• July 25, 2020
  • TMK Media

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கருத்துப் பரப்புரைக் கூட்டம் வல்வெட்டித்துறை – 24.07.2020

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
கருத்துப் பரப்புரைக் கூட்டம்
வல்வெட்டித்துறையில்
24.07.2020 அன்றுமாலை 05.00 மணிக்கு
தேசியக் கூட்டணியின் தலைவருரை
குரூர் ப்ரம்மா………………….
என் அன்புக்குரியவல்வெட்டித்துறைவாழ் மக்களே! மற்றும் சகோதரசகோதரிகளே!
மீண்டும் வல்வெட்டித்துறைவருவதில் பெரிதும் மகிழ்வடைகின்றேன். எமதுதேசியப் பட்டியல் உறுப்பினர் திரு.செல்வேந்திராஅவர்களின் வழி நடத்தலில் நடக்கும் இந்தமாபெரும் கூட்டத்தில் பங்குபற்றுவதைஎனதுஅதிர்~;டமாகக் கருதுகின்றேன்.ஆகஸ்ட் 5ம் திகதிக்குமிகச் சொற்பநாட்களேஉண்டு. அன்றுநீங்கள் யாவரும் தவறாதுவாக்களிக்கச் செல்லவேண்டும். அரசாங்கம் ஆங்காங்கேபடையினரைக் குவித்துவைத்துள்ளது. மக்கள் வாக்களிக்கச் செல்லாவிட்டால் அரசாங்கத்திற்குக் கொண்டாட்டம். தமதுஅடிவருடிகளைவெல்லச் செய்துவிடுவார்கள். ஆகவேதவறாதுநேரகாலத்திற்குச் சென்றுமீன் சின்னத்திற்குவாக்களித்துவாருங்கள். முதலில் மீன் சின்னத்திற்கு. புள்ளடியிடுங்கள். அதற்குப் பிறகுஎமதுதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் எந்த மூன்றுவேட்பாளருக்காவதுஉங்கள் விருப்புவாக்குகளைஅளியுங்கள்.

இன்றுமுதற்கண் உங்கள் ஊடாகஎமதுதமிழ் மக்களுக்கு இரண்டுவிடயங்களைக் கூற விரும்புகின்றேன்.ஒன்று இன்றுஎன்னைவந்துசந்தித்துஎன்னிடம் ஆங்கிலத்தில் நான் எழுதியஎனதுஒருபழையகேள்வி–பதில் கட்டுரைசம்பந்தமாகப் பொலிசார் விசாரணைசெய்தமை. இரண்டுஅண்மையில் கௌரவபிரதமமந்திரிஅவர்கள் பிரபாகரன் கேட்டதைத்தான் எழுத்தில் தரமுடியாதுஎன்று கூறியமைபற்றியன.கொழும்புதலைமையகப் பொலிசாரின் பணிப்பின் பேரில் இன்றுபொலிசார் என்னிடம் சென்றவருடம் டிசெம்பர் மாதம் 14ந் திகதிஆங்கிலத்தில் எழுதியகேள்விபதில் கட்டுரைசம்பந்தமாகக் கேள்விகேட்டார். அதைஎழுதியதுநான் தான் என்றுகேட்டுஅதன் உள்ளடக்கம் பற்றிஉரியதொலைக்காட்சிமிகக் கடுமையாகவிமர்சனம் செய்துள்ளதுஎன்றும் பொலிசாருக்குப் பலமுறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

அவர் குறிப்பிட்டகேள்விபதில் என் காரியாலயத்தில் பதிவுசெய்திருந்தபடியால் அதன் பிரதிஒன்றைவந்தவரிடம் வழங்கிஅதைவெளியிட்டதுநான் தான் என்று கூறிஅதன் உள்ளடக்கம் நான் எழுதியவைஎன்றும் அதுபற்றிக் கேள்விகள் வேண்டுமானால் கேட்கலாம் என்றும் கூறினேன். அவர் குறித்தஆவணத்தைத்தான் கொழும்புக்குஅனுப்பப் போவதாகவும் உள்ளடக்கம் பற்றியகேள்விகள் தமக்குத் தரப்படவில்லைஎன்றும் கூறினார். அதனால் தாம் அதைக் கொண்டுபோய் உயர் அதிகாரிகளுடன் பேசித் திரும்பவும் வருவதாகக் கூறினார்.

