• January 22, 2022
  • TMK Media

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் 18.01.2022ந் திகதிய கொள்கை விளம்பல் பற்றிய நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் உரை

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் 18.01.2022ந் திகதிய கொள்கை விளம்பல் பற்றிய
கருத்துப் பரிமாற்றங்கள் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ந் திகதி மாலை 03 மணிக்கு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் உரை
குரூர் ப்ரம்மா ………….
இந்தக் கருத்துப் பரிமாற்றத்தில் என்னையும் பங்கு பற்ற சந்தர்ப்பம் பெற்றுக் கொடுத்த மன்றின் தலைமைக்கு எனது நன்றியறிதல்கள் உரித்தாகுக!
தமிழர் பற்றி ஜனாதிபதியினிடம் இருந்து நல்லுறவு பற்றிய வாசகங்கள் பலவாறாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரிடம் இருந்து எமக்கு கிடைத்த ஒரேயொரு கோரிக்கை “உங்கள் மக்களை மறந்துவிடுங்கள்! வாருங்கள்! வந்து என்னுடன் சேர்ந்து அபிவிருத்தி வேலையில் ஈடுபடுங்கள்” என்பதே.
2022 ஆண்டுகளுக்கு முன்னர் சிலுவையில் மரித்த ஒருவர் தீர்க்கதரிசி வாசகம் ஒன்றை விட்டுச் சென்றார். “மனிதனானவன் ரொட்டித் துண்டை மட்டும் நம்பி வாழ்வதில்லை” என்பதே அந்த வாசகம். ஜனாதிபதி அவர்கள் இ நாங்கள் எங்கள் உறவுகளைப் புறக்கணித்துஇ எமக்கு வாக்களித்தவர்களைக் கைவிட்டுஇ சிங்கள ஏகாதிபத்தியத்திடம் சிக்கித் தவிக்கும் எம் மக்களை ஏங்கவிட்டுஇ அரசாங்க திணைக்களங்களிடமும் அரச படைகளிடமும் தமது காணி பூமிகளைப் பறிகொடுத்தவர்களை அசட்டை செய்துஇ தன்னுடன் சேர்ந்து எம் மக்களுக்கு ரொட்டி கொண்டு செல்ல அழைக்கின்றார் !
3000 வருடங்களுக்கு மேலான கலாசாரத்தையும் நாகரீகத்தையுங் கொண்ட வடகிழக்கு தமிழர்களை ஒரு ரொட்டித் துண்டைக் கொடுத்து வாங்கிவிடலாம் என்று நினைக்கின்றார். அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுஇ இருக்கும் சொற்ப அரசியல் உரிமைகளையும் பறிகொடுத்துஇ பயமுறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கும் போது அவர்களைப் பட்டினி கிடக்க வைத்து திக்குமுக்காடச் செய்தால் தமது உரிமைகளை ஒரு பானைக் கஞ்சிக்கு அடகு வைக்கக் கூடியவர்கள் எம் மக்கள் என்று நினைக்கின்றார் ஜனாதிபதி அவர்கள். அவரின் அரசியல் அனுபவமின்மை இதிலிருந்து புலப்படுகின்றது.
ஜனாதிபதியின் கொள்கை விளம்பலானது அவர் இதுகாறும் நடந்த எதற்கும் மனவருத்தப்படுவதாகக் காட்டவில்லை. வருங்காலமாவது நல்லிணக்கத்துடன் மலர வேண்டும் என்ற அபிலாசையைக் கொண்டதாவும் அமையவில்லை. தான் இது வரை செய்தவற்றை பெருமையுடன் எடுத்தியம்பியுள்ளார். ஆனால் அவைதான் நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு இன்று இட்டுச் சென்றுள்ளன. எமது நாட்டை ஆபத்து நேரத்தில் உதவிக் காத்தவர்களைக் கூட அவர் பெயர் குறிப்பிட்டு நன்றியறிதல்களைக் கூறவில்லை.
மஞ்சள் நிற ஹ{ஆரென் இனவழித்தோன்றல்கள் அல்லாதவர்களுக்கு நன்றிகளை நவின்றால் அவ்வினத்தவர்க்குக் கோபம் வந்துவிடும் என்று அஞ்சுகின்றார் போலும். இந்நாட்டின் சிறுபான்மையினரைப் பயப்படுத்திப் பீதிகொள்ளச் செய்த ஜனாதிபதியும் அவர் போன்றவர்களும் ஹ{ஆரென் இனத்தவர்களின் சினத்திற்குப் பயப்படுகின்றார்கள் போலும் !
