• July 17, 2020
  • TMK Media

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கருத்துப் பரப்புரைக் கூட்டம் – புத்தூர்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
கருத்துப் பரப்புரைக் கூட்டம்
புத்தூர்
11.07.2020 அன்றுமாலை07.00மணிக்கு
தலைவருரை
குரூர் ப்ரம்மா……………………….
அன்புள்ளபுத்தூர் மக்களே!
மீண்டும் புத்தூர் வரக் கிடைத்ததில் மகிழ்வடைகின்றேன். எமது கூட்டணிக் கட்சிக்குநல்லவரவேற்பு இங்கு இருப்பதாகக் கேள்விப்பட்டேன். உங்கள் அனைவரையும் தவறாதுமீன் சின்னத்திற்குவாக்கிடுமாறுகேட்டுக் கொள்கின்றேன். உங்கள் மூலமாகஎமதுதமிழ் மக்களுடன் ஒருமுக்கியமானவிடயத்தை இத்தருணத்தில் பகிர்ந்துகொள்ளலாம் என்றுநினைக்கின்றேன்.
அரசாங்கத்திடம் அமைச்சுப்பதவிகளைபெற்றுக்கொள்ளப்போவதாகதமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் திரு.சுமந்திரன் அவர்கள் அறிவித்துள்ளதாகவெளிவந்துள்ளஊடகசெய்திகள் எனக்குப்பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. அவர் மிகவும் தெட்டத்தெளிவாக இதனைச்சொல்லியிருக்கின்றார். அத்துடன் தாம் அமைச்சுப்பதவிகளைப்பெறுவதற்குதமிழ் மக்கள் தமக்குஆணைதரவேண்டும் என்றுதுணிந்துவெட்கம் இல்லாமல் கேட்டிருக்கின்றார். எமதுதமிழ் மக்களைதிரு.சுமந்திரன் அவர்கள் எந்தளவுக்குமுட்டாள்கள் என்றும், சுய கௌரவம் இல்லாதவர்கள் என்றும் ஏமாளிகள் என்றும் நினைக்கின்றார் என்பதையேஇது எடுத்துக் காட்டுகின்றது.
அத்துடன் முன்னையஆட்சியிலும் அமைச்சுப்பதவிகளைபெற்றிருந்திருக்கவேண்டும் என்றகருத்தையும் அவர் கூறி இருக்கின்றார். இது எந்தளவுக்குசரணாகதிஅரசியல் சிந்தனைக்குள்ளும் சலுகைஅரசியல் சிந்தனைக்குள்ளும் கடந்தகாலத்தில்தமிழ் தேசிய கூட்டமைப்புசெயற்பட்டிருக்கின்றதுஎன்பதைத் தெட்டத் தெளிவாகஎடுத்துக் காட்டுகின்றது. இதனால் எந்தளவுக்கு இனஅழிப்புமற்றும் போர்குற்றங்களுக்கானசர்வதேசவிசாரணைஒன்று இடம்பெறுவதைதடுத்துநிறுத்தும் வகையிலும் கூட்டமைப்பு இதுகாறும் செயற்பட்டிருக்கின்றதுஎன்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் அத்தகையஒருபெரும் துரோகத்துக்கும்காட்டிக்கொடுப்புக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புதயாராகிவருகின்றதுஎன்பதைதிரு. சுமந்திரன் அவர்களின் பேச்சுஎடுத்துக் காட்டுகின்றது. அவர் அபிவிருத்திக்காகஅமைச்சுப்பதவிகளைப் பெறவேண்டும் என்று கூறுவதுவெறும் முதலைக்கண்ணீர் வடிப்பதாகும்.தமிழ் மக்களின் அபிவிருத்திமற்றும் பொருளாதாரஅபிவிருத்தியில் உண்மையானஅக்கறை இருந்திருந்தால் வடமாகாணசபைஆட்சியில் இருந்தபோதுமுதலமைச்சர் நிதியத்தைஏற்படுத்திவெளிநாடுகளில் இருந்துநிதியைப்பெறுவதற்குதிரு.சம்பந்தனும் திரு.சுமந்திரனும் எனக்குஒத்துழைப்புவழங்கி இருப்பர்.முதலமைச்சர் நிதியத்தைநாம் பெறஅவர்கள் எந்தவிதத்திலும் உதவிசெய்யவில்லை. மாறாகமுறைமுகஎதிர்ப்புக்களையேதெரிவித்துவந்தனர்.
