• July 15, 2020
  • TMK Media

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கருத்துப் பரப்புரைக் கூட்டம் – திக்கம்

14.07.2020 அன்றுமாலை6.30 மணிக்கு
தலைவருரை
குரூர் ப்ரம்மா………………………
எனதருமைதிக்கம் வாழ் உறவுகளே!
திக்கம் வந்ததில் மகிழ்வடைகின்றேன். வடமாகாணமுதலமைச்சராக இருந்தபோதுபலதடவைகள் வந்துள்ளேன். இப்பொழுதுஎமதுபுதியகட்சிசார்பில்மீண்டும்உங்கள் ஆதரவைவேண்டிவந்துள்ளேன்.
தேர்தல்களுக்குமுன்னர் நடைபெறும் நடவடிக்கைகள் பலமனவருத்தத்தைத் தருகின்றன.
நண்பர் ஒருவர் இரு தினங்களுக்குமுன்னர் என்னிடம் கேட்டார். “சேர்!நீங்கள் வாக்காளர்களுக்குசாராயப் போத்தல்கள் விநியோகிக்கவில்லை. சாப்பாட்டுப் பார்சல்கள் கொடுக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஏதேனும் பணத்தொகை கூடக் கொடுக்கவில்லை. எப்படிதேர்தலில் வெற்றியீட்டப் போகின்றீர்கள்”என்று.
நான் அதிர்ந்துவிட்டேன்.
“எங்கள் மக்கள் தமதுபுனிதமானவாக்குகளைகேவலம் ஒருபோத்தல் சாராயத்திற்குவிற்றுவிடக் கூடியவர்களா?”என்றுகேட்டேன்.
“சேர்!எந்தஒருவாக்காளரும் நான் உங்களுக்குவாக்களிக்கநீங்கள் என்னதருவீர்கள்? என்றுதான் கேட்கின்றார்கள். இன்றையநிலைஅப்படித்தான்”என்றார்.
“அதாவதுஐந்துவருடகாலத்தில் என்னசெய்யப் போகின்றீர்கள் என்றுகேட்காதுஉடனேஎமக்குஎன்னதருவீர்கள் என்றுகேட்கின்றார்கள் அல்லவா?”என்றேன்.
“ஆமாம்!அதுவேதான்”என்றார்.
உடனேநான் “முன்னொருதேர்தலில் நடந்ததுஉங்களுக்குதெரியுமா? என்றேன்.
“என்ன?”என்றார்.
சென்ற 2015ம் ஆண்டுத் தேர்தலில் ஒருவேட்பாளர் ஒவ்வொருவாக்காளருக்கும் ரூபா. 5,000ஃஸ்ரீவீதம் பணம் கொடுத்துவெற்றிபெற்றதாகக் கூறப்படுகின்றது. ஆனால் அதுவல்லமுக்கியசெய்தி. வென்றுவெற்றிவாகை சூடி வந்தபாராளுமன்றஉறுப்பினர் தனதுவாக்காளர்கள் கோரியசிலகோரிக்கைகளைநிராகரித்தாராம். அப்போதுஅவர்கள் பாராளுமன்றஉறுப்பினரைக் கடிந்து“நாங்கள் தான் உங்களைதேர்ந்தெடுத்தோம். நீங்கள் எங்களுக்குதுரோகம் செய்கின்றீர்கள்.”என்றார்களாம்.
உடனேபாராளுமன்றஉறுப்பினர் கோபம் கொண்டு“நான் தானேஉங்கள் வாக்குகளைவாங்கிவிட்டேனே. வாக்காளர்களுக்கு இருக்கும் உரித்துக்களைநீங்கள் இழந்துவிட்டீர்கள். எனக்கும் உங்களுக்கும் இடையில் ஒருகடப்பாடும் இல்லை”என்றாராம்.
இதில் பலவிடயங்கள் அடங்கியுள்ளன.
1. பணம்,பொருள் போன்றவற்றைப் பெற்றுவாக்குகளைஅளிப்பதால் வாக்காளரின் தனித்துவமும்சுதந்திரமும்மறைந்துபோகின்றன. அவர் தமக்குகொடுப்பனவுகள் தருபவருக்குகடப்பாடுஉடையவர் ஆகின்றார்.
2. இவ்வளவுபணத்தைவாக்காளர்களுக்காகச் செலவழிப்பவர்கள் ஒருவியாபாரத்தில்பணமுதலீடுசெய்பவர்கள் போல் ஆகின்றார்கள்.அதாவதுஇலட்சம் இலட்சமாகவாக்காளர்களுக்குப் பணம் செலவிட்டுவிட்டுபதவிக்குவந்ததும் கோடிகோடியாகப் பணம் சம்பாதிக்கத் தலைபடுகின்றார்கள். எமதுபாராளுமன்றஅங்கத்தவர்களைகொமி~ன் வாங்கி,ஊக்கிகள்வாங்கி,பணம் சம்பாதிக்கப் பண்ணுகின்றவர்கள் வாக்காளர்கள் தான் என்பதைஎம் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
என்னுடையசிங்களநண்பர் ஒருவர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுபிரதிஅமைச்சர் ஆனார் 1977ம் ஆண்டில்.அவரைவாழ்த்திவிட்டுஅடுத்துஎன்னசெய்வதாகஉத்தேசம் என்றுகேட்டேன். உடனேஅவர் “ஏன் ஓய்! நான் தேர்தலில் செலவழித்தபணம் அத்தனையையும் மீண்டும் உழைக்கவேண்டாமா?”என்றுகேட்டார். அதைத்தான் அவர் செய்தார். செலவழித்ததொகையிலும் பார்க்கபலமடங்குபணம் சம்பாதித்தார். பாராளுமன்றஅங்கத்தவர் பதவியைப் பாவித்து இதைச் செய்தார். கடைசியில் என்னநடந்ததுதெரியுமா? ஜே.வி.பி யினரால் அவர் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.
பாராளுமன்றஅங்கத்தவர்கள் பணம் சேர்ப்பதைமக்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதைநாம் மறக்கக்கூடாது. பணம் கொடுக்காமல் கொடுப்பனவுகள் ஏதும் இன்றிநாம் வாக்காளர்களிடம் இருந்துஅவர்கள் வாக்கைஎப்படிப் பெறமுடியும் என்றுகேட்டநண்பருக்குப் பதில் அளித்தேன். நான் என் கட்சிபற்றித்தான் கூற முடியும் என்று கூறிபின்வருமாறுபதில் அளித்தேன் –
1. நாங்கள் மக்களிடம் பணம் கேட்டுவாங்கியேதேர்தல் செலவுகளைஈடுசெய்கின்றோம். அதன் காரணத்தினால் நாங்கள் மக்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் உங்கள் வாக்கைஏற்கனவேவாங்கியுள்ளோம் எமக்குஏதும் கடப்பாடில்லைஎன்றுநாங்கள் கூற முடியாது.அவர்கள் தான் எம்மைவாங்கியுள்ளார்கள். நாம் அவர்களுக்குசேவையாற்றியே ஆக வேண்டும்.
2. எங்கள் கட்சிவென்றால் வேட்பாளர்கள் நாம் ஒவ்வொருவரும் எமதுமாதாந்தபடிகளில் இருந்து10மூ மக்கள் சேவைக்குச் செலவழிக்கப் போகின்றோம். இது 5 வருடத்திற்குஒவ்வொருமாதமும் நாங்கள் மக்களுக்காகச் செலவுபண்ணப் போகும் பணம். நம்பிக்கைப்பொறுப்பிற்குகொடுக்கப்போகும் பணம்.
உடனேபெறுவதுஉசிதமாஅல்லதுஐந்துவருடங்களுக்குநம்பிக்கைப் பொறுப்புஊடாகப் பெறுவதுஉசிதமா?
நம்பிக்கைப் பொறுப்புஊடாகவருவதென்றால் தனிப்பட்டமுறையில் பணம் எமக்குக் கிடைக்காதுஎன்றுநீங்கள் சொல்லக்கூடும். ஆனால் எங்கள் நம்பிக்கைப்பொறுப்புஉங்களுக்குத் தேவைகள் இருக்கும் போதுஉங்களுக்கும் சேவைசெய்யும் என்பதைமறவாதீர்கள். ஆகவேரூ.5,000 மோரூ. 10,000 மோபணத்தைஅல்லதுசாராயபோத்தலையோ,உணவுப் பார்சலையோஉடனேபெற்றுவாக்களிப்பதிலும் பார்க்கஐந்துவருடங்களுக்குஉங்கள் எல்லோருக்கும் செயற்றிட்டங்கள்வரும் விதத்தில் எங்களுக்குவாக்களியுங்கள் என்றுஎன் நண்பரிடம் கேட்டுக் கொண்டேன்.
நாங்கள் சட்டத்தரணிகளாகவந்தபோதுஎமதுகட்சிக்காரர்களின் பணத்தைவேறாகவைத்துகண்டிப்பாககணக்குக் காட்டவேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டோம். வரும் பணங்கள்,நிதிகள் யாவும் எமதுகட்சிகாரர்கள் சார்பில் வந்தால் அவற்றைஎமதுசொந்தவங்கிக் கணக்கில் போட்டுவைக்கமுடியாது. அவற்றின் மேல் எமக்கிருக்கும் கடப்பாடுஒருநம்பிக்கைப் பொறுப்பாளரின் கடப்பாடு.எமதுசொந்தப் பணத்தையும் கட்சிக்காரர்கள் பணத்தையும் வேறுவேறாகவைத்திருக்கவேண்டியதுஎங்கள் பொறுப்பு. மக்கள் எங்கள் மீதுநம்பிக்கைவைத்துஅவர்கள் சார்பில் நடந்துகொள்ளஅவர்கள் எங்களைஅனுமதித்தகாரணத்தினால்த் தான் இந்தநம்பிக்கைபொறுப்புஎன்றகடப்பாடுஎங்களைவந்தடைந்தது.
பாராளுமன்றஉறுப்பினர் என்றபதவிநம்பிக்கைப் பொறுப்பைச் சார்ந்தஒருபதவி. அதுதிவ்யமானஒருபதவி. அதைஒருவியாபாரமாக்குவதுமகாபாவம். அதற்கானதண்டனையைநாங்கள் அனுபவித்தே ஆக வேண்டும். அதனாலத்தான் சிலதொழில்களைப் பவித்திரமானதொழில்கள் என்கின்றார்கள். அத் தொழில்கள் மீதுமக்கள் அலாதியானநம்பிக்கைவைத்திருக்கின்றார்கள். அந்தநம்பிக்கையைக் காப்பாற்றிவருவோமானால் எமதுதொழிலும் பவித்திரமானதொழிலாகும்.இனிமேலாவதுஅரசியல்வாதிகளின் தொழிலானதுஒருபவித்திரதன்மையைப் பெறவேண்டும்.
ஆகவேஅரசியலில் ஒருமறுமலர்ச்சியைக் கொண்டுவரவேண்டும் என்றுநாம் எண்ணுகின்றோம். பணம் கொடுத்துவேறுபொருள் கொடுத்துவாக்குகளைக் கேட்பதிலும் பார்க்ககொள்கைகள் மீதுநாட்டம் காட்டிஎமதுவாக்காளர்கள் எமக்குஆதரவுவழங்கநாம் இடமளித்துக் கொடுக்கவேண்டும்.
வடக்குகிழக்கில் நாங்கள் பொருளாதாரரீதியாகமிகவும் வலிமைகுன்றியமக்கட் கூட்டம் என்பதுஉண்மையே. ஆனால் நாங்கள் தமிழர்கள் என்றமுறையில் பெருமைகொண்டவர்கள். அடுத்தவேளைசாப்பிடவழி இல்லைஎன்றாலும் எங்கள் மானத்தைவிட்டுக் கொடுக்காதவர்கள். அண்மைக் காலங்களில்,அதுவும் 2009ன் பின் நாங்கள் ஏனோமாறிவிட்டோம். இனிஎல்லாம் முடிந்துவிட்டதுஎன்றஎண்ணமா?
எனதருமைமக்களே! எதுவுமேமுடியவில்லை. நியாயமானதீர்வுபெறும் வரையில் மீண்டும் மீண்டும் எமதுதமிழ்ச் சமூகம் கிளர்ந்தெழும் என்பதில் நம்பிக்கைகொள்ளுங்கள்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஅதன் கொள்கைகளில் இருந்துவிலகாமல் இருந்திருந்தால் முதலமைச்சர் பதவிக்காலம் முடிந்ததும் நான் நிம்மதியாகவீடுசேர்ந்துஎன் ஓய்வுவாழ்க்கையைத் தொடர்ந்திருப்பேன். கொள்கைபிறழ்வுஎந்தளவுக்குஒருஅசம்பாவிதத்தை,அழிவைஎம் மக்களுக்குக் கொண்டு வரப் போகின்றதுஎன்பதைஉணர்ந்தேநான் என் பயணத்தைத் தொடங்கவேண்டியஅவசியம் ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஎந்தெந்தக் கொள்கைகளைப் புறக்கணித்ததோஅவற்றைநாம் இப்பொழுதுஏந்திச் செல்கின்றோம். மொத்தத்தில் இன்றைய கூட்டமைப்புஎன்றுஅழைக்கப்படவேண்டியதுதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியையே. தம்பிபிரபாகரனால் தொடங்கப்பட்ட கூட்டமைப்பானதுகொள்கைகளைவிட்டுமரணப் படுக்கையில் இப்போதுதத்தளித்துக் கொண்டிருக்கின்றது. பாவம்! அவர்களை இத்துடன் வெளியேற இடம் விடுங்கள் என்பதேநாம் எம் மக்களிடம் விடும் கோரிக்கை. கொள்கைப் பற்றுள்ளதேசியக் கூட்டணியை கூட்டமைப்பின் இடத்தில் நிறுத்துங்கள் என்றுஎம் மக்களிடம் பணிவுடன் வேண்டுதல் விடுக்கின்றேன்.
ஆகவேநான் இன்றுஉங்கள் முன் வந்திருப்பதுமீன் சின்னத்திற்குவாக்குக் கேட்பதற்கு. சோழக் கொடிமௌனிக்கப்பட்டதால் இனிமேல் பட்டொளிவீசிப் பறக்கப்போவதுபாண்டியகொடியானமீன் கொடியே. மீன்கொடிக்குஉங்கள் வாக்குகளை இட்டுஎமதுஉறுப்பினர்களுக்குப் பாராளுமன்றம் செல்லஒருஅவகாசம் தாருங்கள். மக்கள் மீதுஅன்புடன் பற்றுறுதியுடன் கொள்கைகளின் அடிப்படையில் நாம் செயல்படுவோம் என்று கூறிஎனதுபேச்சை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்,வடமாகாணம்
இணைத்தலைவர்,தமிழ் மக்கள் பேரவை
செயலாளர் நாயகம்,தமிழ் மக்கள் கூட்டணி
தலைவர்,தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி