தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கருத்துப் பரப்புரைக் கூட்டம் – கிளிநொச்சி
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
கருத்துப் பரப்புரைக் கூட்டம்
கிளிநொச்சிசந்தைமைதானம்
பொதுக் கூட்டம்
18.07.2020 அன்றுமாலை 5.30 மணிக்கு
தேசியக் கூட்டணியின் தலைவருரை
குருர் ப்ரம்மா….
எனதருமைகிளிநொச்சிவாழ் உறவுகளேமற்றும் சகோதரசகோதரிகளே!
யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதிகிளிநொச்சிமாவட்டத்தையும் உள்ளடக்கியதுஎன்பதைநீங்கள் அறிவீர்கள். எனவேஎமது இரு மாவட்டங்களும் இந்தத் தேர்தலில் ஒருமித்தேபயணம் செய்கின்றோம். தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்றஉறுப்பினர்கள் யாழ்ப்பாணமாவட்டம் மற்றும் கிளிநொச்சிமாவட்டமக்களின் பிரதிநிதிகள் ஆவார்கள். ஆகவேமிகவிரிவானபுலத்தையும் பரந்தஒருமக்கட் கூட்டத்தையும் உள்ளடக்கியேஅவர்களின் செயற்பாடுகள் அமையவேண்டும்.
எனவேதகுந்தவேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதுஉங்கள் கடப்பாடாகஅமைகின்றது. ஆகவேதான்மக்கள் மீதுஅன்பும் கரிசனையும் கொண்டவர்கள்,ஊழலற்றவெளிப்படையானசெயற்பாடுகளைவெளிக்கட்டுபவர்கள்,மக்கள் யாவரையும் ஒரேகண்ணோட்டத்தில்ப்பார்த்துமனிதாபிமானசேவைஆற்றக் கூடியமனோபாவம் உடையவர்கள்என்றுசகலவிதமானநற்குணாதிசயங்களையுங் கொண்டபிரதிநிதிகளையேநீங்கள் யாவரும் சேர்ந்துதேர்ந்தெடுக்கவேண்டும். முன்னர் இருந்தபிரதிநிதிகள் தப்புக்கள் செய்திருந்தால் மீண்டும் அவர்களைப் பாராளுமன்றம் அனுப்பவேண்டும் என்றகடப்பாடுஎவையும் உங்களுக்கில்லைஎன்பதைமறவாதீர்கள். எம்மைப் போன்றஒருபுதியகட்சியின் வேட்பாளர்களுக்குஇம்முறைஒருசந்தர்ப்பம் அளிப்பதில் தவறில்லை.
ஏற்கனவேஉங்களில் பலருக்குநாம் வடக்குமாகாணசபையில் இருந்தபோதுபலசேவைகளைஆற்றிக் கொடுத்துள்ளோம். அந்தநற்செயற்பாடுகளைநாம் உங்களுக்குத் தொடர்ந்தளிக்கஉங்கள் வாக்குகள் எமக்குமிகவும் அவசியம். முன்னர் உங்களைமுதலமைச்சராகச்சந்தித்தநான் இப்பொழுதுஎமதுமீன் கட்சியின் வேட்பாளராகச் சந்திக்கின்றேன். தேர்தல் நடைபெறுகின்றநாளன்றுமுதலில் மீன் சின்னத்திற்குவாக்களித்துஅதன் பின் வாக்கட்டையின் கீழேதரப்பட்டிருக்கும் 10 இலக்கங்களில் மூன்றைத் தேர்ந்தெடுத்துவாக்களிக்கவேண்டும். இம்முறைஎனது இலக்கம் 6.எம் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரதும் பெயரும்,படமும்,இலக்கமும் உங்கள் மத்தியில் கைத் துண்டு மூலம் நாங்கள் விநியோகித்துள்ளோம்.