நான் பதில் அளிக்கஎன்னிடம் கேட்கப்பட்டகேள்விபின்வருமாறு இருந்தது. “மலையகதமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் மற்றையசமூகங்களுடன் கைகோர்த்துச் செல்லும் போதுவடக்குகிழக்குமக்கள் மட்டும் பிரிந்துநிற்பதற்குக் காரணம் என்ன?
அதற்குப் பதிலாகநான் வடக்குகிழக்குத்தமிழ் மக்களின் தனித்தவம் பற்றிக் கூறிநாம் தொடர்ந்துசரித்திரகாலத்திற்குமுன்பிருந்துவடக்குகிழக்கைஎமதுபாரம்பரியவாழ்விடங்களாகக் கொண்டிருப்பதையும்,பௌத்தம்முதன் முதலில் தமிழர்களாலேயேஏற்றுக் கொள்ளப்பட்டதென்றும்,அப்போதுசிங்களமொழிவழக்கத்திற்குவந்திருக்கவில்லைஎன்றும் அம்மொழி கி.பி. 6ம், 7ம் நூற்றாண்டளவில்த்தான் மொழியாகப் பரிணமித்ததுஎன்றும் பலவிடயங்களைக் குறிப்பிட்டிருந்தேன். சிங்களவருக்குதவறானவரலாறுஅவர்கள் பற்றிஅவர்களுக்குபுத்தபிக்குகள் போன்றவர்களால் போதிக்கப்பட்டுவந்துள்ளதுஎன்றும் கூறியிருந்தேன்.

நாங்கள் ஒருபாரம்பரியத்தைநீண்டவரலாற்றைக் கொண்டிருப்பதால் நாம் எமதுவடக்குகிழக்கில் சுயாட்சிகேட்டுள்ளோம் என்றும் எமதுபாரம்பரியமற்றும் மனிதஉரிமைகள் எமக்குக் கையளிக்கப்பட்டால் மற்ற இனங்களுடன் கைகோர்த்துப் பயணிப்பதில் எமக்குஎந்தவிதஆட்சேபனையும் இல்லைஎன்றும்அதில் கூறியிருந்தேன். வந்தபொலிசார் மேலிடத்துடன் தொடர்புகொண்டபின்னர் வருவதாகக் கூறிச் சென்றார்கள்.

நான் எழுத்தில் அனுப்பிசென்றடிசெம்பர் மாதத்தில் பத்திரிகைகளில் வெளிவந்தகேள்விபதில் பற்றி ஏழு மாதங்களின் பின்னர் தேர்தலுக்குமுன்னர் பொலிசாரைஅனுப்பிக் கேட்டதுவிந்தையாகஉள்ளது. தமிழ் மக்களைவெருட்டிப் பணியவைக்கலாம் என்றுஅரசாங்கம் நினைத்தால் தயவுசெய்துஉங்களின் எண்ணத்தைமாற்றிக் கொள்ளுங்கள் என்றுமாண்புமிகு ஜனாதிபதியிடமும் மற்றையவர்களிடமும் கேட்டுவைக்கின்றேன். இவ்வாறானசெயல்களைஎதிர்நோக்கவேண்டிவரும் என்றுதெரிந்துகொண்டேநான் அரசியலுக்குள் நுழைந்தேன். ஒருவேளைசம்பந்தரின் அரசியலைநடத்தியிருந்தால் என்னைஎவரும் கேள்விகேட்கவந்திருக்கமாட்டார்கள். ஆனால் நான் மக்களுடன் சேர்ந்திருப்பவன். எனது இணக்கஅரசியல் மக்களுடன் தான். ஆகவேதப்பாகஎங்களைமதிக்காதீர்கள் என்றுஅரசாங்கத்தினரைநான் கேட்டுக் கொள்கின்றேன்.

