யாருடன் போராடுவதற்காக பாதுகாப்புக்காக 355 பில்லியன் நிதி ஒதுக்கீடு – பாராளுமன்றத்தில் விக்கினேஸ்வரன் கேள்வி (தினக்குரல்)
2021 ஆம் ஆண்டு யாருடன் போராடுவதற்காக 355 பில்லியன் ரூபாவை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளீர்கள். தமிழர்களுடனா, இந்தியர்களுடனா அல்லது மேற்கத்தைய நாட்டவர்களுடனா போராடப்போகின்றீர்கள் என தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.