தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பிரமுகர்கள் தியாகி சிவகுமாரனின் உருவச்சிலைக்கு அஞ்சலி
தமிழ் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் முதல் வித்தாகிய தமிழ் மாணவர் பேரவையின் முன்னோடியான பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினமான இன்று சனிக்கிழமை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உரும்பிராய் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் முக்கியஸ்தர்களான அருந்தவபாலன், சிற்பரன், மீரா அருள்நேசன், ரட்ணகுமார் அகியோருடன் EPRLF கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியோருடன் பலர் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.
முன்னதாக தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் திருகோணமலையில் போட்டியிடும் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரான ரூபன் மற்றும் தமிழ் தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களான ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் மற்றும் தமிழர் சுயாட்சி கழகத்தை சேர்ந்த அனந்தி சசிதரன் ஆகியோர் காலை 8.30 மணிக்கு தியாகி சிவகுமாரனின் உருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.