• July 16, 2020
  • TMK Media

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கருத்துப் பரப்புரைக் கூட்டம் – உடுத்துறை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
கருத்துப் பரப்புரைக் கூட்டம்
உடுத்துறை
16.07.2020 அன்றுமாலை 05.30 மணிக்கு
தலைவருரை
குரூர் ப்ரம்மா……………………………..
அன்புள்ளவடமராட்சிகிழக்குவாசிகளே,மற்றும் என் சகோதரசகோதரிகளே!
மருதங்கேணிப் பகுதிக்குஉலர் உணவுகொண்டுவந்ததற்குப் பிறகு இன்றுதான் உங்களுடன் வந்துஅளவளாவும் சந்தர்ப்பம் கிடைத்தது. எமதுகட்சியானதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சின்னமானமீன் சின்னத்திற்குதவறாமல் வாக்களிக்கவேண்டும் என்றுஉங்களிடம் கோருவதற்காகவே இங்கு இன்றுவந்துள்ளேன். இம் முறைபாராளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது. இனி இணக்கஅரசியலுக்கு இடமில்லை. நாம் கொள்கைரீதியாகஎமதுபாதையைவகுத்துஅதில் நாட்டமுடனும் நேர்மையுடனும் பயணிக்கவேண்டியுள்ளது.
அதன் போதுபலசிக்கல்களுக்குநாம் முகம் கொடுக்கநேரிடும். தற்போதுஎம் மக்களின் மனதில் பயத்தைஊட்டவல்லதாக இருப்பதுஎம் மத்தியில் விரிவுபடுத்தப்பட்டுவரும் இராணுவப் பிரசன்னமே.
பலவேட்பாளர்களின் வீடுகளுக்குபுலனாய்வுஅதிகாரிகள் செல்கின்றார்கள். அங்குஅவர்கள் வேட்பாளர்களின் இதுவரையானபயணங்கள்,இனிப் போகப் போகும் இடங்கள், கூட்டம் நடத்தத்திட்டமிட்டுள்ள இடங்கள் போன்றபலவிபரங்களைகுறித்துக் கொண்டுசெல்கின்றார்கள் என்றுதெரியவருகின்றது. இதனால் வேட்பாளர்கள் பயத்தில் இருக்கின்றார்கள் என்றுகேள்வி. இவ்வாறானசெயல்கள் மக்களைவாக்களிக்கச் செய்யவிடாது.
அதுமட்டுமல்ல. பாதைகளில் பலவீதிச் சோதனைச் சாவடிகள் வந்துகொண்டிருக்கின்றன. ஜுலை 5ந் திகதிதேர்தல் ஆணையகத்தின் கிளிநொச்சிதேர்தல் அலுவலர் மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்தபோது இரு தடவைகள் நிறுத்தப்பட்டார். அவரின் மோட்டார் சைக்கிள் பின் பெட்டியைத் திறக்கஅவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். தேர்தல் ஆணையகஅதிகாரிக்கு இந்தநிலைஎன்றால் பொதுமக்களின் பாடுஎவ்வாறிருக்கும் என்றுயூகிக்கமுடியும். இத்தனைக்கும் இவ்வாறானஅதிகாரம் பொலிசாருக்கேஉண்டு. இராணுவத்தினருக்குக் கிடையாது. அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டபின்னரே இராணுவத்தினருக்கு இவ்வாறானஅதிகாரங்கள் வந்துசேருவன. கொரோனாகாரணத்தினால் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆகவேமக்களும் அதிகாரிகளும் மீண்டும் பயத்தில் வாழத் தொடங்கியுள்ளார்கள். இந்தப் பயம் தேர்தலைப் பாதிக்கக்கூடும்.
2013ல் நான் வடமாகாணசபைக்குதேர்ந்தெடுக்கப்பட்டதேர்தல் காலத்தில் அரசாங்கசார்புவேட்பாளர்களின் நன்மைக்காகஅரசவளங்களைதிட்டமிட்டுதவறானமுறையில் பயன்படுத்தினார்கள். அபிவிருத்திநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக்கூறிதேர்தல் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. பலவேட்பாளர்களின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தலுக்கும் வன்முறைகளுக்கும் ஆளானார்கள். இவ்வாறுதேர்தல் சட்டங்கள் அப்பட்டமாகமீறப்பட்டன. ஜனநாயகம் இந் நடவடிக்கைகளினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. காலைவெகுநேரம் வரையில் மக்கள் வாக்குச் சாவடிகளுக்குப் போகாதுபோவதைத் தவிர்த்தனர். அப்போதுஆட்சியில் இருந்தவர்களின் ஆதரவாளர்கள் சட்டத்திற்குப் பயப்படாமல் குடாநாடுஎங்கும் வலம் வந்தார்கள். வாக்குகளைச் சிதறடித்துதமிழ் மக்கள் சார்பானகட்சிகள் வெற்றியீட்டுவதைத் தவிர்ப்பதேஅவர்களின் நோக்கமாக இருந்தது. அப்படி இருந்தும் மக்கள் மிகச் சாதுர்யமாகவாக்களித்துஎன்னை 133,000க்கு மேலானவாக்குகளைப் பெறச் செய்துவெற்றிஎய்திக் கொடுத்தார்கள். இன்றுஅன்றையஅரசாங்கமேமீண்டும் வந்துள்ளது. அதுவும் அன்று இராணுவத்தைவழிநடத்தியவர் இன்றைய ஜனாதிபதி.
இம்முறைகொரோனாவேறுவந்துவிட்டது. மக்கள் நோய்க்குப் பயந்துவாக்களிக்காது இருந்தால் தமிழ் மக்களின் வருங்காலம் இருள் சூழ்ந்ததாய் ஆகிவிடும். ஏற்கனவேபலவிதங்களில் வடக்குகிழக்கில் சிங்களமயமாக்கலும் பௌத்தமயமாக்கலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தக்ககொள்கைகளுடன் செயலாற்றும்,நேர்மையுள்ள,பயப்படாதவேட்பாளர்களைஎமதுமக்கள் தேர்ந்தெடுக்காவிட்டால் சென்ற 5 வருடங்களில் தமிழ்ச் சமூகம் பாதிப்படைந்ததுபோலவேமேலும் வருங்காலத்தில் பாதிப்படையும். ஆகவேநாங்கள் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்.
நாம் தேர்தல் வாக்களிப்புக்குஒருவாரத்திற்குமுன்னர் இராணுவத்தைமுகாம்களில் முடக்குமாறுகோரவிருக்கின்றோம். சட்டம் ஒழுங்கின் பாதுகாவலராய் பொலிசாரைநியமிக்குமாறும் இராணுவத்தினரைதிரும்பஎடுக்குமாறும் அரசாங்கத்திடம் கோரவிருக்கின்றோம். தேர்தல்களின் போதுசட்டம் ஒழுங்கைப் பேணுவதற்குஆயுதப்படைகளைப் பயன்படுத்துவதைசட்டரீதியாகநியாயப்படுத்தமுடியாது. நாட்டின் உள்ளகப் பாதுகாப்பைஉறுதிப்படுத்துவதற்குபொலிசாருக்குஅரசியலமைப்பு மூலமானகடமைஉள்ளது. அதுவும் தேர்தல்களின் போதுஅவர்களுக்குபலகடப்பாடுகள் உண்டு. ஆகவேபொலிசாரின் செயற்பாடுகளைபலப்படுத்துவதுசம்பந்தமாகவும் கோரவிருக்கின்றோம்.
அத்துடன் தேர்தல் ஆணையகம் சகலபாதுகாப்புபணிகளையும் பொலிசார் மூலம் செய்யவேண்டியஒருகடப்பாடுடையது. இதையும் உரியவர்களுக்குத் தெரியப்படுத்தவிருக்கின்றோம். அதற்காகப் பொலிசார் மீதுமக்களுக்குப்பெருமளவுநம்பிக்கைஉள்ளதாகக் கொள்ளக்கூடாது. தமிழ் மக்கள் மத்தியில் பாதுகாப்புப்படைகள் மீதுபரந்தளவில் அவநம்பிக்கையும் பயமும் இருப்பதுபோலவேபொலிசார் மீதும் அவநம்பிக்கைஉண்டு. ஆகவே இப்பொழுதிருந்தேமக்கள் தம்மைதேர்தல்களுக்குத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தேர்தல் நடத்தப்படும்நாளில் வாக்குரிமை இருக்கும் யாவருமேவாக்குச் சாவடிகளுக்குகொரோனாமுகமூடிஅணிந்துசெல்லவேண்டும். சமூக இடைவெளியைப் பாதுகாத்துக் கொண்டுமீன் சின்னத்திற்குமுதலில் வாக்களிக்கவேண்டும். அதன்பின் 1 தொடக்கம் 10 வரையிலான இலக்கங்களில் உங்களுக்குவிருப்பமான மூன்று இலக்கங்களுக்குஅடையாளம் இடவேண்டும். அரசாங்கசார்புக் கட்சிகளுக்குவாக்கிடுவதால் தமிழ் மக்களின் வருங்காலம் பிரகாசமடையாது. அரசாங்கசார்புக் கட்சிகள் எனும் போதுதமிழ்த் தேசீயக் கூட்டமைப்பும் அதனுள் அடங்கும். மாறாகமேலும் மேலும் தமிழ் மக்கள் வாழ்க்கைசிங்களஆதிக்கத்தினுள் அமிழ்ந்துவிடும்.
