• July 10, 2020
  • TMK Media

மானிப்பாய் மற்றும் சங்கானை சந்தை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி பிரசாரம்

யாழ்ப்பாணம் மானிப்பாய் மற்றும் சங்கானை சந்தை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் உட்பட பல வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். மக்கள் ஆர்வத்துடன் கூட்டணி வேட்பாளர்கள் பற்றிய விபரங்களை பெற்றுக்கொண்டனர். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தை மற்றும் கடை தொகுதிகளுக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பு நீதியரசர் தலைமையில் தொடர் பிரசாரங்களை நடத்திவருகின்றது.