வடக்கு கிழக்கிற்கு அதிகாரப்பரவலைக் கையளிக்காது மத்தியின் கைப்பொம்மைகளாக கிராமமடட்ட நிறுவனங்களை மாற்றத்திட்டமிடப்பட்டுள்ளது – நீதியரசர் விக்னேஸ்வரன்
வடக்கு கிழக்கிற்கு அதிகாரப்பரவலைக் கையளிக்காது மத்தியின் கைப்பொம்மைகளாக கிராமமடட்ட நிறுவனங்களை மாற்றத்திட்டமிடப்பட்டுள்ளது நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கானதேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கேள்வி பதிலில் மேற்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவருடைய கேள்வி பதிலில் பிவருமாறு அமைந்துள்ளது .
கேள்வி :- இன்று நடந்த “கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கானதேசிய நிகழ்ச்சித்திட்டக்” கூட்டத்தில் நீங்கள சில முக்கியமான கருத்துக்களைஆங்கிலத்தில் எடுத்துரைத்தீர்கள். அவற்றைத் தமிழில் தரமுடியுமா? வேண்டுமெனில்அவற்றிற்கு மேலதிகமாக ஏதேனும் கூற வேண்டுமென்றால் அதனையும்உள்ளடக்கலாம்.
பதில் :- நன்றி. முதலாவதாக சிரேஸ்ட அமைச்சர்கள் சமல் இராஜபக்ச மற்றும்டலஸ் அழகப்பெரும வருவதாக அறிவித்து அவர்கள் வராததைச்சுட்டிக்காட்டினேன். ஒரு வேளை வராததற்குக் காரணம் இந்தக் கூட்டத்திற்குஅவர்கள் போதிய முக்கியத்துவத்தைக் கொடுக்காததாக இருக்கலாம் என்றேன்.காரணம் இந்தக் கூட்டம் தற்போதைய மத்திய அரசாங்கம் தாம் வடக்கில்செய்யவிருப்பதை அறிவிக்கவே நடந்தது. பல மத்திய அரசாங்க செயலாளர்கள்இங்கு வந்து தாம் செய்யப் போவதைக் கூறினார்கள். ஆனால் சொல்வதெல்லாம்
மத்தி செய்வதில்லை. நிதிகளைத் திசைமாறிச் செல்லச் செய்தல். மத்திய அரசாங்கத்தின் அசிரத்தை, எமது அலுவலர்களின் தாமதங்கள் போன்ற பல காரணங்கள் எமது செயற்றிட்டங்கள் தாமதமாகக் காரணிகளாக இருந்திருக்கின்றன.ஆகவே இந்தக் கூட்டத்தின் குறிக்கோள் என்ன என்ற கேள்வி எழுகின்றது என்றேன். மத்திய அரசாங்கத்தின் ஒரு தலைப்பட்சமான குறிக்கோள்களைஎங்களுக்குத் தெரிவிக்கத்தான் இந்தக்கூட்டம் நடந்தது போல் தெரிகிறது.
எம்முடன் கலந்தாலோசிக்காமல் எமக்கு என்ன செய்யப் போகின்றோம் என்று
கூறியுள்ளீர்கள் என்றேன்.