அடுத்துமாண்புமிகுமகிந்தஅவர்களின் கூற்றுப் பற்றி. பிரபாகரன் தனிநாடுகோரியதைப் பற்றியும் நாங்கள் சம~;டி கோருவதுபற்றியும் அறியாமலாமகிந்தஅவர்கள் அரசியலில் 50 வருடங்கள் கழித்துள்ளாரா? சட்டக் கல்லூரியில் பிரிவினைபற்றியும் சம~;டி பற்றியும் எவரும் உங்களுக்குஎடுத்துச் சொல்லவில்லையா?
இரண்டாவதாகமகிந்தர் ஒருவிடயத்தைமனதில் வைத்திருக்கவேண்டும். வடகிழக்குத்தமிழ்ப் பேசும் மக்கள் தம்மைதாமேஆள்வதென்பதுஅவர்களுக்குத்தரப்பட்டிருக்கும் ஒருசட்டஉரித்து. சர்வதேசச் சட்டப் படிவடகிழக்குமக்கள் சுயநிர்ணயஉரிமைகொண்டவர்கள். அதைக் கொடுக்கவேண்டியதுமகிந்தரின் கடப்பாடு. தமிழ் மக்களின்உரிமைகளைநாம் தரமாட்டோம் என்றுஅவர் கூறுவதுஒருவிதபோக்கிரித்தனமான கூற்று. அப்படிக் கூறினால்த்தான் சிங்களமக்கள் வாக்களிப்பார்கள் என்றால் பதவிக்குவந்தபின் உங்கள் கூற்றுக்களைமாற்றிக் கொள்வீர்களாஎன்றுஅவரிடம் கேட்கவிரும்புகின்றேன்.
இனப்பிரச்சினைக்குநிரந்தரமானஒருதீர்வினைகாண்பதற்குநாம் முன்வைக்கும் யோசனைகள் சர்வதேசசட்டங்களுக்குஅமைவானதாகவும் முரண்பாட்டுகோட்பாடுகளுக்குஅமைவானதாகவுமே இருக்கின்றன. இவை பல்வேறுசந்தர்ப்பங்களில் வெற்றிகரமாகபிரயோகிக்கப்பட்டநடைமுறையில் இருக்கும் வழிமுறைகளே. தமிழ் மக்களின் அடையாளத்தையும் இருப்பையும் அழிப்பதையேகுறியாகக்கொண்டுசெயற்;படும் இலங்கைஅரசுஒருபோதும் தமிழ் மக்களுக்குதீர்வுஎதனையும் வழங்கப்போவதில்லைஎன்பதையும் சர்வதேசஉத்தரவாதம் இன்றியஎந்தஉடன்படிக்கையையும் இலங்கைஅரசுமதிக்கப்போவதில்லைஎன்பதையும் யுத்தத்துக்குமுந்தியவரலாறும்,யுத்தகாலவரலாறும்,யுத்தத்துக்குபிந்தியவரலாறும் பட்டவர்த்தனமாகவெளிப்படுத்துகின்றன. ஆகவேதான் ஒருநிரந்தரதீர்வினைஏற்படுத்துவதற்குசர்வஜன வாக்கெடுப்பைநடத்துமாறுசர்வதேசசமுகத்தைநாம் கோருகின்றோம். அதேபோல, இறுதியுத்தத்தில் என்னநடந்தது? ஏன் தமிழ் மக்களுக்கு சுய நிர்ணயஉரிமையின் அடிப்படையிலானதீர்வுஅவசியம் என்பவற்றைசிங்களமக்கள் விளங்கிக்கொண்டுநிரந்தரதீர்வுஏற்படுவதற்குஅவர்களும் ஒத்துழைக்கவேண்டும் என்பதற்காகவேசர்வதேசவிசாரணையைநாம் கோருகின்றோம்.
ஆகவே,தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படிஅமையப்போகின்றதுஎன்றவிதியைதீர்மானிக்கும் முக்கியதேர்தலாகஆவணி 5, 2020 திகதிஅன்றையபாராளுமன்றதேர்தல் அமைகிறது. உங்கள் வாக்குகள் தான் அந்தவிதியைஎழுதப்போகின்றன. நீங்கள் எழுதும் விதிவடக்கு- கிழக்கில் ‘மீனாட்சி’ மலர்வதற்கானதாக இருக்கட்டும்.

அன்புக்குரியமக்களே,வல்வெட்டித்துறைமண்ணில் இத்தனை நூற்றுக்கணக்கானஉங்கள் முன் உரையாற்றும்பொழுதுஎனக்குள்ளேஇருக்கும்வீரஉணர்வும் விடுதலைஉணர்வும் அதிகரித்திருப்பதாகஉணர்கின்றேன். இந்தமண்ணுக்குதனியானஒருவரலாறு இருக்கிறது. ஒருமகிமை இருக்கின்றது. ஒருபுனிதம் இருக்கிறது. ஏராளமானசரித்திரவீரர்களைஉருவாக்கியமண் இந்தமண். இவர்களின் வீரத்தை,ஒழுக்கத்தை,கொள்கைஉறுதியைதமிழ் மக்கள் மட்டுமல்லசிங்களமக்கள் கூடஇன்றும் குறிப்பிடுவதைநான் கேள்விப்பட்டிருக்கிறேன். இவர்களுக்குஎதிராகப்போரிட்டஇலங்கையின் உயர் இராணுவதளபதிகள் கூட தமதுமரியாதையைவெளிப்படுத்தி இருக்கின்றார்கள். ஆகவே இந்தமண்ணில் இருந்துஎன் மக்களிடம் ஒருவேண்டுகோளைவிடுக்கின்றேன். தயவுசெய்துதமிழ்த் தேசிய கூட்டமைப்பை இம்முறைபகி~;கரித்துஎமதுகட்சியானதமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குவாக்களியுங்கள். ஆகஸ்ட் 5ந் திகதிமீனுக்குத் தவறாமல் வாக்களியுங்கள் என்றுமீண்டும் கோரிஎன் சிற்றுரையைமுடித்துக் கொள்கின்றேன்.
நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்,வடமாகாணம்
செயலாளர் நாயகம்,தமிழ் மக்கள் கூட்டணி
இணைத்தலைவர்,தமிழ் மக்கள் பேரவை
தலைவர்,தமிழ் மக்கள் தேசிய கூட்டணி