அடுத்துநான் உங்கள் மத்திக்குஒருசிலமுக்கியவிடயங்களைக் கொண்டுவரகடமைப்பட்டுள்ளேன்.உங்களின் ஊடாகஎமதுதமிழ்ப் பேசும் மக்கள் அனைவருக்கும் இந்தசெய்தி பரவ வேண்டும் என்றுஎண்ணுகின்றேன்.அதாவதுநாளுக்குநாள் எம் மத்தியில் படையினர் தொகைஅதிகரித்துவருகின்றது. எமது ஜனாதிபதிஒருமுன்னையஇராணுவவீரர். எனவேவருங் காலம் எப்படிஅமையும் என்பதில் பலத்தகரிசனைபலர் மத்தியில் இப்பொழுதுஎழுந்துள்ளது. இம்முறைநடத்தவிருக்கும் தேர்தல் சரியாக,முறையாக, ஜன நாயகமுறைப்படிநடத்தப்படுமாஎன்றகேள்விஎழுந்துள்ளது. காரணம் கொரோனாவைச் சாட்டி இராணுவபிரசன்னம் தற்போதுஅளவுக்கதிகமாகவடமாகாணத்தில் ஏற்பட வழி அமைத்திருப்பதேயாகும்.
2019ம் ஆண்டுபெப்ரவரிமாதம் வெளியிடப்பட்டபோர்சார்ந்தசமநிலைஎன்றசர்வதேசபோர் முறைத் திறன் ஆராய்வுநிறுவனத்தின் அறிக்கைப் படி இலங்கையானது 255000 செயலூக்கஅங்கத்தவர்களைக் கொண்டிருந்ததுஎன்றும் அதேகாலகட்டத்தில் பிரித்தானியா146390 அங்கத்தவரையும், இஸ்ரேல் 168550 அங்கத்தவரையும்,பிரான்ஸ் 203910 அங்கத்தவரையும்,சவூதிஅரேபியா 227000 செயலூக்கஅங்கத்தவர்களையுங்கொண்டிருந்தனஎன்றும் கூறுப்பட்டுள்ளது. எனவேஎமதுசிறியநாடுஎந்தளவுக்குபடைபலம் பெற்றுள்ளதுஎன்றுகாணக் கூடியதாகஉள்ளது. கொள்கைஆராய்வுநிறுவனமானயாழ்ப்பாணத்தின் அடையாளம் என்றநிறுவனம் 2017 ஒக்டோபர் மாதத்தில் முல்லைத்தீவில் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவவீரர்களின் தொகை60000 என்றும் இது முல்லைத்தீவில் 2 சாதாரணமக்களுக்குஒருபடைவீரர் என்றவிகிதத்தில் அமைகின்றதுஎன்றும் உலகத்தில் வெகுவாக இராணுவமயப்படுத்தப்பட்டபிரதேசங்களில் முல்லைத்தீவும் ஒன்றுஎன்று கூறியது.
கனடாவில் இருந்துவருகைதந்ததுழாn வுழசலஎன்றநகரபிதாஎன்னுடன் முள்ளிவாய்க்கால் நோக்கிப் பயணம் செய்துவந்தபோதுமுல்லைத்தீவில் காணுமிடமெல்லாம் இராணுவமுகாம்கள் அமைந்துள்ளதைப் பார்த்துஇங்குயுத்தம்முடிவடையவில்லையாஎன்றுகேட்டார். அப்போதுபோரின் பின் 9 வருடங்கள் கழிந்தநிலையில் ஏன் இவ்வளவுபடைமுகாம்கள் என்றகேள்வியைஅவர்முன்வைத்தார்கள். அந்தநிலைமாறவில்லை. மாறாகஇன்னமும் விரிவடைந்துவருவதைநாம் இன்றுபார்க்கின்றோம். உண்மையில் 60000 போர் வீரர்கள் அக்காலகட்டத்தில் முல்லைத்தீவில் நிலைகொண்டிருந்தார்கள்என்று கூறினாலும் இத் தொகை இராணுவப் பிரசன்னத் தொகையேஎன்றும் இலங்கைகடற்படை,ஆகாயப்படையினர் பற்றியதக்கதகவல்கள் கிடையாமையால் படையினர் தொகை60000 ஐயும் மிஞ்சியிருந்ததுஎன்றுகருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது. போர் இல்லாதஒருபிரதேசத்தில் இந்தளவுபடையினர் பிரசன்னத்திற்குக் காரணம் என்னஎன்றகேள்விஎழுகின்றது.