படித்த பண்புடைய சிங்களவர்கள் உட்பட உலகத்தவர் யாவரும் இன்று இலங்கை இவ்வாறாக என்றுமில்லாத ஒரு வங்குரோத்து நிலையை அடைய தீர்க்கப்படாத இனப்பிரச்சனையே காரணம் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். நாட்டின் வருமானத்தில் கிட்டதட்ட ஐந்தில் ஒரு பங்கு இன்று கூட கண்டறியாத பாதுகாப்புக்கும் அரச படைகளைத் திருப்திப்படுத்தவுமே பாவிக்கப்படுகின்றது. 30 வருடப் போரானது எமது பெரும்பான்மையினத் தலைவர்கள் இனப் பிரச்சனையைத் தீர்க்க முன்வராததாலேயே நிகழ்ந்தது. அப்படியிருந்தும் ஜனாதிபதி அவர்கள் இந்நாட்டில் ஒரு இனப்பிரச்சனை இருப்பதை ஏற்க மறுத்து தமிழர்களுக்கு இருப்பது பொருளாதாரப் பிரச்சனை ஒன்றே என்கின்றார். பூனை கண்களை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுபோய்விட்;டது என்று எண்ணுமாம்! அப்படித்தான் உள்ளது ஜனாதிபதியின் நிலை. இன்று நாட்டில் இருக்கும் இன முரண்பாட்டை ஜனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொள்ளாதது அல்லது ஏற்க மறுப்பதுஇ சமாதானமும் செல்வச் செழிப்பும் இந்த நாட்டைப்பல வருட காலங்களுக்குப் புறக்கணிப்பன என்பதைக் கட்டியம் கூறி நிற்கின்றன.
ஒரு கல்லூரி மாணவன் கூட இந்த நாடு இன்று துன்பப்படுவதுஇ இன முரண்பாடுகளை நாங்கள் இதுகாறும் சரிசெய்யாததால்த்தான் என்பதை அறிவான். ஆனால் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் மட்டும் ஒரு சில பொருளாதார ரொட்டித்துண்டுகளை வடகிழக்குத் தமிழ் மக்களின் முன் வீசினால் அவர்கள் திருப்திப்படுவார்கள் என்று நினைக்கின்றார்.
ஒரு நாட்டில் அரசியல் பிரச்சனை என்று ஒன்றிருந்தால் அது பற்றி செய்ய வேண்டிய புத்திசாலித்தனமானதும் விஞ்ஞான ரீதியுமானதுமான செயற்பாடு என்னவென்றால் பிரச்சனை என்னவென்று முதலில் அடையாளம் காணவேண்டும். அதன்பின் அதனைக் கூர்ந்து ஆராய வேண்டும். எதற்காக அது உருவாகியது என்பதைக் கண்டறிந்து இறுதியாக அதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். எமது அன்புக்குரிய ஜனாதிபதி அவர்கள் தற்போது அவர் முன் பூதாகரமாகத் தாண்டவமாடும் இனப்பிரச்சனையை ஏற்றுக் கொள்ள மறுத்துஇ இல்லாத இனப் பொருளாதாரப் பிரச்சனைக்கு விடைகாணப் பார்க்கின்றார்.
தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் பிழையான பொருளாதாரக் கொள்கைகளால் இந்த நாட்டின் சகல இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கு கிழக்கில் பெரும்பான்மையினராக வசிக்கும் தமிழ்ப் பேசும் மக்கள் கூட நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களுடனும் மற்றையவருடனும் பாதிப்புக்கு உள்ளாகி வருந்திக் கொண்டிருக்கின்றனர். எனினும் வடகிழக்கு மக்கள் தங்கள் அரசியல் பிரச்சனையைத் தீர்க்கத் திடசங்கற்பம் பூண்டுள்ளனர். இதை ஜனாதிபதி அவர்கள் ஏற்க மறுக்கின்றார். இது இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு உகந்ததாகாது.
நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் இந்த நாட்டின் தமிழ்ப் பேசும் மக்கள் துயருற்றிருக்கின்றார்கள் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே வடகிழக்குக் காணிகளை அபகரிப்பது என்பது தொடக்கம் பெற்றுவிட்டது. அடுத்து இந்த நாட்டின் செழுமைக்கு உழைத்த இந்த நாட்டின் தமிழ்ப் பேசும் மக்களின் ஒரு பகுதியினர் வாக்குரிமை அற்றவர்கள் ஆக்கப்பட்டார்கள். 1956ல் மிக அருகிய தொகை கொண்ட சிங்களவர் வாழ்ந்த பொதுவாகச் சிங்களம் பேசப்படாத இடங்களில் எல்லாம் சிங்களமொழி திணிக்கப்பட்டது. அப்போதைய அரசாங்கத்தின் பக்கச் சார்பான சட்டங்களுக்கு எதிராகத் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய போது வடமாகாணம் இராணுவ மயமாக்கப்பட்டது. தமிழ் மாணவ மாணவியர் மேற்படிப்புக்கு செல்வதைத் தடுக்கும் விதத்தில் உயர் கல்விப் பரீட்சைகளில் சமன்படுத்தல் முறை கையாளப்பட்டது. அதுமட்டுமல்லாது காலத்திற்குக் காலம் குழந்தைகளை அநியாயமாகக் கொன்றும்இ பெண்களைக் கற்பழித்தும் மற்றவர்களைக் கொன்றுகுவித்தும் நடத்தப்பட்ட கொலைக் கலவரங்கள் ஏராளம். இதன் காரணத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் நாட்டைவிட்டு வெளியேறி புகலிடங்களைத் தேடிக் கொண்டனர். இவ்வாறான செயல்கள் யாவும் தொடர்ந்து வந்த அரசாங்கங்களால் அரங்கேற்றிய போது அவ் அரசாங்கங்கள் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சம்பந்தமான சர்வதேச உடன்பாட்டின் ஏற்பாடுகளையும்இ பொருளாதாரஇ சமூகஇ கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்பாட்டின் ஏற்பாடுகளையும் மீறிவிட்டிருந்தன. முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலை அவற்றின் தொடர்ச்சியே!
