• July 5, 2020
  • TMK Media

பருத்தித்துறையில் சிறப்பாக நடைபெற்ற பிரசார கூட்டம்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நெல்லியடி, குஞ்சர் கடை கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிறுக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் யாழ் மாவட்ட வேட்பாளர்களான திருவாளர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா, சிவகுமார், சிற்பரன், அருந்தவபாலன், திருமதி அனந்தி சசிதரன், திருமதி மீரா அருள் நேசன் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மிகச்சிறப்பாக நடந்த இந்தக்கூட்டத்தில் கட்சியின் கொடிப்பாடலும், பிரச்சாரப்பாடலும் இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

கொடி பறக்குது வெற்றிக் கொடி பறக்குது
கொடி பறக்குது மீன் கொடி பறக்குது…
என்ற கொடிப்பாடலும்

மீன் சின்னமே..நம் சின்னமே
வெற்றியின் சின்னமே

எனும் பிரச்சாரப்பாடலும் மக்கள் மனதைக் கவர்ந்தன.