தேர்தல் காலத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதும் கண்துடைப்பு வேலைகளையே கூட்டமைப்பினர் செய்து வருகின்றார்கள் -நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் (சமகளம்)
தற்போதைய தேர்தல் காலத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதும் கண்துடைப்பு வேலைகளையே செய்து வருகின்றார்கள். இவர்கள் நினைத்திருந்தால் நாடாளுமன்றத்தில் இருந்து பேரம் பேசவேண்டிய நேரத்தில் பேரம் பேசி எங்கள் அரசியற் கைதிகளை விடுவித்திருக்கலாம்.அத்துடன் தற்போதும் கூட தொடர்ந்துவரும் அரசாங்கங்கள் தமிழ் அரசியற் கைதிகளைப் பணயக் கைதிகளாகவே வைத்துக் கொண்டு வருகின்றன.