக்கத்திற்கும்எதிராகஉங்கள் வாக்குகளைஅளிப்பதுடன் சகவேட்பாளர்களில் விருப்புஒழுங்கில் இன்னும் இருவருக்கும் உங்கள் வாக்குகளைஅளித்துஎங்களைஅமோகவெற்றியடையச் செய்யுங்கள். பாராளுமன்றஅங்கத்தவராகஉங்கள் முன் வருகைதந்துஅடுத்துஉரையாற்றவழியமைப்பீர்கள் என்றுநம்பிஎனதுஉரையைநிறைவுசெய்கின்றேன்.
நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்,வடமாகாணம்
செயலாளர் நாயகம்,தமிழ் மக்கள் கூட்டணி
இணைத்தலைவர்,தமிழ் மக்கள் பேரவை
தலைவர்,தமிழ் மக்கள் தேசிய கூட்டணி