• August 7, 2020
  • TMK Media

தேர்தலுக்குப் பின்னர் நீதியரசர் கருத்து

தேர்தலுக்குப் பின்னர் நீதியரசர் கருத்து
பாராளுமன்றத்துக்குஎன்னைத்தெரிவுசெய்தவாக்காளர்களுக்குஎனதுஉளமார்ந்தநன்றிகள். உங்கள் எதிர்பார்ப்புக்களைநிறைவேற்றும்வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று கூறிக்கொள்கின்றேன். அதேபோல,தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் மற்றும் அனைத்துவேட்பாளர்களுக்கும் எனதுநன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன். கூட்டணியின் உருவாக்கம்,பங்காளிகட்சிகளின் அர்ப்பணிப்பு,எமக்கிடையேயானபுரிந்துணர்வுமற்றும் ஒற்றுமைஆகியவை இல்லாமல்எனது இந்தவெற்றிசாத்தியம் ஆகியிருக்காது.நாம் தொடர்ந்து கூட்டணியாகச் செயற்படவேஎண்ணியுள்ளோம். இந்தக் கூட்டணியைமேலும் பலப்படுத்திதமிழ் மக்களுக்கானநேர்மையான, ஊழல் அற்ற,தமிழ் தேசியத்தின் அடிப்படையிலானஅரசியல் தலைமைத்துவத்தைவழங்குவோம்.
யாழ்ப்பாணத்தில் குறைந்ததுநான்குஆசனங்களைநாம் எதிர்பார்த்தோம். அதேபோல,வன்னிமற்றும் கிழக்குமாகாணங்களில் குறைந்தது மூன்றுஆசனங்களைநாம் எதிர்பார்த்தோம். ஆனால் அதுநடைபெறவில்லை. இதற்கானகாரணங்களைநாம் ஆராய்ந்துவருகின்றோம்.ஒருகாரணம் எம் மக்களின் ஏழ்மையும்ஏமாற்றப் படக் கூடியமனோநிலையுமாகும்.மற்றவற்றைஅடையாளம் காண்போம்.ஆனால், 6 மாதங்களுக்குள் உருவாக்கப்பட்ட கூட்டணிஎன்றவகையிலும்,அதனுள் கொரோனாக் காலம்உள்நுழைந்ததுஎன்றவகையிலும்கட்சிகள் அல்லது கூட்டணிக்குரியமக்கள் கட்டமைப்புக்கள் உருவாக்கப்படாதநிலையிலும் நாம் பெற்றிருக்கும் வெற்றிமிகுந்தநம்பிக்கைஅளிக்கின்றது. எமதுகொள்கைகள் மற்றும் அவற்றைஅடைவதற்காகநாம் முன்வைத்தஅணுகுமுறைகளைஎமதுமக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆணைவழங்கியிருக்கின்றார்கள். பாராளுமன்றத்துக்குஉள்ளேயும் வெளியேயும் இவற்றைஅடைவதற்குநாம் பாடுபடுவோம்.
தேர்தல் பிரசாரத்தின்போதுதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதுநான் முன்வைத்தஅதேகுற்றச்சாட்டைநான் மீண்டும் நினைவுபடுத்தவேண்டியுள்ளது. நீங்கள் கடந்தகாலத்தில் உரிமைஅரசியலைதவிர்த்துசலுகைஅரசியலைமுதன்மைப்படுத்திமேற்கொண்டசெயற்பாடுகளே இம்முறைதேர்தலில் கணிசமானளவுமக்கள் சிங்களகட்சிகளுக்கும் அரசாங்கசார்புதமிழ் கட்சிகளுக்கும் வாக்களிக்கும் நிலைமையைஉருவாக்கியிருக்கின்றது. இதேதவறைமீண்டும் செய்துஎமது 70 வருடகாலபோராட்டத்துக்குசாவுமணிஅடித்துவிடாதீர்கள்.