தற்போதும் இவ்வாறான சர்வதேச சட்ட ஏற்பாடுகளின் மீறல்கள் வடக்கு கிழக்கில் நடந்தேறிய வண்ணமே இருக்கின்றன. உரிய காணியேற்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல் படையினர் உதவியுடன் அரச திணைக்களங்கள் தனியார் காணிகளைக் கையேற்றல்இ வட கிழக்கு வளங்களை முகவர்கள் ஊடாகவும் கூலிகள் ஊடாகவும் சூறையாடுதல்இ தமது பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து தமிழரை விரட்டிவிட்டு மாகாணங்களுக்கு வெளியில் இருந்து கொண்டுவந்து பிற மக்களைக் குடியேற்றுதல்இ எமது மீனவர்கள் தமது பாரம்பரிய இடங்களில் மீன்பிடிப்பதை தடுத்து அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்தல்இ வடமாகாணத்தில் மட்டும் 65இ000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட அரச காணிகளைக் கையேற்று அவற்றில் படையினர் தொடர்ந்து வசித்து வர இடமளித்தல் போன்ற யாவையுமே மேற்கூறிய சர்வதேச உடன்படிக்கைகளின் ஏற்பாடுகளுக்கு முரணானவை. இவை இன்றும் வழக்கத்தில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
இவை யாவும் நடந்தேறுவதை ஏற்றுக் கொள்ளாமல் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய எங்களை அவருடன் சேர்ந்து பொருளாதார அபிவிருத்தியில் ஈடுபடுமாறு கோருவதுஇ மேற்கூறிய சட்டவிரோதச் செயல்கள் இனியும் கட்டாயமாக வட கிழக்கில் தொடரப் போகின்றன என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. அதுமட்டுமல்லாது கூடிய வேகத்துடனும் விசையுடனும் இவை தொடர இடமுண்டு.
இன்றைய எமது இந்த நிலையை இந்தியா உள்ளடங்கிய சர்வதேச நாடுகள் கவனத்திற்கு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளைஇ தம்மிடையே நிலவும் முரண்பாடுகளைப் புறந் தள்ளி தன்னுடன் பொருளாதார அபிவிருத்தியில் ஈடுபடுமாறு கோருவது சில சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது

போரின் போதும் அதன் பின்னரும் எம் மக்கள் இன்றையநிலையிலும் பார்க்கமோசமானபொருளாதாரசிக்கல்களில் அகப்பட்டுதுயருற்றிருந்தனர். அப்படியிருந்தும் எந்தக் காலத்திலும் எம்மவர்கள் அரசியல் கோரிக்கையைப் பின்தள்ளிபொருளாதாரஅபிவிருத்தியைமுதன்மைப்படுத்தமுனையவில்லை. போரின் பின்னரான 12 வருடகாலத்தில் கூடஎம் ;மக்கள் தமதுஅரசியல் உரித்துக்களைப் பெற்றுக்கொடுக்கமுன்வந்தவர்களைத் தான் தமதுஅதிகப்படியானபிரதிநிதிகளாகதேர்ந்தெடுத்தனர்.அப்படியிருந்தும் எமதுமக்களின் அபிலாசைகளைமதிக்காமல் எம்மைநோக்கி ஜனாதிபதிஅவர்கள் அரசியல் கோரிக்கைளைப் பின்தள்ளுங்கள் பொருளாதாரசெயற்பாடுகளுக்காகஎன்னுடன் சேருங்கள் என்கிறார். அதாவதுநாங்கள் எங்கள் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்குஎதிராகப்பயணிக்கவேண்டும் என்றுகோரிக்கைவிடுத்துள்ளார்.