பலசர்வதேசநிறுவனங்கள்,ஐக்கியநாடுகள் போன்றவை இலங்கையில் போரின் பின்னர் படைக் குறைப்பைஏற்படுத்தவேண்டும்என்றுகேட்டபின்னரும் இலங்கைசெவிசாய்க்காது இருப்பதுஏன்?
இவ்வாறானசெயல்கள் மூலம் தமிழ் மக்களின் கோபத்தைத் தூண்டிவிட்டுஅவர்களைஎதிர் வினையில் ஈடுபடவைத்துஅதைச் சாட்டாகவைத்துதமிழர்களைநிர்மூலமாக்கும் திட்டம் எதுவும் உள்ளதாஎன்றுகேள்விஎழுப்பப்பட்டுள்ளது. எவ்வளவுதான் படையினர் உங்களுக்குநன்மைகள் செய்வதாகப் பாசாங்குகாட்டினாலும் அவர்கள் ஒருஅடிப்படைத் திட்டத்தின் அடிப்படையிலேயேவன்னியில் நிலைபெற்றுள்ளார்கள் என்பதைநாம் மறத்தல் ஆகாது.பல இளம் சகோதரசகோதரிகள் வறுமையின் நிமித்தம் இவர்களின் பிடிக்குள் அகப்பட்டுள்ளார்கள் என்பதைஅவர்களேதெரிந்துகொள்ளாதிருக்கின்றார்கள். அவர்களுக்குஒருமாற்றுவாழ்வாதாரத்தைநாம் வழங்கமுன்வரவேண்டும்.
இதுபற்றி கூட்டமைப்பினர் எந்தவிதகரிசனையையும் இதுவரைகாட்டாததுமனதுக்குவருத்தமாகஉள்ளது. இன அழிப்புஎன்பதுதமிழ் மக்களைக் கொல்வதுமட்டும் அல்ல. கலாசார இனவழிப்பு,கல்விசார் இன அழிப்பு,பொருளாதார இன அழிப்பு,கட்டமைப்புக்களின் இன அழிப்பென்றுபல இன அழிப்புக்கள் உண்டு. இவ்வாறானபலவித இன அழிப்புநடவடிக்கைகள் வடகிழக்குமாகாணங்களில் தொடர்ந்துநடந்துகொண்டிருப்பதைஅறிஞர்கள் பலர் வெளிக்காட்டியுள்ளார்கள்.
எம்மைக் கண்காணிக்கும் படையினரில் 99 சதவிகிதமானவர்கள் பெரும்பான்மைசமூகத்தைச் சேர்ந்தவர்கள். எம்முடன் பழகும் பொலிசாரில் 95 சதவிகிதமானவர்கள் அதேபெரும்பான்மையினர். இதன் அர்த்தமென்ன? பெரும்பான்மையினருக்குஎம்மிடையேஎதையும் நிகழ்த்த,எதையும் செய்ய,எதைச் செய்தாலும் அதற்கானபொறுப்புக் கூறலில் இருந்துஅவர்களைவிடுபடச் செய்ய.சட்டப்படிஅதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவேநாடெங்கும் இராணுவசர்வாதிகாரம் வரப் போகின்றதென்றுபெரும்பான்மையினர் அச்சம் கொண்டுள்ளநேரத்தில் வடக்குக் கிழக்கில் அதுஏற்கனவேநடைமுறையில் உள்ளதுஎன்பதேஉண்மை. பலருக்குஇது விளங்கவில்லை.
