• July 18, 2020
  • TMK Media

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிகருத்துப்பரப்புரைக் கூட்டம் முறிகண்டி – சாந்தபுரம்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
கருத்துப்பரப்புரைக் கூட்டம்
முறிகண்டி – சாந்தபுரம்
18.07.2020 அன்றுமாலை 4.30 மணிக்கு
தலைவருரை
குருர் ப்ரம்மா…
அன்புள்ளசாந்தபுரம் வாழ் மக்களே,மற்றும் சகோரசகோதரிகளே!
உங்களை இன்றுசந்திப்பதில் மகிழ்வடைகின்றேன். முறிகண்டிபிள்ளையாரிடம் வந்துபோகின்றவன் நான். அவன் அருளால் அவன் தாள் வணங்கி இந்தப்பேச்சைநான் தொடங்குகின்றேன். தேர்தல் விரைவில் வர இருக்கின்றது.
வடகிழக்குமாகாணங்களைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலானதேர்தல். உரிமைஅரசியலுக்கும் சலுகைஅரசியலுக்கும் இடையிலானதேர்தல். தமிழ் தேசியஅரசியலுக்கும் தமிழ் தேசியநீக்கஅரசியலுக்கும் இடையிலானதேர்தல். உண்மை,நேர்மைஆகியவற்றின் அடிப்படையில் நாம் இந்தத் தேர்தலைஎதிர்கொள்கின்றோம். ஒருதனிமனிதனின் விருப்புவெறுப்புக்களின் பால் அல்லாமல் புத்திஜீவிகள் பலரையும் உள்வாங்கிநன்குஆராய்ந்து கூட்டுமுடிவுகளைஎடுத்துநாம் செயற்படவிருக்கின்றோம். அதற்குஏற்பகட்டமைப்புக்கள் உருவாக்கப்படுவன. அதற்கானஅங்கீகாரத்தைக்கோரியேஎமதுமக்களானஉங்களிடம் வாக்குக் கேட்டுவந்திருக்கின்றோம். எமக்குஅதிகாரம் நீங்கள் வழங்கினால்த்தான் நாங்கள் உங்களுக்குசேவைசெய்யமுடியும்.
தனித்துதேர்தலைஎதிர்கொள்வதுமக்களின் வாக்கைசிதறடிப்பதற்குவழிகோலாதாஎன்றுசிலர் கேள்விகேட்கின்றர்கள். நாங்கள் தனித்துக் கேட்கவில்லை.ஐந்துகட்சிகள் கூட்டணியாகவேகேட்கின்றோம்.ஆனால்,அவர்களிடம் நான் கேட்கவிரும்புவதுஎன்னவெனில்,கடந்தகாலத்தில் 15, 22 எனபாராளுமன்றஉறுப்பினர்களைதமிழ் தேசியக் கூட்டமைப்புக்குகொடுத்துஎதனைசாதிக்கமுடிந்தது? சென்றதடவை 100 சதவீதம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைஎமதுமக்கள் தெரிவுசெய்திருந்தால் என்னநடந்திருக்கும்? ஒற்றைஆட்சிக்கும்,பௌத்தத்தின் முன்னுரிமைக்கும்,வடக்கு-கிழக்குபிரிப்புக்கும் தமிழ் மக்கள் 100 சதவீதஅங்கீகாரம் கொடுத்துவிட்டார்கள் என்றல்லவாஆகியிருக்கும்.? வாக்காளர்கள் சிந்தித்துசெயலாற்றவேண்டும்.அத்துடன்,பலதடவைகள் ஆட்சிகவிழ்ப்புக்கள் நடந்தபோதுஎமதுஉறுப்பினர்களின் ஆதரவு இன்றிஆட்சியமைக்கமுடியாதுஎன்றநிலைவந்தபோதுஎம்மக்களுக்குஎதனைஅவர்கள் பெற்றுக்கொடுத்தார்கள்? குறைந்ததுஎமதுதமிழ் அரசியல் கைதிகளையாவதுவிடுவித்துக் கொடுத்தார்களா? எமதுமக்களுக்குஎதுவுமேகிடைக்கவில்லை. தனிப்பட்டமுறையில் அவர்களுக்குஎல்லாமேகிடைத்தது.எமதுதலைவர்களுக்குபதவிகளும் பகட்டுகளும் கிடைத்தன. இதனால்த்தான் பாராளுமன்றம் செல்பவர்கள் ஒருவர் இருவரானாலும் எமதுமக்களுக்காகஉண்மையாகநேர்மையுடன் உழைப்பவர்களாக இருக்கவேண்டும்என்றுகருதுகின்றோம்.எமதுமக்களின் பிரதிநிதிகளாகபோலியாகத் தம்மைச் சித்திரித்துஇவர்கள் அரசாங்கத்தின் முகவர்களாகசெயல்படுவதைத்தடுப்பதற்காகநாம் களம் இறங்கியுள்ளோம்.
