• March 21, 2021
  • TMK Media

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் நிலம் அபகரிக்கப்படுவதானது தமிழ் இனம் அழிக்கப்படுவதற்குச் சமனானது – நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் (சமகளம்)

வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு, ‘தமிழர் தாயகத்தை இழத்தல்’ என்ற தலைப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த மாநாடு இலங்கை நேரப்படி நேற்று சனிக்கிழமை மாலை சூம் தொடர்பாடல் ஊடாக இடம்பெற்றிருந்தது.இதன்போது, உரையாற்றிய சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் நிலம் அபகரிக்கப்படுவதானது தமிழ் இனம் அழிக்கப்படுவதற்குச் சமனானது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், நில அபகரிப்பு ஒரு இனப் படுகொலையாகவே பார்க்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.