நாங்கள் தோற்கடிக்கப்படவில்லை; இதயங்களில் இன்னமும் சுதந்திர தீபத்தை ஏந்திக்கொண்டிருக்கிறோம்- பாராளுமன்றத்தில் விக்னேஸ்வரன் (சமகளம்)
விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்றும் படையினர் மக்களை பாதுகாத்தார்கள் என்றும் நீங்கள் சொல்வது உண்மையானால் ஏன் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு தயங்குகிறீர்கள்? நீங்கள் சொல்வது உண்மையானால் சர்வதேச விசாரணை மூலம் அது நிரூபிக்கப்பட்டு உங்கள் மீதான விமர்சனங்கள் களையப்படவேண்டும். நீங்கள் அப்போது உங்கள் சர்வதேச அரங்கில் உங்கள் தலையை நிமிர்த்திக்கொண்டு வலம்வரமுடியும். என்று பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் காரசாரமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.