• July 26, 2020
  • TMK Media

சமஸ்டிக்கும் தனிநாட்டுக்குமான வித்தியாசம் கூட மஹிந்தவுக்கு தெரியாதா விக்னேஸ்வரன் சாட்டை

மகிந்தர் ஒரு விடயத்தை மனதில் வைத்திருக்க வேண்டும். வடகிழக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் தம்மை தாமே ஆள்வதென்பது அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் ஒரு சட்ட உரித்து. சர்வதேசச் சட்டப்படி வடகிழக்கு மக்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள். அதைக் கொடுக்க வேண்டியது மகிந்தரின் கடப்பாடு. தமிழ் மக்களின் உரிமைகளை நாம் தரமாட்டோம் என்று அவர் கூறுவது ஒரு வித போக்கிரித்தனமான கூற்று. பிரபாகரன் தனி நாடு கோரியதைப் பற்றியும் நாங்கள் சமஷ்டி கோருவது பற்றியும் அறியாமலா மகிந்த அவர்கள் அரசியலில் 50 வருடங்கள் கழித்துள்ளாரா? சட்டக் கல்லூரியில் பிரிவினை பற்றியும் சமஷ்டி பற்றியும் எவரும் உங்களுக்கு எடுத்துச் சொல்லவில்லையா? என சாட்டையடி கொடுத்துள்ளார் தமிழ் ம