திரு. சுமந்திரனின் கூற்றில் முரண்பாடு இருக்கிறது. இது எந்தளவுக்குஅவரின் கண்களைஅமைச்சுபதவிகள் மறைக்கின்றனஎன்பதைஎடுத்துக் காட்டுகின்றது. அதாவதுஅரசாங்கத்துடன் இணைந்துஅமைச்சுப்பதவிகளைபெற்றமைக்காகதிரு.ஜி. ஜி பொன்னம்பலம் அவர்கள் பின்னர் வருந்தியதாகத்தெரிவிக்கும் திரு.சுமந்திரன்,தாங்கள்அமைச்சுப்பதவிகளைப்பெறப்போவதாகக் கூறுகின்றார்.
ஒருபெரும் இனப்படுகொலையைநிகழ்த்தியஅரசாங்கத்துக்குஎதிராகநிலத்திலும் புலத்திலும் எமதுமக்கள் அல்லும் பகலும் போராடும்போதுதம்மைக்காப்பாற்றும் வகையில் அமைச்சுப்பதவிகளைப்பெற்றுஅரசாங்கத்துடன் இணைவதற்குஎவ்வாறுதிரு.சுமந்திரனுக்குசிந்தனைதோன்றியதோஎன்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
அரசாங்கத்துடன் இணைந்துஅமைச்சுப்பதவிகளைப்பெற்றுஅமைச்சரவையில் அங்கம்வகித்துஎவ்வாறுஎமதுமக்களுக்கான இன அழிப்புக்குநீதிபெறுவார்கள் என்பதையும் எவ்வாறுபொறுப்புக்கூறல் பொறிமுறையை ஐ. நா ஊடாகமுன்னெடுப்பார் என்பதற்கானஅவரின் திட்டத்தையும் எமதுமக்கள் முன் திரு.சுமந்திரன் அவர்கள் வெளிப்படுத்தவேண்டும். அதாவது இன அழிப்புக்கு இனிமேல் நான் நீதிகேட்கமாட்டேன். பொறுப்புக்கூறல் பொறிமுறையைநான் ஐ.நா ஊடாகமுன்னெடுக்கமாட்டேன் என்றுஅவர் இனிவெளிப்படையாகக் கூறிஎம் மக்களிடம் வாக்குக் கேட்கவேண்டும்.
கடந்தகாலங்களில் டக்ளஸ் தேவானந்தா,கருணா,பிள்ளையான் போன்றவர்களும் அரசாங்கத்துடன் இணைந்துஅமைச்சர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்களால் எதைச்சாதிக்கமுடிந்தது? திரு.சுமந்திரன்மட்டும் அரசாங்கத்தில் அமைச்சர் ஆகினால் எமதுமக்களின் அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்கபோகின்றாறா?டக்ளஸ் தேவானந்தா,கருணா,பிள்ளையான் ஆகியோருக்கும் திரு.சுமந்திரனுக்கும் இடையில் வித்தியாசம் இல்லைஎன்று இப்போதுஆகிவிட்டது.இதேடக்ளஸைத்தான் திரு.சுமந்திரன் முன்னையகாலங்களில் வெகுவாகவிமர்சித்தார். அவரின் கட்சியினர் டக்ளஸை துரோகிஎன்றார்கள். இப்போதுஅவரின் கட்சிதிரு. சுமந்திரன் பற்றிஎன்ன கூறப்போகின்றது?
போராடாதஎந்த இனமும் விடுதலைபெறப்போவதில்லைஎன்பதுஉலகநியதி. உண்மைஅப்படி இருக்க,சலுகைகளுக்கும்,பதவிகளுக்கும்,சரணாகதிஅரசியலுக்கும் எமதுமக்களை மூளை சலவைசெய்யமுயலுகின்றார் திரு.சுமந்திரன்.
ஆகவே,எனதருமைமக்களே,தமிழ் தேசிய கூட்டமைப்புக்குவாக்களித்தால் எதிர்கட்சிதலைவர் பதவிக்காககன்னியாவென்னீரூற்றைபறிகொடுக்கமுன்வந்ததுபோல் நாளைஅமைச்சுப்பதவிகளுக்காககோணேஸ்வரத்தையும் நல்லூரையும் பறிகொடுக்கத் தயங்கமாட்டார்கள் இவர்கள். நீங்கள் தீர்க்கமானமுடிவெடுக்கும் காலம் வந்துவிட்டது. உங்களைசுற்றிஒருபெரும் சதிவலைபின்னப்பட்டுவருகின்றது. அதைமுறியடித்துதமிழ் தேசியக் கூட்டமைப்புஒருஆசனம் கூடப் பெறமுடியாமல் செய்துஒருபெரும் வரலாற்றுத்தீர்ப்பினைநீங்கள் அக் கட்சிக்குஅளித்துஅதர்மத்துக்குசாவுமணிஅடிக்கும் காலம் வந்துவிட்டது. தம்பிபிரபாகரன் ஒன்றிணைத்தஐந்துகட்சித் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போதுகுற்றுயிராகக் கிடக்கின்றதுஎன்பதைஎல்லோரும் ஏற்கின்றார்கள்.
வெறும் அரசியல் போட்டிகாரணமாகநான் இந்தக்கருத்துக்களைவெளிக் கொண்டுவரவில்லை. வரலாற்றைப் பாருங்கள். அந்தஅனுபவத்தில் இருந்துஉண்மையைஉணர்ந்துகொள்ளுங்கள். திட்டமிட்டுஎமதுமக்களை இனஅழிப்புசெய்தஒருஅரசாங்கத்திடம் இருந்து இந்தநாட்டில் இனப்பிரச்சினைஎன்றஒன்றே இல்லைஎன்றுதிட்டவட்டமாக கூறியுள்ளஅரசாங்கத்திடம் இருந்துதமிழ் தேசிய கூட்டமைப்புஅமைச்சுக்களைப்பெறுவதால் எமக்கானஅதிகாரத்தையோ,நீதியையோஅல்லதுஅபிவிருத்தியையோஅரசுதரும் என்றுஎதிர்பார்க்கமுடியுமா?
எதிர்க்கட்சித்தலைவர் பதவியைபெறுவதற்கும் இதேமாதிரியானகதைகளைத்தான் சொன்னார்கள். ஆனால்,எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்காலத்தில் வாய் தவறி கூட எமதுமக்களுக்கு ‘இன அழிப்பு’ நடந்ததுஎன்றுஎங்கேயாவது கூறினார்களா? மாறாக, ஐ. நா மனிதஉரிமைகள் சபையில் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்குமட்டுந்தான் அதனைப்பயன்படுத்தினார்கள்.ஏற்கனவேநாம் எமதுகாணிகளை இழந்துவிட்டோம். மேலும் காணிகள் பறிபோகின்றன. தமிழ்க் கைதிகள் தொடர்ந்துசிறையில் உள்ளார்கள். இராணுவத்தொகை இன்றுவடக்கிலும் கிழக்கிலும் பெருகிவருகின்றது. பௌத்தமயமாக்கலும் சிங்களமயமாக்கலும் சிங்களக் குடியேற்றங்களும் துரிதமாகநடந்துகொண்டிருக்கின்றன. இவர்கள் அமைச்சர்களாகவந்தால் தமதுஅமைச்சுக்களைக்காப்பாற்றமௌனமடந்தைகளாக இருப்பார்கள். விரைவில் வடகிழக்கின் தமிழ் மக்கட் தொகை கூனிக் குறுகிவிடும்.
ஆகவே இன்றுஎன் மக்கள்முன் இந்தவிடயத்தைஅவசரமாகக் கூற வேண்டியிருந்ததால் இந்தவிபரங்களைநான் உடனுக்குடனேயேபகிர்ந்துகொள்கின்றேன்.நீங்கள் யாவரும் வரும் ஆகஸ்ட் 5ந் திகதிகாலையிலேயேவாக்குச் சாவடிக்குச் சென்றுமீன் சின்னத்திற்குஉங்கள் புள்ளடிகளைப்போடுவீர்கள் என்றநம்பிக்கையுடன் எனதுசிற்றுரையைமுடித்துக்கொள்கின்றேன்.
நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்,
முன்னாள் முதலமைச்சர்,வடமாகாணம்
இணைத்தலைவர்,தமிழ் மக்கள் பேரவை
செயலாளர் நாயகம்,தமிழ் மக்கள் கூட்டணி
தலைவர்,தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி