தமிழ் மக்கள் நம்பிக்கை பொறுப்பினால் அனலைதீவு தெற்கு மீன்பிடித் துறை அழமாக்கப்பட்டு மீனவர்களிடம் கையளிப்பு (சமகளம்)
அனலைதீவு கடற்தொழிலாளர் சங்க வேண்டுகோளிற்கமையவும் ஊர்காவற்துறை பிரதேச செயலாளரின் வழிகாட்டலுக்கமையவும் J/38 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கடற்தொழிலாளர்கள் பயனுறும் விதமாக அனலைதீவு தெற்கில் புனரமைக்கப்பட்ட மீன்பிடி படகுத் துறை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.