• July 30, 2020
  • TMK Media

திருகோணமலையை பாதுகாக்கும் வல்லமையை தலைவர் தந்திருக்கிறார் – எவரும் பயப்பட தேவை இல்லை என்கிறார் ரூபன்

2020 ஆம் ஆண்டு திருகோணமலையின் தமிழ் பிரதிநிதித்துவத்தை சம்பந்தன் ரூபனிடம் பறிகொடுக்கட்டும்.

ரூபன் ஒரு சுத்த தமிழன்- திருகோணமலையை யார் பார்ப்பார்கள் என்று அவர் பயப்பட தேவை இல்லை. நான் பார்ப்பேன்.

திருகோணமலையை பாதுகாக்கும் வல்லமையை தலைவர் எனக்கு தந்திருக்கிறார். 3 முறை திருகோணமலையின் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்திருக்கிறேன். 9 வருடங்கள் வடக்கு -கிழக்கில் பொறுப்பாக இருந்திருக்கிறேன்.

திருகோணமலையை என்னால் பாதுகாக்க முடியும் என்ற சுய நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆகவே, எவரும் திருகோணமலை காணாமல் போகப்போகின்றது என்று எவரும் பயப்படத்தேவை இல்லை.
திருகோணமளியின் 3/5 நிலத்தை நாம் பறிகொடுக்க சம்பந்தனும் ஒரு காரணம். ஆகவே, நான் போனால் திருகோணமலை போய்விடும் என்று சம்பந்தன் நீலிக்கண்ணீர் வடிக்கக்கூடாது.
2001 ஆம் ஆண்டு சம்பந்தனின் வெற்றிக்கு நான் ஆற்றிய முக்கிய பங்களிப்பே 2020 ஆம் ஆண்டு வரை அவர் திருகோணமலையில் நிலைத்திருக்க காரணம். ஆனால், இன்று திருகோணமலையை பாதுகாக்க நான் அவரை எதிர்த்து போட்டியிடவேண்டிய நிலையில் இருக்கிறேன்.
2001 ஆம் ஆண்டு சம்பந்தனுக்கு வாக்களிக்க உங்களிடம் வேண்டுகோள்விடுத்த நானே இன்று சம்பந்தனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்கின்றேன் என்றால் அதன் தாற்பரியத்தை விளங்கிக்கொள்ளுங்கள்.