எமதுமக்களின் பொருளாதாரரீதியிலானபிரச்சனைகளைநாம் அறிவோம.; . கடந்தகாலபிழையானபொருளாதாரகொள்கைகளின் நிமிர்த்தம் தற்போது இந்தநாடுஎங்குசென்றுகொண்டிருக்கின்றதுஎன்பதையும் நாம் அறிவோம். நாங்கள் எம் மக்களைஏற்கனவேதற்சார்புநடவடிக்கை;களில் இறங்கிதமக்குத் தேவையானவற்றில் தன்னிறைவுஅடையஉழைக்குமாறுஅறைகூவல் விடுத்திருக்கின்றோம்.
எனினும் இந்தஅரசாங்கம் எம்மக்கள் மீதுஉண்மையானகரிசனைகொண்டுஅவர்களுக்குதேவையானபொருளாதாரசெயற்திட்டங்களைநடைமுறைப்படுத்தமுன்வந்தால் நாங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்துஎமதுமக்கள் நலன் சார்ந்துசெயற்திட்டங்களைசெயற்படுத்தஎம்மாலானஉதவிகள் அனைத்தையும் செய்வோம்.
ஆனால் எமதுமக்களின் அரசியல் ரீதியானஎதிர்பார்ப்புக்களைபுறக்கணித்து ஜனாதிபதியுடன் சேர்ந்துஒட்டுறவாடிஎம்மக்களின் முதுகில் குத்தநாம் முன் வருவோம் என்று ஜனாதிபதிஅவர்கள் எண்ணக்கூடாது.
நிறைவுசெய்யும் விதத்தில் ஒன்றைக்கூற விரும்புகின்றேன்.இந்நாட்டின் இனங்களுக்கிடையேநல்லுறவைஏற்படுத்தவேண்டியகட்டாயத்தைஉணராது ஜனாதிபதிஅவர்கள் நெடுங்காலத்திற்குதன் கண்ணை மூடிக்கொண்டு; இருக்கமுடியாது. தன் ;எண்ணங்களுக்குமாறாகதற்செயலாகதமிழ் பேசும் மக்களுடன் இனநல்லிணக்கசெயற்பாடுகளில் ஈடுபடவேண்டியகட்டாயம் வந்தால் அவர் செய்யவேண்டியவைபற்றிஒருசிலவார்த்தைகள் கூற ஆசைப்படுகின்றேன்.
அதாவதுஇ அவர் முதலில் தமிழ் பேசும் தமிழ்இ முஸ்லிம் மக்களின் நம்பிக்கையைபெறமுயற்சிக்கவேண்டும் . அதாவதுதனதுகுறிக்கோள்கள் உள்ளெண்ணங்கள் என்னஎன்பதைஎம்மக்களுடன் பகிர்ந்துஅவர்களின் நம்பிக்கையைஅவர் முதலில் பெறவேண்டும்.இதனைஒருசாட்டாகவைத்து தனக்கிருக்கும் தற்போதையபொருளாதாரபிரச்சனைகளில் இருந்துதப்பவும் சர்வதேசநாடுகளில் எழுந்துள்ளமனிதவுரிமைகள் மீதானசர்ச்சைகளைமுடிவுக்குக் கொண்டுவரவும் ஒருஆயுதமாக இதைப்பாவிக்கக்கூடாது.
இனநல்லிணக்கத்தைஉருவாக்கிநாட்டில் சாந்தியும் சமாதானமும் உருவாக ஜனாதிபதியும்அவரின் அரசாங்கமும் உண்மையாகஉழைக்கவிரும்புகின்றார்கள் என்றால் முதலில் பின்வருவனவற்றைஅவர்கள் செய்யவேண்டும்.
1. தொல்பொருள்திணைக்களம்இவனவளத்திணைக்களம்இ வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பலதிணைக்களங்கள் தற்போதுவடக்குகிழக்கில் நடத்திவருகின்ற இன கலாச்சாரஅழிப்பின் மூலம் வடக்குகிழக்குமாகாணங்களின் இனப்பரம்பலைமாற்றிபுதியவரலாற்றை; பிறழ்வாகஎழுதஎத்தனிக்கும் செயற்பாடுகளைஉடனேநிறுத்தவேண்டும்.
2. பயங்கரவாததடைச்சட்டத்தைநீக்கவேண்டும்
3. பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல்கைதிகளைஉடன் விடுதலைசெய்யவேண்டும்
உண்மையானநல்லிணக்கத்தைஏற்படுத்த ஜனாதிபதிக்குமனமிருந்தால் மேற்கண்ட மூன்றுவிடயங்களையும் உடனேசெய்யவேண்டும். அதன்பின்னர்தான் புதியதொருசமஸ்டி அரசியல் யாப்பைஎமது ஜனநாயகசோஷலிசகுடியரசுக்காகவரையவேண்டும்.

நன்றி.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
பாராளுமன்றஉறுப்பினர்.