• August 13, 2020
  • TMK Media

முள்ளிவாய்க்காலில் இருந்து எனது பாராளுமன்ற பயணத்தை ஆரம்பிக்கின்றேன்: அங்கு செய்த சத்தியபிரமானத்தில் விக்னேஸ்வரன்

தமிழில் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் தனது பாராளுமன்ற பயணத்தை முள்ளிவாய்க்கால் மண்ணில் சத்தியபிரமாணத்துடன் ஆரம்பித்துள்ளார்.

முல்லைத்தீவில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதூபிக்கு இன்று வியாழக்கிழமை காலை சென்ற விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் தனது சத்திய பிரமாணம் உரையை நிகழ்த்தினார். அவர் தனது சத்திய பிரமானத்தில் தனது பாராளுமன்ற பயணத்தை முள்ளிவாய்க்காலில் ஆரம்பிப்பதாக குறிப்பிட்டார்.

நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதற்தடவையாக பாராளுமன்றம் செல்லவுள்ள நிலையிலையே முள்ளிவாய்க்காலில் விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.