நாட்டின் ஒரு சாராரை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதால்தான் போர்க்கருவிகள், பீரங்கிகள்,தற்பாதுகாப்பு கவசங்களை வாங்கிக்குவிக்கின்றீர்கள் – பாராளுமன்றத்தில் விக்கினேஸ்வரன் (சமகளம்)
2021 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு செலவுக்கு அபரிமிதமான தொகையை ஒதுக்கியுள்ளீர்கள். 2019 ஆம் ஆண்டு பாதுகாப்புக்கு 306 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்த நீங்கள் 2021 ஆம் ஆண்டுக்கு 49 பில்லியன் ரூபாவைக்கூட்டி 355 பில்லியன் ரூபாவை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளீர்கள்.