திருநெல்வேலி சந்தை வர்த்தகர்கள் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு மகத்தான வரவேற்பு
எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடும் தமிழ் மக்கள் தேசிய கூட்டனியின் பிரச்சார நடவடிக்கையின் ஒரு பகுதியாக நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்று காலை திருநெல்வேலி சந்தை பகுதியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் போது திருநெல்வேலி சந்தைவர்த்தகர்கள் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு மகத்தான வரவேற்பு அளித்தனர். அத்துடன் நீதியரசர் விக்னேஸ்வரனின் வெற்றிக்கு தாங்கள் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை சந்தை பகுதிக்கு அன்றாட தேவை நிமித்தம் வந்த பொதுமக்களும் விக்னேஸ்வரனின் அரசியல் செயற்பாட்டை வெகுவாக பாராட்டினார். இந்நிலையில் எதிர்வரும் பொது தேர்தலில் நீதியரசர் விக்னேஸ்வரனின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.