வடக்கு- கிழக்குரீதியாகதமிழ்த்தேசிய கூட்டமைப்புபெரும் தோல்வியைசந்தித்துள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் தம்பிபிரபாகரனினால் உருவாக்கப்பட்டகூட்டமைப்புஅழிக்கப்படக்கூடாதுஎன்றும் தவறானவர்களைநீக்கிசரியானவர்களைதெரிவுசெய்து கூட்டமைப்புசரிசெய்யப்படவேண்டும் என்றும் மேற்கொள்ளப்பட்டபிரசாரங்கள் இன்றுசரியானவர்கள் வெளியேற்றப்பட்டுதவறானவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளஒருபாரதூரமானநிலைமையினைஉருவாக்கி இருக்கின்றது. தேர்தல் முடிவடைந்தபின்னர்,ஆசனங்களுக்காக இடம்பெற்றுள்ளசிலஅசிங்கமானசெயற்பாடுகள் கூட்டமைப்பின் எதிர்காலப்பாதையைகட்டியம் கூறிநிற்கின்றன.
எதுஎவ்வாறாக இருந்தபோதிலும்,தெரிவுசெய்யப்பட்டுள்ளஎல்லாதமிழ் பாராளுமன்றஉறுப்பினர்களும், இந்தநாட்டில் எமதுமக்களின் இருப்பு,அடையாளம் ஆகியவற்றைஅழிவில் இருந்துமீட்கும் வகையில் மிகவும் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படவேண்டியஒருஆபத்தானசூழ்நிலையில் இருக்கின்றோம்.முன்னெப்போதும் இல்லாதவகையில்,சிங்களபௌத்தபேரினவாதம் பாராளுமன்றத்துக்குள் அசுரபலத்துடன் புகுந்துள்ளது. பெருமளவில் எமதுபூர்வீகநிலங்கள் அபகரிக்கப்படும் ஆபத்தும் கட்டமைப்புமற்றும் கலாசாரரீதியான இனப்படுகொலைகளும் தீவிரப்படுத்தப்படும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளன. இந்தஅச்சுறுத்தலைதமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும்ஒன்றுசேர்ந்துமுறியடிக்கவேண்டும். எமக்கு இடையேயானபொதுஉபாயங்கள் அவசியம்.ஒன்றுபட்டசெயற்பாடுகள் அவசியம்.
எமதுமக்கள் ஒன்றைபுரிந்துகொள்ளவேண்டும். பௌத்தசிங்களபேரினவாதத்தின் எழுச்சியும் திரட்சியும்,நாம் அவர்களுக்குஅஞ்சிஒடுங்கிஎமது சுய நிர்ணயஉரிமைகளைப்பேசக்கூடாதுஎன்றோவிட்டுக்கொடுக்கவேண்டும் என்றோஆகிவிடக் கூடாது. சர்வதேசரீதியானசுயாதீனவிசாரணைகளைநாம் வலியுறுத்தமுடியாதுஎன்றுஆகிவிடக் கூடாது. நிலஆக்கிரமிப்புக்களுக்குஎதிராகவோஅல்லதுகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கானநீதிக்காகவோநாம் போராடமுடியாதுஎன்றுஆகிவிடக் கூடாது. வடக்கு -கிழக்கு இணைப்பைநாம் வலியுறுத்தக் கூடாதுஎன்று கூடஆகிவிடக் கூடாது.
எமது இனத்தின் நன்மைகருதிதெரிவுசெய்யப்பட்டுள்ளஎமதுபாராளுமன்றஉறுப்பினர்களுக்கு இடையேசிங்களபௌத்தபேரினவாதத்தைஎதிர்கொள்வதற்குகொள்கைஅடிப்படையில் ஒன்றுபட்டஒருங்கிணைந்தசெயற்பாடுகள் மிகவும் அவசியமாக இருக்கின்றது. இதற்குநானும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தயாராக இருக்கின்றோம்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
தலைவர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
செயலாளர் நாயகம் தமிழ் மக்கள் கூட்டணி
முன்னாள் முதலமைச்சர் வடமாகாணம்
07.08.2020