அதேவேளைஏற்கனவே கூறியவாறுநாம் தனித்து இந்ததேர்தலில் இறங்கவில்லை. வடக்குகிழக்கைச் சேர்ந்த5 கட்சிகளின் கூட்டாகவே இறங்கியுள்ளோம். இதுபலமானஒரு கூட்டணி. தமிழ்த் தேசிய கூட்டமைப்பைவிடபலமானபெரிய கூட்டணி. மேலும் ஒத்தகொள்கையுடையசிலகட்சிகளை இணைப்பதற்குமுயன்றிருந்தோம். அவர்களின் சுயநலம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதேவேளை,வாக்குகளைப் பிரிப்பதற்காகஎன்றேசிலசக்திகள்திட்டமிட்டுப்பலரைவட-கிழக்கில் இறக்கியிருக்கின்றார்கள். நாங்கள் தேர்தலில் முன்னிற்காவிட்டாலும் கூட இது நடைபெற்றிருக்கும். மூன்றுவருடங்களில் ஒரேயொருதடவைபாராளுமன்றத்தில்பேசுவோர் போன்ற 15 பேரைவிடமக்கள் மீதுகரிசனையுடையஒருவரேசிறந்தவர். அம்பாறையில் நாம் போட்டியிடாமைக்குவாக்குகளைப் பிரிக்கக்கூடாதுஎன்பதேகாரணம். எம் மக்கள் எங்களுக்குஅமோகவெற்றியைஈட்டித் தந்தால்நாங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தற்போதையஅரசியல் கலாசாரத்தைமுற்றாகமாற்றிவிடுவோம்.
அன்புக்குரியமக்களே.
நீங்கள் யாவரும் ஆகஸ்ட் 5 அன்றுகட்டாயமாகவாக்களிப்பதுமிகவும் அவசியம். அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். நீங்கள் வாக்களிப்பதைதடுப்பதற்குபல்வேறுசூழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கொரோனாபற்றிஉளவியல் ரீதியாகமக்களைஅச்சுறுத்திவாக்களிப்பைகுறைக்கபல்வேறுஏற்பாடுகள் நடைபெறுவதைநாம் அவதானிக்கின்றோம்.அளவுக்குஅதிகமாக இராணுவம் இங்குகொண்டுவரப்படுகின்றது. புதியஅறிவிப்பாககுற்றச் செயல்களைதடுத்தல் என்றபோர்வையில் கிராமஉத்தியோகத்தர் மட்டத்தில் மூன்று இராணுவவீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இராணுவமயமாக்கல் தீவிரம் அடைந்துள்ளது.
கொரோனாதீவிரமாகபரவுவதற்குதொற்றுநோய் தடுப்புமுறை இராணுவமயமாக்கப்பட்டதும்,அரசியல் இலாபத்தைஈட்டும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டமையுமேகாரணமாகும் என இப்போதுதெரியவந்துள்ளது.கொரோனாகட்டுப்பாட்டுப்பொறுப்புமுற்றுமுழுதாகச்சுகாதாரதுறையினரிடம் வழங்கப்பட்டுவிஞ்ஞானரீதியிலானநடவடிக்கைகள் பின்பற்றப்பட்டிருக்கவேண்டும்.ஆரம்பத்தில் இருந்தே இது நடந்தேறியிருக்கவேண்டும்.
யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைமுதுநிலைவிரிவுரையாளர் கலாநிதிகுருபரன் குமரவடிவேல் தனதுபதவியில் இருந்து ராஜினாமாசெய்யும் அளவுக்கு இராணுவத்தினரின் செல்வாக்குபின்னனிகாரணமாக இருப்பதுஎத்தகையஒருஆபத்தானநிலைமைக்குள் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைகாட்டுகின்றது.
1996ஆம் ஆண்டுயாழ் நாவற்குழியில் காணாமல்போன 24 இளைஞர்களில் மூன்று இளைஞர்களின் ஆட்கொணர்வுமனுத் தொடர்பானவிசாரணையில் பாதிக்கப்பட்டஉறவினர்களின் சார்பில் கலாநிதிகுருபரன் முன்னிலையாகி இருந்தமையை இராணுவம் விரும்பி இருக்காமைஅவர் தனதுபதவியை ராஜினாமாசெய்யும் அளவுக்குகொண்டுவந்திருக்கிறது.
யாழ் பல்கலைக்கழகச் சட்டத்துறைவிரிவுரையாளர் ஒருவர்,எந்தஅடிப்படையில் வழக்குஒன்றில் முன்னிலையாகமுடியுமென இலங்கை இராணுவத் தரைப்படையின் சட்டப் பணிப்பாளர் ஈஎஸ்.ஜயசிங்கேகடந்தஆண்டுஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதிகொழும்பில் உள்ளபல்கலைக்கழகமானியஆணைக்குழுவுக்குஅனுப்பியிருந்தகடிதம் ஒன்றில் கேள்விஎழுப்பியிருந்தார். இதனையடுத்துபல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவின் அழுத்தத்துக்குஅமையயாழ் பல்கலைக்கழகபேரவைகுருபரன் சட்டத்தொழிலில் ஈடுபடுவதற்குதடைசெய்திருந்தது.
உலகின் ஏனைய நாடுகளில் இப்படியானஒருநிலைமை இல்லாதபோதிலும் முற்றுமுழுதாக இராணுவநலன்களைபாதுகாப்பதற்குமுன்னுரிமைஅளித்துமேற்கொள்ளப்பட்டஅறிவுறுத்தல்களுக்குபல்கலைக்கழகபேரவைஅடிபணியநேர்ந்திருக்கிறது. பல்கலைக்கழகம் போன்றஉயர் கல்விநிறுவனங்கள் மற்றும் சிவில் நிறுவனங்களின் சுயாதீனதன்மை இராணுவநலன்களுக்குமேலானதுஅல்லஎன்றநிலையே இந்தநாட்டில் காணபப்டுகின்றமையைகாட்டுகின்றது.
அதேவேளை,மறுபுறத்தில் எந்தளவுக்குமக்கள் நலன்களுக்குஎதிரானஅநீதிகள் மற்றும் தவறுகள் நடக்கப்டும்போதுஅவற்றுக்குஎதிராகபோராடும் மனோபாவத்தையும் ஆற்றலையும் எமதுசமூகம் இழந்துநிற்கிறதுஎன்பதையும் குருபரனின் ராஜினாமாஎடுத்துக்காட்டுகின்றது. இதேபோன்றஒருநிலைமைதான் யாழ் பல்கலைக்கழகஉபவேந்தராகப் பதவிவகித்திருந்தபேராசிரியர் ரட்னம் விக்னேஸ்வரன் திடீரெனபதவிவிலக்கப்பட்டபோதும் நடைபெற்றிருந்தது. அவரதுபதவிவிலக்கலுக்குபின்னாலும் இராணுவத்தினரின் கை இருந்தது.
