• July 17, 2020
  • TMK Media

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கருத்துப் பரப்புரைக் கூட்டம் – நெல்லியடி

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
கருத்துப் பரப்புரைக் கூட்டம்
கொலின் விளையாட்டுத் திடல்,நெல்லியடியில்
05.07.2020 அன்றுமாலை 06.30 மணிக்கு
தேசியக் கூட்டணிதலைவருரை
குரூர் ப்ரம்மா……………………..
எனதினியஎன் தமிழ்மக்களே!
அன்புள்ளமக்கள் உங்களுடனானகடந்தகாலத்தொடர்புகள் பலதடவைகள் இருந்துவந்துள்ளன. அதுநான் வடமாகாணமுதலமைச்சராகப் பதவிவகித்தகாலத்தில். இன்றுவருகைதருவதுஒருமுக்கியமானகோரிக்கையைஉங்கள் முன் வைக்க.எம் கட்சியின் சார்பில் மீன் சின்னத்திற்குநீங்கள் ஒவ்வொருவரும் தவறாதுவரும் தேர்தலில் வாக்களிக்கவேண்டும் என்றுகேட்பதற்காகவந்துள்ளேன். அதற்கானகாரணங்கள் இப்போதுமேலோங்கியுள்ளன.
இன்றுஒட்டுமொத்தவடகிழக்குத் தமிழ்ப் பேசும்மக்களின் நிரந்தரத் தொடர் இருப்பானதுகேள்விக் குறியாகியுள்ளது. ஒருபக்கத்தில் சர்வாதிகாரத்திற்கானஅடித்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் வருந் தேர்தலில் அந்தசர்வாதிகாரத்தைநடைமுறைப்படுத்தஉங்களிடம் அனுமதிகேட்டுசிலவேட்பாளர்கள்வந்துள்ளார்கள். 19வது திருத்தச் சட்டத்தைநீக்கவேண்டும் என்றும் திரும்பவும் அதீதஅதிகாரங்கள் கொண்டஒரு ஜனாதிபதிஉருவாகவாக்களிக்கவேண்டும் என்றும் இவர்கள் கேட்கின்றார்கள். வெளிப்படையாகஅவ்வாறுஅவர்கள் கேட்காவிட்டாலும் அவர்களதுகட்சித் தலைமைகள் அவர்களைக் களத்தில் இறக்கியிருப்பதுமுக்கியமாக 19வது திருத்தச் சட்டத்தைநீக்குவதற்காகவேஎன்பதுவெளிப்படை.பொல்லைக் கொடுத்துஅடிவாங்குவதெனக் கூறுவார்கள்.அதுபோன்றதொருகாரியம் தான் இது. பெரும்பான்மை இனத்தவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசியக் கட்சிகளுக்குவாக்களித்தீர்களானால் இதுதான் நடக்கும். உங்கள் வாக்குகளைப் பெற்றுஉங்களைஅடிமைப்படுத்திவிடுவார்கள்.
ஐக்கியதேசியக் கட்சிஅதற்கு இடம் கொடுக்குமா? என்றுசிலர் கேட்பார்கள்.
ஆனால் நீங்கள் கடந்த 5 வருடகாலநல்லாட்சிபற்றிசிந்தித்துப் பார்க்கவேண்டும். கோத்தாபயவும்,மகிந்தவும், இரணிலும், சஜித்தும் ஒரேகுட்டையில் பிறந்தசிங்களமட்டைகள் என்பதைமறந்துவிடாதீர்கள். சென்றஐந்துவருடகாலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புமலைபோல் நம்பியபுதியஅரசியல் யாப்பை இந்தாதருகின்றோம் என்று கூறித்தாமதப்படுத்திஏமாற்றியதேஅன்றிஎதுவும் நடக்கவில்லை. இவர்களுக்குவேண்டியதுசிங்களஏகாதிபத்தியமேஅன்றிதமிழர்கள் நல்வாழ்வுஅன்று.
சிங்களத் தேசியக் கட்சிகளுக்குதேர்தல் காலங்களில் எமதுவாக்குகள் வேண்டும். அதன் பின் அவர்கள் சார்பில் யாராவதுதமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களுக்குத் தனிப்பட்டசலுகைகளைக் கொடுத்துசரிப்படுத்திவிடுவார்கள். தேர்தலுக்காக இவர்கள் செலவழித்தபணம் அவ்வளவையும் கிடைக்கவைத்துமேலதிகமாகவும்வருமானங்கள்வரச்செய்துஎமதுபாராளுமன்றப் பிரதிநிதிகளைவாய்மூடச் செய்துவிடுவார்கள். ஆகவேபெரும்பான்மைஇன மக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்காதீர்கள். அவர்கள்தரும் சலுகைகளைஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அவர்களுக்குவாக்களிக்காதீர்கள். காரணம் தமிழ் மக்களிடம் கொள்ளைஅடித்தபணமேஎம்மிடம் திரும்பவருகின்றது. அதற்குநன்றியறிதல் தேவையில்லை. எமதுதமிழ் வேட்பாளர்களுக்குதமதுசிங்களத் தலைவர்களின் நெறிப்படுத்தலுக்குமாறாகஇக் கட்சிகளுடன் சேர்ந்துஎதையும் செய்யமுடியாது.
