• May 18, 2020
  • TMK Media

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டனர்

முள்ளிவாய்க்காலுக்கு அஞ்சலி செய்வதற்காக சென்றுகொண்டிருந்தபோது சங்குப்பிட்டியில் வைத்து இன்று காலை திருப்பி அனுப்பப்பட்ட வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் அவரது குழுவினரும் செம்மணியில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற போது அங்கிருந்தும் பொலிஸாரால் மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு திருப்பி அனுப்ப்பபட்டுள்ளனர்.

விக்னேஸ்வரன் உட்பட தமிழ் மக்கள் கூட்டணியின் சுமார் பத்து பேர் வெவ்வேறு வாகனங்களில் அங்கு சென்றுகொண்டிருந்தபோது இன்று காலை 6.30 மணியளவில் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் வைத்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனையடுத்து செம்மணியில் அஞ்சலி செய்வதற்கு அவர்கள் முயற்சித்தபோதும் அதற்கும் பொலிஸாரானுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக , திரும்பிச் சென்ற விக்னேஸ்வரன், தனது கட்சி அலுவலகத்தில் நினைவுகூரல் நிகழ்வை நடத்தினார்.

81-3 (1)83-2