இந்த இரண்டுசம்பவங்களின் போதும் ஏற்பட்டஅநீதிகளுக்குஎதிராகபோராடும் ஆற்றலைபல்கலைக்கழகசமூகம் இழந்தமைக்கும் தமிழ் மக்களின் எதிர்காலத்தைமிகமோசமாகபாதிக்கப்போகும் பிழையானமுன்னுதாரணங்களாக இவை அமைவதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பேமுழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.

இந்த இரண்டுசம்பவங்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தயவில் இருந்தநல்லாட்சிஅரசாங்கத்தின் காலத்திலேயேநடைபெற்றிருந்தன. முன்னாள் துணைவேந்தர் பேராசிரியவிக்னேஸ்வரன் நீக்கப்பட்டுஅநீதி இழைக்கப்பட்டபோதுபொறுப்புமிக்கஎதிர்க்கட்சிதலைவர் பதவியையும் அதேவேளைஅரசாங்கத்துக்குமுண்டுகொடுத்தும் வந்திருந்ததமிழ் தேசிய கூட்டமைப்புஎந்தஎதிர்ப்பையும் காட்டாமல் மறைமுகமாக இந்தநடவடிக்கையைஆதரித்திருந்தன. அதேபோலவே,குருபரன் விடயத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்புதனதுஅரசியல் செல்வாக்கைஒருஅநீதியைஒருதவறைதடுப்பதற்காகபயன்படுத்தவில்லை.
தமிழ் சமூகத்தின் ஆளுமைமற்றும் எதிர்காலத்தின் முதுகெலும்பாககாணப்படும் பல்கலைக்கழகத்தைபலவீனப்படுத்தும் ஜனநாயகவிரோதசெயற்பாடுகளுக்குஎதிராகபோராடுவதைகாட்டிலும் தமிழ் மக்களுக்குஎதிராகபிரஜாவுரிமைநீக்கம்,தரப்படுத்தல்,சிங்களம் மட்டும்,பயங்கரவாததடைசட்டம் ஆகியவற்றை இயற்றிய இலங்கைபாராளுமன்றத்தின் ஜனநாயகத்தைபாதுகாப்பதேதமதுதலையாககொண்டுதமிழ் தேசிய கூட்டமைப்புசெயற்பட்டிருக்கிறது.
கலாநிதிகுருபரன் மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தில் இணையும் நிலைமையும் அதேவேளைதனதுசட்டதொழிலையும் செய்யும் நிலைமையும் விரைவில் உருவாகும் என்றுநம்புகின்றேன்.
இராணுவத்தைவெள்ளையடிப்பதற்காகசிவில் நிர்வாகவேலைகளுக்குள் இளைப்பாறிய இராணுவத்தினரைக்கொண்டுவராதீர்கள் என்றுகடந்தகாலங்களில் பலதடவைகள் நான் வலியுறுத்தியிருந்தேன். இராணுவமயப்படுத்தல் என்பது இந்தநாட்டைமிகமோசமானநிலைக்குகொண்டுசெல்லப்போகின்றது. இதனைஎமதுசிங்களச் சகோதரர்கள் விரைவில் உணர்ந்துகொள்வார்கள்.தமிழ் மக்கள் இராணுவகெடுபிடிகளுக்குப் பழக்கப்பட்டவர்கள். ஆனால் சிங்களசகோதரர்கள் அப்படியல்ல. இராணுவமயம்,பயங்கவாதத் தடைச் சட்டம் அமுலில் இருப்பது, 19வது திருத்தச் சட்டத்தைநீக்குதல் போன்றகாரியங்கள் சொல்லொணாத் துயரங்களைஎமதுசிங்கள் சகோதரசகோதரிகளுக்குக்கொண்டுவரப் போகின்றன. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியைநீங்கள் பதவிக்குக்கொண்டுவந்தால் பாராளுமன்றத்தில் எமதுஉறுப்பினர்கள் மக்கள் சார்பில் உரத்துப் பேசுவார்கள். ஆகவேஎமதுசின்னமானமீன் சின்னத்திற்குவாக்களியுங்கள் என்று கூறிஉங்கள் அமோகஆதரவைஎதிர்பார்த்துஎனதுசிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.
நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
தலைவர்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி