தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம் திருநெல்வேலியில் திறந்து வைக்கப்பட்டது
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தை நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் இன்று காலை நாடா வெட்டி திறந்து வைத்தார்.கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளான சுரேஷ் பிரேமச்சந்திரன் சிவாஜிலிங்கம்,அருந்தவபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.