பொருளாதாரநன்மைகளைப் பெற்றுத்தருவார்களேஎன்றுநீங்கள் கூறலாம். அதுதான் இல்லை. தாம் நினைக்கும் திட்டங்களை,தமக்குநன்மைதரும் திட்டங்களைமட்டுந்தான் அவர்கள் உங்களுக்குக் கொடுக்கமுன்வருவார்கள். அதாவதுசிங்களப் பெரும்பான்மையினம் நன்மைபெறவல்லதிட்டங்களையேவகுப்பார்கள். செயல்ப்படுத்துவார்கள். வடமாகாணத்தில் இருக்கும் குளங்கள் அனைத்தையும் தூர் அகற்றிசுத்தப்படுத்திஅணைகட்டவேண்டும் என்றுநாங்கள் கேட்டதற்குபணம் இல்லைஎன்றார்கள். அதை இந்தியஅரசாங்கத்தின் உதவிகொண்டுசெய்யமுற்படுகையில் அதற்குஅனுமதிஅளிக்காமல் விட்டார்கள்.
மேலும் நாம் மரக்கறி வகைகள்,பழங்கள் ஆகியவற்றை இங்குபயிரிட்டுஅவற்றைவெளிநாடுகளுக்குஏற்றுமதிசெய்யக் கேட்டபோதுசகலஅறிக்கைகளும் எமக்குசார்பாக இருந்தபோதுமத்தியஅரசின் காணிசெயலாளர் நாயகம்மட்டும் அந்தசெயற்றிட்டத்திற்குஅனுமதிவழங்காமல் விட்டுவிட்டார்.
ஆகவேதேசியக் கட்சிகள் எமக்குவேலைதருவார்கள்,பொருளாதாரமேம்பாட்டைத் தருவார்கள் என்றுஎண்ணிஅவர்களுக்குவாக்களிப்பதுவீண் வேலையாகும்.
அதேபோல் அவர்களின் கைப்பொம்மைகளாகஆடும் நுPனுP போன்றகட்சிகளும் தமக்குநன்மைதேடுவார்களேஒளியமக்கள் நலம் பார்க்கமாட்டார்கள். காரணம் அவர்களைத்தமக்குச்சார்பாகபக்கத்தில் வைத்திருக்கபெரும்பான்மையினத் தேசியக் கட்சிகள் பார்க்கின்றனவேதவிரதமிழ் மக்கள் வளர்வதை,மேம்படுவதை,முன்நகர்வதைஅக் கட்சிகளைஅடக்கிஆளும் பெரும்பான்மை இனத்தவர் விரும்பமாட்டார்கள்.
அடுத்துதமிழ் தேசியக் கூட்டமைப்பு. இவர்களுக்கும் தேசியக் கட்சிகளின் அடிமைக் கட்சிகளுக்கும் இடையில் கடந்தஐந்துவருடங்களில் எந்தவிதவித்தியாசமும் இருக்கவில்லைஎன்பதைநீங்கள் உணர்ந்திருப்பீர்கள். தம்பிபிரபாகரன் சுட்டியதமிழ் தேசியக் கூட்டமைப்புஎன்றவீடு இப்பொழுதுசிதைந்துபோயுள்ளது. கூரையுடுவானத்தைப் பார்க்கலாம் எந்தநாளும்அந்தவீட்டினுள் போராட்டங்கள்,குழிபறிப்புக்கள்,கழுத்தறுத்தல்கள்.முதலில் அந்தக் கூட்டில் ஒன்றிணைந்தகட்சிகள் பலஅதனுள் இருந்துவெளியேறிவிட்டார்கள். மிகுதி இருந்தபங்குக் கட்சிகள் சிலதமக்குள் பிரிந்துவிட்டனர். ஆகவேதம்பிபிரபாகரன் கைநீட்டியதமிழ் தேசியக் கூட்டமைப்புஇப்பொழுது இல்லைஎன்பதுதான் உண்மை. தமக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்கும் அவர்களைஅதாவதுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைதொடர்ந்துஆதரிப்பதில் எதுவிதநன்மையும் இல்லை.
அடுத்துசுயேட்சைக்கட்சிகள் 14 போட்டியிடுகின்றன. அவையார் யாரோசிலரின் தனிப்பட்டநன்மைகளுக்காகப் போட்டியிடுகின்றனர். தமிழ் மக்களின் எதிர்காலத்தைநோக்கியல்ல. அவர்கள் எவருக்கும் வாக்களிக்காதுவிடுவதுதான் நல்லது.
எனவேதமிழ்த் தேசியத்தைக் காப்பாற்றமுன்வந்திருக்கும் கட்சிகள் இரண்டு. ஒன்றுஎம்முடையது. அடுத்ததுசைக்கிள்காரர்களின்.அன்றிலிருந்துஅவர்களுக்குசைக்கிளேமுக்கியம்.எமதுமக்கள் அல்லஎன்பதுஎன் கருத்து. ஆகவேஅந்த இளைஞர்களைஅவர்கள்வயதுவந்தபின்நீங்கள்பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுதுஎங்கள் மீன் சின்னத்திற்குவாக்களியுங்கள் என்றுகேட்கவேநாங்கள் இங்குவந்துள்ளோம்.
எம்மைப் பொறுத்தவரையில் அரசியல்,சமூகவியல்,பொருளாதாரம் மூன்றிலும் நாங்கள் கொள்கைப் பற்றுள்ளவர்கள். எமதுமக்களின் நல்வாழ்வுக்காகப் பலசெயற்றிட்டங்களைஎமதுபுலம் பெயர் உறவுகளுடன் சேர்ந்துநாம் தீட்டியுள்ளோம். அரசியல் சிந்தனைகளைமுன்வைப்பதோடுசமூகப்,பொருளாதாரஅபிவிருத்திபற்றியும் நாம் சிந்தித்துசெயலாற்றஉள்ளோம். அரசியலில் தன்னாட்சி,சமூகத்தில் தற்சார்பு,பொருளாதாரத்தில் தன்னிறைவுஎன்றகுறிக்கோள்களைமுன்வைத்துஉங்கள் முன் வந்துள்ளோம்.
அரசியல் ரீதியாகஉலகநாடுகளின் அனுசரணையுடன் இலங்கையில் மக்கள் தீர்ப்பொன்றைவடகிழக்குமாகாணங்களில் நடத்திமக்கள் அங்கீகாரம் பெற்று,சர்வதேசஅனுசரணைபெற்று,ஒருதன்னாட்சிஅரசியல் பின்னணியைஉருவாக்குவNதுஎமதுதிட்டம்.நாம் பொருளாதாரரீதியாகபுலம் பெயர் உறவுகளின் உதவியுடன் தன்னிறைவுகாண இருக்கின்றோம். ஏற்கனவேஎமதுநம்பிக்கைப் பொறுப்புக்கள் தமதுவேலைகளைச் செவ்வனேசெய்துவருகின்றன. அத்துடன் நாம் மக்களின் மனோநிலையைத்திடப்படுத்தி“எம்மால் முடியும்”என்றஉணர்வைஅவர்களிடையேவலுஏற்கச் செய்ய இருக்கின்றோம்.
எமதுகட்சிஒருமுழுமையானகட்சி.ஆகக் கூடியகட்சிகளைதன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் ஒரு கூட்டுஎன்றால் அதுஎமதுதமிழ் மக்கள்தேசியக் கூட்டணியாகும். வடக்கையும் கிழக்கையும் இணைத்துப் பயணிக்கும் கட்சிஎமதுதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாகும். செயற்றிட்டங்கள்,கொள்கைகள் கொண்டகட்சிஎமதுதேசியக் கூட்டணியாகும். அரசியல் அனுபவம் மிக்கவர்களையும் புது முகங்களையும் சேர்த்துதேர்தலில் நிறுத்தியிருக்கும் கட்சிஎமதுதேசியக் கூட்டணியாகும். முரண்பாடுகள் இல்லாமல் எழுத்து மூல உடன்பாட்டின்வழியில்பயணிக்கும் கட்சிஎமதுதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாகும். சோழச் சின்னம் மௌனித்துப் போகபாண்டியசின்னமானமீன் சின்னம் வலுவுடன் எழுந்துநின்றுஎம்மக்களைக் காப்பாற்றஉறுதுணையாக இருக்கப் போவதுஎமதுதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் மூலமாகவே.நீங்கள் யாவரும் தவறாமல் தேர்தல் நாளான்றுஅதிகாலையிலேயேஎழுந்துஆயத்தமாகிதேர்தலில் மீனுக்குவாக்களிக்கவேண்டுகின்றேன். எமதுகூட்டுக் கட்சிசுயநலம் நீத்து,பொதுநலம் காத்துதமிழ் மக்களின் வருங்காலத்தைவளமானஒரு இலக்கைநோக்கிஎடுத்துச் செல்லும் என்று கூறிஎன் பேச்சைமுடித்துக் கொள்கின்றேன்.
நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்,வடமாகாணம்
இணைத்தலைவர்,தமிழ் மக்கள் பேரவை
செயலாளர் நாயகம்,தமிழ் மக்கள் கூட்டணி
தலைவர்,தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி