நீதியரர் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வடமராட்சிக்கு ‘கிராமிய யாத்திரை’
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் வேட்பாளர்கள் இன்று ஞாயிறுக்கிழமை கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் வடமராட்சியின் பகுதிகளில் ‘கிராமிய யாத்திரை’ என்ற நிகழ்வை மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்தனர்.
இதன்போது வல்லிபுரம் ஆழ்வார் தொண்டர் சபையின் உபசரிப்பு ஒன்று நீதியரசருக்கு வழங்கப்பது. தொடர்ந்து, மணல்காடு தேவாலயதரிசனம், மணல்காட்டு மக்களுடன் சந்திப்பு, நாகர்கோவில் கிராம மக்களுடன் சந்திப்பு ஆகியவை நடைபெற்றன.