இராணுவசர்வாதிகாரம் வடக்குக் கிழக்கில் ஏற்படுத்தப் படப்போவதுமற்றையமாகாணங்களில் ஏற்படுத்தப் போகும் அதேகாரணங்களுக்குஅன்று.மற்றைய ஏழு மாகாணங்களிலும் நிர்வாகசீர் திருத்தத்துக்காகவும் ஊழலைஒழிக்கவும்,பொருளாதாரமேம்பாட்டுக்காகவும்,பௌத்தசமயவலுவாக்கலுக்காகவும் சர்வாதிகாரம் பயன்படுத்தப்படலாம்.
ஆனால் வடக்குகிழக்கில் பின்வரும் காரணங்களுக்காகவேசர்வாதிகாரம்பயன்படுத்தப்படலாம் என்றுகொள்ள இடமிருக்கின்றது.
1. தமிழர் காணிகளைக் கபளீகரம்செய்வதற்கு
2. அந்தக் காணிகளில் சிங்களமயமாக்கலைநடைமுறைப்படுத்துவதற்கு
3. ஆனால் அந்தசிங்களமயமாக்குதலுக்குபாவிக்கப் போகும் அவர்களின்யுக்திபௌத்தமயமாக்கலாகும்தமிழரின்பௌத்தகாலத்துதொல்லியல் எச்சங்களைபௌத்தசிங்களஎச்சங்களாகக் காட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றது. கிழக்குமாகாண ஜனாதிபதிசெயலணிஅதற்காகவேநியமிக்கப்பட்டுளது.
இவ்வாறுசெய்தால் என்னநடக்கும்?
1. பிறநாடுகளுக்குத் தமிழர்கள் வெளியேறிச் செல்லலாம்.அல்லதுநாட்டின் மற்றையபிரதேசங்களுக்குச் சென்றுகுடியேறலாம்.
2. தொடர்ந்திருந்து இராணுவஆட்சியின் கீழ் 2ந் தர 3ந் தரபிரஜைகளாகவாழலாம்
3. எதிர்த்துசிறைகளில் அடைபடலாம் அல்லதுதடைமுகாம்களில்; காலத்தைகழிக்கலாம் அல்லது
4. முரண்டுபிடித்துசுட்டுக் கொல்லப்படலாம்.
இவையாவையும் இனப்படுகொலையின் முக்கியகுணாம்சங்கள்.ஒருபிரதேசம் வாழ் மக்களைஅங்கிருந்துபலாத்காரமாகஅல்லது சூழ்ச்சியின் துணைகொண்டுஅப்புறப்படுத்துவது இனப்படுகொலையின் அம்சமாகும்.
இதற்குஎன்னசெய்யலாம்? எமதுகட்சி இவை யாவற்றையும் உணர்ந்தேஅடுத்தகட்டநடவடிக்கைகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றது. எமக்குமக்களின் அனுசரணையும் ஆதரவும் கிடைத்தால் எமக்குஅதிகாரம் தானாகவேகிடைக்கும். அந்தஅதிகாரம் எம்மைஎம் மக்களின் ஈடேற்றத்திற்குஉழைக்கஉதவும். அந்தஅதிகாரம் எம்மைபிறநாட்டுஅலுவலர்களுடன் எம் மக்கள் சார்பில் கலந்துறவாடவழிவகுக்கும். அந்தஅதிகாரம் எமக்குஎதிராகச் செயற்படும் சக்திகளுக்குஎதிராகத் துணிந்துநிற்கஉதவிபுரியும். அந்தஅதிகாரம் எமதுநாட்டுக்குக் கொடைகள் வழங்கும் கொடையாளநாடுகளுடன் பேசஉதவும். எனவேதான் உங்களின் ஆதரவு ஆகஸ்ட் மாதம் 5ந் திகதிதவறாமல் மீன் சின்னத்திற்குப் புள்ளடிபோடுவதன் மூலம் எமக்குத் தரப்படகாப்படவேண்டும் என்றுதாழ்மையுடன் கேட்டுஉங்களிடம் இருந்துவிடைபெறுகின்றேன். நன்றி. வணக்கம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
தலைவர்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி