காணொளி பதிவுகள்
இந்தியாவின் தேசிய பாதுகாப்பை இலங்கைத் தமிழர்களே உத்தரவாதப்படுத்துவார்கள்: விக்னேஸ்வரன் எம்.பி!
இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்” என்ற தலைப்பில் ஒக்டோபர் 4 ஆம் திகதி NEW India Forum ஒழுங்கு செய்த காணொலி மூல கருத்தரங்கில் விக்னேஸ்வரன் அவர்கள் ஆற்றிய சிறப்புரை
திருகோணமலையை பாதுகாக்கும் வல்லமையை தலைவர் தந்திருக்கிறார் – எவரும் பயப்பட தேவை இல்லை என்கிறார் ரூபன்
2020 ஆம் ஆண்டு திருகோணமலையின் தமிழ் பிரதிநிதித்துவத்தை சம்பந்தன் ரூபனிடம் பறிகொடுக்கட்டும்.
ரூபன் ஒரு சுத்த தமிழன்- திருகோணமலையை யார் பார்ப்பார்கள் என்று அவர் பயப்பட தேவை இல்லை. நான் பார்ப்பேன்.
திருகோணமலையை பாதுகாக்கும் வல்லமையை தலைவர் எனக்கு தந்திருக்கிறார். 3 முறை திருகோணமலையின் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்திருக்கிறேன். 9 வருடங்கள் வடக்கு -கிழக்கில் பொறுப்பாக இருந்திருக்கிறேன்.
எமது தம்பிமார் போர் ரீதியாக கூட தன்னிறைவு காண முனைந்தார்கள்
தற்சார்பு என்பது எங்கள் மீது எங்களுக்கு இருக்கும் நம்பிக்கை. இந்த நம்பிக்கை இருந்தால் தான் எமக்கு தன்னிறைவு வரும். எங்களுடைய தம்பிமார்கள் 30 வருடம் எங்களுக்குள் இருந்து ஒரு இயக்கத்தை நடத்திவந்த வாழ்க்கையை பாருங்கள். தண்நிறைவு காண்பதற்கு எத்தனை வேலைகளை செய்தார்கள்? போர் ரீதியாக கூட தன்னிறைவு காண முனைந்தார்கள்.
இனியும் தாமதம் வேண்டாம்; தலையிடுவது உங்கள் தார்மீக கடமை- சர்வதேசத்திடம் விக்னேஸ்வரன் வேண்டுகோள்
நாகரிகம் வளர்ச்சியடைந்து, சர்வதேச மனித உரிமை சட்டங்கள், பிராமணங்கள் என்பவை நிறுவனமயபப்டுத்தப்பட்டு, தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இந்த 21 ஆம் நூற்றாண்டில் உலகின் மூத்த குடிகளில் ஒன்றான தமிழ் இனம் இலங்கையில் திட்டமிட்ட இனஅழிப்புக்கு உட்படுத்தப்பட்டு இருந்த இடம் தெரியாமல் அழியும் நிலைமையை இந்தியா, சர்வதேச சமூகம் மற்றும் ஐ. நா ஆகியவை இனிமேலும் அலட்சியமாக பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்திருக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் யுத்தம் நடைபெற்றபோது எமது பிரச்சினையில் தலையீடுசெய்த நாடுகளும், மத்தியஸ்தம் செய்ய முன்வந்த நாடுகளும் இன்று யுத்தம் முடிவடைந்த பின்னர் எம்மை ஒரு ஆபத்தான நிலைமையில் கைவிட்டுவிட்டுவிட்டு ஒதுங்கிநிற்பதன் மூலம் பெரும் தவறை இழைத்துள்ளன என்றும் விமர்சனம் செய்துள்ளார்.
வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிறுக்கிழமை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டுவைத்து உரையாற்றியபோதே விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுவருகின்ற நிலையிலும், எட்டப்பட்ட எல்லா ஒப்பந்தங்களுமே அரசாங்கங்களினால் தொடர்ச்சியாக கிழித்து எறியப்பட்டுவருகின்ற நிலையிலும், இனப்பிரச்சினை என்ற ஒன்றே இந்த நாட்டில் இல்லை என்று தற்போதைய அரசாங்கம் குருட்டுத்தனமான பொறுப்பற்ற கருத்துக்களை முன்வைத்துவரும் நிலையிலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினை அடையும்பொருட்டு ஒரு கருத்துக்கணிப்பை நடத்துமாறு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் சர்வதேச சமூகத்தினை கோருவதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
சமஸ்டிக்கும் தனிநாட்டுக்குமான வித்தியாசம் கூட மஹிந்தவுக்கு தெரியாதா விக்னேஸ்வரன் சாட்டை
மகிந்தர் ஒரு விடயத்தை மனதில் வைத்திருக்க வேண்டும். வடகிழக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் தம்மை தாமே ஆள்வதென்பது அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் ஒரு சட்ட உரித்து. சர்வதேசச் சட்டப்படி வடகிழக்கு மக்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள். அதைக் கொடுக்க வேண்டியது மகிந்தரின் கடப்பாடு. தமிழ் மக்களின் உரிமைகளை நாம் தரமாட்டோம் என்று அவர் கூறுவது ஒரு வித போக்கிரித்தனமான கூற்று. பிரபாகரன் தனி நாடு கோரியதைப் பற்றியும் நாங்கள் சமஷ்டி கோருவது பற்றியும் அறியாமலா மகிந்த அவர்கள் அரசியலில் 50 வருடங்கள் கழித்துள்ளாரா? சட்டக் கல்லூரியில் பிரிவினை பற்றியும் சமஷ்டி பற்றியும் எவரும் உங்களுக்கு எடுத்துச் சொல்லவில்லையா? என சாட்டையடி கொடுத்துள்ளார் தமிழ் ம