• May 23, 2020
  • TMK Media

வெற்றிகரமாக நடைபெற்ற ‘ பயன்தருமர நடுகை’ திட்டம்

மே 18 நினைவாக தமிழ் மக்கள் கூட்டணியின் பயன்தரு மரநடுகை திட்டம் வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் வெற்றிகரமாக நடைபெற்றது. மே 16, 17, 18 ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளின்போது ஆயிரக்கணக்கான பயன்தரு மரங்களான தென்னை, எலுமிச்சை, மாதுளை போன்ற மரங்கள் நாட்டப்பட்டன. பொதுமக்கள் பெருமளவு ஆர்வத்துடன் இந்த திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்கள், பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் ஆகியோர் மாவட்ட ரீதியாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தார்கள்.

பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற இந்த நிகழ்வுகளின் சில காட்சிகளை கீழே காணலாம்.