அடுத்து அரசியல் யாப்பின்படி மத்திய அரசாங்கம் மாகாண அரசாங்கம்,உள்ளுராட்சி ஆகியன ஆட்சிக்குப் பொறுப்பாக இருக்கின்றன. மூன்றுஅடுக்குகளில் அவையுள்ளன. மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கம்ஆகியவற்றின் அதிகாரங்கள் அரசியலல் யாப்பி ல் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.உள்ளுராட்சி சபைகள் மாகாண அரசாங்கத்தின் ஊடாகவே மத்தியால் கையாளப்பட வேண்டும். அப்படி இல்லாமல் நேரடியாக மத்தியானது உள்ளுராட்சி
சபைகளுடன் நேரடித்தொடர்பு வைக்கப் பார்ப்பது எமக்கு சந்தேகத்தைஎழுப்புகின்றது. மாகாண சபையைப் புறந்தள்ளி உள்ளுராட்சி சபைகளுடன்தொடர்பு வைக்க அரசாங்கம் எண்ணியுள்ளதா? அப்படியானால் தேர்தல் நடத்தாமல் மாகாணசபைகளை இல்லாமல் ஆக்குவது தான் உங்கள் கொள்கையா? இது பற்றி உத்தியோகபூர்வமாக நீங்கள் உங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றேன்.இன்று மத்தியால் வடக்கில் செயற்படுத்தப்படப் போகும் சில திட் டங்கள் குறிப்பிடப்பட்டன. முக்கியமாக நாடு பூராகவும் செய்யவிருப்பதையே செயலாளர்கள்
கூறினார்கள். அவர்கள் முழுநாட்டின் ஒரு சிறிய பகுதியாகவே எம்மைக் கருதி தமதுகருத்துக்களை வெளியிட்டார்கள்.
இதிலிருந்து மத்தியானது வடக்கு கிழக்கை முழுமையாகத் தாமே பொறுப்பேற்று நடத்தத் திட்டமிட்டிருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது. முன்னர் ரணில் கூட “கிராம உதயம்” என்றோ இன்னொரு பெயர் கொண்டோ உளளுராட்சி சபைகளுடன் நேரடியாக உறவுகொள்ள முயன்றார். மாகாணசபைக்கு ஊடாக நடக்க வேண்டிய காரியங்களை மத்தியானது தாமாக நேரடியாக செய்யவிழைவது மாகாணசபைகளை ஓரங்கட்ட எடுக்கப்படும் நிகழ்வாகவே நாம் காண்கின்றோம் என்றேன்.
வடக்கு கிழக்கிற்கு அதிகாரப்பரவலைக் கையளிக்காது மத்தியின் கைப்பொம்மைகளாக கிராமமடட்ட நிறுவனங்களை மாற்றத்திட்டமிடப்பட்டுள்ளது போலத் தெரிகின்றது என்றேன்.இதற்கு சிங்களத்தில் பதில் அளித்த அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ ஐ.தே.க. தான் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாது இருந்து வந்தது. நாம் அப்படியில்லை என்றார். ஆனால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவோம் என்று கூறவில்லை.மேலும் அபிவிருத்தியே எமது கரிசனை. இங்கு அரசியல் பேசாது அபிவிருத்தி பற்றிப் பேசுவோம் என்றார்.அதற்கு நான் அபிவிருத்தி என்ற போர்வையில் தானே மகாவெலி அதிகாரசபை உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று வரையி ல் ஒரு சொட்டு மகாவெலி நீர் எமக்குக்கிடைக்கவில்லை. இனியும் கிடையாது என்றே எமது எந்திரிகள் கூறுகின்றார்கள்.
அபிவிருத்தி என்ற போர்வையில் அரசியல் நடத்தப்படுவதை நாம் அறிவோம் என்றேன்.எமக்குத் தெரிவிக்காமல் யாழ்மாவட்டம் முழுவதையும் ருனுயுன் கொண்டுவரநடவடிக்கைக எடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டு உள்ளுராடிசி சபைகளின்அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படப் போகின்றன என்ற கருத்தையும் முன்வைத்தேன்.மேலதிகமாக எனது கருத்து – அவசர அவசரமாக இந்தக் கொரோனாக் காலத்தில்இந்தக் கூட்டத்தை நடத்தி மத்திய அரசாங்கம் எதனை வடக்கில்
செய்யவிருக்கின்றது என்று எங்களுக்குத் தெரிவிப்பது, இனிமேல் தாம் நினைத்ததை இங்கு செய்யப் போகின்றோம் என்றுகட்டியம் கூறுவது போல் தென்படுகின்றது. வடகிழக்கு மக்கள் தம்மைத்தயார்ப்படுத்த வேண்டிய காலம் உதயமாகிக் கொண்டிருக்கின்றது.