கடந்தநான்கரைவருடங்களாகநல்லாட்சிஎன்றபெயரில் உருவானஅரசாங்கத்துடன் இணக்கஅரசியலைச் செய்துவந்த கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளைவிடுவிப்பதற்கானஎந்தவிதமானபலமானநடவடிக்கைகளையும் எடுக்காமல் காலத்தைக் கடத்திவிட்டுதற்போதையதேர்தல்க் காலத்தில் ஜனாதிபதிக்குகடிதம் எழுதும் கண்துடைப்புவேலைகளையேசெய்துவருகின்றார்கள். இவர்கள் நினைத்திருந்தால் பாராளுமன்றத்தில் இருந்துபேரம் பேசவேண்டியநேரத்தில் பேரம் பேசிஎங்கள்அரசியற் கைதிகளைவிடுவித்திருக்கலாம். அத்துடன் தற்போதும் கூட தொடர்ந்துவரும் அரசாங்கங்கள் தமிழ் அரசியற் கைதிகளைப் பணயக் கைதிகளாகவேவைத்துக் கொண்டுவருகின்றன. சிங்களப் போர்க் குற்றவாளிகளைக் கைதில் இருந்துதப்பவைக்க,அவர்களுக்குஎதிராகசட்டநடவடிக்கைகள் நடைபெறாதிருக்க,மேற்படிதமிழ் அரசியற் கைதிகளைப் பணையமாகப் பாவிக்கவேஅவர்களைத் தொடர்ந்தும் சிறையில் வாடவைத்திருக்கின்றார்கள். ஆகவேநாம் தேர்நதெடுக்கப்பட்டால் சட்டரீதியாககட்டமைப்புக்களைஉருவாக்கிசெய்யக்கூடியஎல்லாவழிமுறைகளையும் நாம் பரிசீலித்துநடவடிக்கைகளைமேற்கொள்வோம். அதேசமயம் ஜனாதிபதியுடன் இவர்களின் விடுதலைதொடர்பில் பேச்சுவார்த்தைநடத்துவோம். முக்கியமாகதெரிவுசெய்யப்படும் எமதுபாராளுமன்றஉறுப்பினர்கள், ஐ. நா,சர்வதேசநாடுகள்,சர்வதேசஅமைப்புக்கள், இந்தியஅரசுஆகியவற்றுடன் இது விடயத்தில் தொடர்ச்சியானகலந்துரையாடல்களைநடத்திஅரசாங்கத்தின்மீதுஅழுத்தங்களைப் பிரயோகிப்பதற்குநடவடிக்கைகள் எடுப்போம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் வகையில் கடந்த 11 வருடங்களாகஅவர்களின் உறவுகள் போராடிவருகின்றனர். அவர்களையும் உள்ளடக்கிப் போராட்டங்களைநிலத்திலும் புலத்திலும் விரிவுபடுத்திபோராட்டவடிவங்களையும் விரிவுபடுத்திசெயற்படுவோம். போராடும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைஅறிந்து,நிறைவேற்றக்கூடியதேவைகளைபுலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்துபெற்றுக்கொள்ளநடவடிக்கைஎடுப்போம் என்பதனை இத் தருணத்தில் நான் தமிழ் மக்களாகியஉங்களுக்குக் கூறிவைக்கவிரும்புகின்றேன். நாம் ஒருபலமானகட்சியாகபாராளுமன்றம் செல்வதற்குநீங்கள் உங்கள் வாக்குகளைமீன் சின்னத்திற்கு இடவேண்டும் எனதாழ்மையாகவேண்டிக் கொள்கின்றேன்.
தமிழ் மக்களின் வருங்காலத்தைசெழுமையடையச் செய்யக்கூடியஒரேயொருகட்சிதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியேஎன்று கூறிமீனுக்குவாக்களியுங்கள் என்றுகேட்டுவிடைபெறுகின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்,வடமாகாணம்
செயலாளர் நாயகம்,தமிழ் மக்கள் கூட்டணி
இணைத் தலைவர்,தமிழ் மக்கள் பேரவை
தலைவர்,தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி